காயாத்ரி பீடம் ( ஹம்பி)

காயாத்ரி பீடம் ( ஹம்பி)
ஒவ்வொரு தேவாங்கரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது வரலாற்று பிரசித்திபெற்ற ஹம்பிக்கு சென்று வறவேண்டும். கர்னாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு செல்ல பெங்களூரிலிருந்து 350 கிலோமீட்டர் ரயிலிலோ பஸ்சிலோ ஹோஸ்பெட் சென்று அதன்பின் 13 கிலோமீட்டர் ஹம்பிக்கு செல்ல வேண்டும்
துங்கபத்திரா நதிக்கரை ஓரம் ஸ்ரீ காயத்ரி பீடம் அமைந்துள்ளது. நம் குருஜி அவர்கள் பல லட்சம் ருபாய் செலவில் அழகான மடம் கட்டி பூங்கா, வண்ணவிளக்குகள் அமைத்துள்ளார். விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த ஹம்பியில் கல்லிலே கலைவண்ணம் செய்த பிரமாதமான அரியநினைவுச் சின்னங்களைக் காணலாம். கோட்டை கொத்தளங்கள், விருப்பாச்சேசுவரர் ஆலயம் முதலியவை முக்கியமானவை.
சுமார் 200 ஆண்டு காலம் ஜகத்குரு இல்லாத காரணத்தால் தொல்பொருள் துறை காயத்ரி பீடத்தை தன்வசம் எடுத்துக்கொண்டிருந்தது. பட்டாபிஷேகத்துக்கு பின் நமது அனுபவத்திற்கு வந்த குருபீடத்திலுள்ள ஸ்ரீ ராமலிங்கர், ஸ்ரீ சௌடேஸ்வரி, ஸ்ரீ காயத்ரி ஆகிய தேவதைகளுக்கு தினந்தோறும் பூஜை நடந்து வருவதோடு நமது குருஜி அவர்கள் ஒரு நாளிக்கு 3 மணி நேரம் நம் குல மக்களுக்காக தியானித்து வருகிறார். குருபீடத்தில் ஆண்டு முழுவதும் நவராத்திரி, கார்த்திகை தீபம், குருபூர்ணிமா, பட்டாபிஷேகவிழா போன்ற பல விழாக்கள் நடந்து வருகின்றன.
முத்துசங்க மகா முனிவர் தவம் செய்த மழை மல்லப்பா மலைக்குகை ரெய்ச்சூர் மாவட்டம் கங்காவதியில் உள்ளது. அது ஹும்பியிலிருந்து கமலாபுரம் வழியாக 30 மைல் தூரத்தில் உள்ளது. நமது தேவாங்க தர்மத்தை நிலைநாட்டிய பணிகௌட அவர்களும் முத்து சங்க மாமுனிவரும் வாழ்ந்து வந்த சிறப்புமிக்க இடமாகும். இக்குகையில் முத்துசங்க முனிவர் நட்ட அரசமரம் காண வேண்டிய காட்சியாகும். இக்குகையிளலிருந்து ஹம்பி காயத்ரி பீடத்துக்கு செல்ல வழியிருந்ததாகவும் தற்போது அடைப்பட்டுவிட்டடாஹவும் கூறப்படுகிறது.
நமது ஜகத்குரு அவர்கள் பிறந்த ஊரான கம்பளி மடமும் அங்குள்ள புராதன காயத்ரி சிலையும் காணத்தகுந்த காட்சிகளாகும்.
http://ya-zasnyal.ru/catalog/avtomobilnye-videoregistratoryhttp://pkp-partner.ru/raschet-bankovskogo-vklada.php