தேவலர் வரலாறு

தேவலர் வரலாறு
(வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி)
கருணை கனிந்த அவதாரம்

பிரம்ம தேவனால் உலக சிருஷ்டி நடைபெற்றது. தேவர், மானுடர், நாகர் எனத் திரிலோக வாசிகளும் ஆடை இல்லமால் இருந்தனர். தேவர் முதல் அனைவரும் வெட்கம் கொண்டு இருந்தனர். வைதிக காரியங்கள் ஏதும் நடைபெறவில்லை. வைதிக கரு மங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் பூணூல். அந்த பூணூல் இல்லாத்தால் யாகாதி காரியங்கள் நடைபெறவில்லை. இக்குறையைத் தீர்த்துக் கொள்ள விரும்பினர் அனைவரும். பிரம்மன் முதலான தேவர்கள் திருக்கயிலை மலையைச் சென்று அடைந்தனர். அங்குக் கொலு வீற்று இருந்த சிவபெருமானை வணங்கினர். கண்ணுதல் பெருமானே போற்றி ! போற்றி ! பஞ்சாக்கர மூர்த்தியே ! போற்றி ! எண்ணுதற்கெட்டா நிலையனே ! போற்றி ! போற்றி ! எனப் போற்றி இசைத்தனர்.

எம்பெருமானே ! ‘’ஆடையற்று இருந்தலால் மானம் இழந்து இருக்கிறோம். உபவீதம் (பூணூல்) இன்றி இருப்பதால் வைதிக கருமங்களுக்கு உரிமை இல்லாமல் தெய்வீகம் இழந்து இருக்கின்றோம். பிராமணத் சித்தக்காக பிரம்ம சூத்திரம் (பூணூல்) வேண்டும்; மானம் காத்துக் கொள்ள ஆடை வேண்டும். ஆடையும் பிணூலும் வழங்க ஓரு மகா புருஷனைத் தருதல் வேண்டும்.

உலகினை எல்லாம் படைக்கும் ஆற்றல் பெற்றவன் பிரம்மதேவன். பிரம்மன் பூணூலையும் ஆடையையும் உருவாக்கச் சக்திற்றவன்; எனவே பெருமானே ! எமக்கு நிரந்தரமாக ஆடையும், பூணூலும் கிடைக்க அருள் பாலிக்க வேண்டும்’’ – என வேண்டினர் தேவர்கள் அனைவரும்.

சிவபிரான் சுயம்புவான தேவாங்க பிரம்மனைத் தியானித்தார். தேவலன் என்னும் பரம்பொருள் சிவபிரானின் இதய கமலத்தில் இருந்து தோஜோமயான பேர் ஓளிப் பிழம்பாய் அவதரித்தது. அந்த ஓளி வெள்ளம் மனம், வாக்குக், காயங்களைக் கடந்த்தாக கடந்ததாக விளங்கியது. எல்லோரும் காண அவ் ஓளி வெள்ளம் ஓரு திருமேனியைத் தாங்கியது.

“மான்தோல், தண்டு, கமண்டலம், சடை, பவிதரம், திருநீறு, உருத்திராட்சம், கங்கணம், சகல வைதிக கர்மங்களுக்கும் சாதகமான யஞ்ஞோப வீதம் (பூணூல்) ஆகியன தரிசித்துக் கொண்டு விளங்கினார். தன் தேஜஸால் கோடிசூர்ய பிரகாசத்தையு தோற்கச் செதார். சத்திய விரதத்தில் திடசித்தம் கொண்டு விளங்கினார். அவர் கீர்த்தி எங்கும் பிரகாசமாக விளங்கியது. அம்மகாபுருஷரே தேவல மகரிஷியாவார். அவர் திரு மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி, சகலஜகத் காரணகர்த்தா மானுட வடிவம் தாங்கினார், அப்பெருமான்.

துஷ்ட விக்ரகம், சிஷ்டபரிபாலனம் செய்ய ஏழு அவதாரங்கள் மேற்கொண்டார்.

சிவபிரான் வேண்டுகோளின்படி திருப்பாற்கடல் சென்றார். அனந்த சயனா! பத்மநாபா ஓ ! எனத்துதித்து நின்றார். ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைத் தரிசித்தார். அவரிடம் அவர் நாபிக் கமல நூலைப் பெற்றுக் கொண்டு வந்தார். அந்த நூலால் ஆடைகள் நெய்தார். அந்த ஆடைகளைத் திரிமூர்த்திகள் முதலான தேவர்களுக்கும், அவர்தம் தேவிமார்களுக்கும், பூலோக மானிடர்க்கும், பாதாளலோக நாகர்களுக்கும் வழங்கி அவர்தம் மானத்தைக் காப்பாற்றினார்.

மீதி இருந்த நூலைக் கொண்டு பூணூல், கடிசூத்திரம், கங்கணசூத்திரம், சாஜ்ஞாத சூத்திரம், திருமாங்கல்யம் என்னும் பஞ்ச சூத்திரங்களைச் செய்து மந்திரோபதேசத்துடன் அனைவருக்கும் வழங்கினார்.

கடிசூத்திரம் – அரைஞாண் கயிறு

கங்கனணசூத்திரம் – வைதிக காரியங்களில் வலக்கையில் கட்டப்படுவது

சஜ்ஞாத சூத்திரம் – கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலத்தில் சுகப் பிரசவத்திற்காக ஸ்ரீசெளடேஸ்லரியைத் தியானித்து வயற்றில் கட்டப்படும் கயிறு.

வஸ்திரங்களை வழங்கியதால் ” வஸ்திரகர்த்தன்” எனவும், சூத்திரங்களை வழங்கியதால் “சூத்திரகர்த்தன்” எனவும், போற்றப்பட்டார். இத்தேவல மகரிஷிக்குத் தேவாங்க மகரிஷி எனவும் திருநாமம் உண்டு. இவர் வழிவந்தவரே தேவாங்க குலத்தோர் ஆவார்.

இன்றும் தேவாங்கர் நெசவுத் தொழிலைக் குலத் தொழிலாகவும். பூணூல் முதலான பஞ்ச சூத்திரங்களைத் தயாரித்து மற்ற குலத்தாருக்கும் வழங்கி வருகின்றனர்.

இதுவரை கண்ட செய்திகளினால், குலங்களில் முதன்மை பெற்ற குலம் தேவாங்க தெய்வீக பிராமண குலமே என்பது விளங்கும்.

மந்திரோபதேசத்துடன் தேவர்க்கும் பூணூலை வழங்கியதால் தேவர்க்கும் குருவானவர் தேவலர். மானுடர்க்கும், முனிவர்களுக்கும் மந்திர உபதேசம் செய்து பூணூல் வழங்கியதால் பூவுலகினருக்கும் ஆதிகுரு தேவலரே. நாகர் முதலான பாதாள உலகினர்க்கு மந்திர உபதேசம் செய்து பூணூலை வழங்கியால் பாதாள உலகினற்கும் குரு தேவலரே ஆவர். “சகலலோக ஜகத்குரு” தேவலரே என்னும் உண்மையை உணர்வோமாக.

திரிலோக ஜகத்குருவான தேவலரின் நேரடி வம்சாவளியினர் தேவாங்கர். எனவே தேவாங்கர் மற்ற குலத்தாருக்கு ஆடை நெய்து தருவதுடன், புரோகிதர்களாகவும் விளங்கி வந்தனர். சிகாய யஞ்ஞோப வீதங்களுடன் திரிகால சந்தியா வந்தனத்துடன் “ஆச்சுவலாயன” தர்ம சூத்திரத்தின்படி வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

எனவே தேவாங்க குலம் அனைவரின் மானம் காக்கவும், ஆன்மிக சித்திக்காகவும் சத்வ குணமே குணமாகக் கொண்டு வாழ்ந்த தெய்வீக குலம் என்பதை உணர்ந்தோம்.
தேவலர் என்பவர் யார்?

தேவாங்க மகரிஷி என்பவர் யார் ? அவர் பிரம்ம தேவனால் முடியாத செயலைச் செய்து முடித்தார்; என்றால் அவருக்கு அந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது ? தவத்தால் அந்தச் சக்தியைப் பெற்றாரா ? அல்லது அவரது வரம்பில் ஆற்றல் (ஸர்வ ஸக்தித்வம்) அவருக்கு இயற்கையாகவே உண்டா ? இதுவரை வெளி வந்த வரலாறுகளில் எல்லாம் அவர் சிவபிரானின் இதய கமலத்தில் இருந்து வந்தார் என்றே கூறப்பட்டு உள்ளன. இனி உண்மையை உணர்வோம்.

ஒம் எனும் பிரணவ வடிவமானவர் தேவலப் பிரம்மம். உயிர் இனங்கலைச் சிருஷ்டி செய்ய எண்ணங்கொண்ட பிரம்ம தேவன், தேவலரை நோக்கித் தவம் செய்தான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த தேவலர் பிரம்மனுக்கு வேதங்களைக் கொடுத்தார். அதன் பின்பே பிரம்ம தேவன் சிருஷ்டித் தொழிலில் வன்மை பெற்றான்.

சரஸ்வதியின் வீணைக்குத் தந்திகள் கொடுத்தவர் தேவலர். உலகினை அளக்கச் சக்தியற்று இருந்த விஸ்வகர்மாவிற்கு உலகினை அளக்க நூல் தந்தது தேவலரே. சந்திரன், நட்சத்திரங்கள் தேவலரே, திதி வாரங்கள் தேவலரே, சுவர்க்கமும் தேவரே, நம்மைக் காப்பவரும் தேவரே, திக்குகளைக் காப்பவரும் அகில ஆத்மாக்களுக்கும் ஆனந்த சொரூபமாய் விளங்குபவரும் அந்தத் தேவலரே.

குமாரனே ! இதுவரை நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவல சொரூ பத்தை உனக்குச் சொன்னேன். இனியும் அவர் பெருமைகளைக் கேட்பாயாக என சண்முகம் பெருமானுக்கு ஐம்முகப் பெருமான் (சிவபிரான்) கூறலானார்.

தேவாங்கப் பரம்பொருளினால் நான் தோற்றுவிக்கப் பட்டேன். தேவலர் நிர்குணப் பிரம்மம். நான் சகுணப் பிரம்மம் என நீ உணர்வாயாக. நான் மாயையுடன் கூடியவனாய் பிறப்பிக்கப்பட்டேன். தேவாங்கனுக்கும் எனக்கும் எந்தபேதமும் இல்லை. கயிற்றில் தோற்றம் தரும் (ரஜ்ஜு ஸர்ப்ப நியாயம்) பாம்பினைப் போல அவருக்கும் எனக்கும் பேதம் தோன்றுகிறது. தோற்றம் தரும் இந்த பேதம் உண்மையல்ல வெறும் ப்ராந்தியே. அகண்ட ஆனந்தம் தேவாலரே! அகண்ட பரிபூரண சித் சொரூபம் தேவாலரே.

யார் அறிவார் அவன் லீலை

அவ்வப்பொழுது தேவலப் பிரம்மம் சிவபிரான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிவந்து ஆடையும், பூணூலும் மற்றவருக்குத் தந்து உடனே மறைவது வழக்கம். ஒரு கல்பகாலத்தின் துவக்கத்தில் தேவர்களும், முனிவர்களும் சூத்திர வஸ்திரங்களுக்காக சிவபிரானைப் பிரார்த்திததுக் கொண்டு நின்றனர். சிவபிரான் சுயம்புவான தேவாங்க பிரம்மத்தை வழக்கம் போல் தியானித்தார். பரம்பொருளும் தேவல முனிவர் வடிவம் தாங்கி சிவ சகஸ்ராரா கமலத்தில் இருந்து வெளிப்பட்டார். அங்கிருந்த அனைவருக்கும் ஆடையையும், பூணூலும் வழங்கினார்.
(கல்பங்கள் தோறும் தேவல அவதாரம் நிகழும். முந்திய கல்பத்தில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து, தற்சமயம் நடைபெறும் கல்பத்தில் சிவனின் இதயகமலத்தில் இருந்தும் தோன்றினார் என உணர்தல் வேண்டும்.)

ஆனால் அங்கிருந்த காண்டரிஷிக்கு மட்டும் ஒன்றும் கொடுக்கவில்லை. காண்டரிஷி தேவாலரே எனக்கும் ஆடையும் பூணூலும் வேண்டும் எனக் கேட்டார்.

ஆனால் தேவாலரே ” உமக்கு நாளைக்குத் தருகின்றேன், இன்று இல்லை எனக் கூறினார். காண்டரிஷி கடுங்கோபம் கொண்டு; ” எனக்கு இல்லை என்றதால் நீர் மானுடயோனியில் பிறப்பீர்”. – எனச் சாபம் இட்டார். ” காண்டரிஷியே! நீர் இட்ட சாபம் லோக உபகாரமாயிற்று. எல்லா உலகங்களும் என்னுடைய சொரூபமே! எனக்கும் மனிதருக்கும் எந்த பேதமும் இல்லை. ஏன் எனில் எல்லா உயிர்களும் நானே” என்று தேவலர் கூறி அருளினார்.

இவ்வரலாறே சப்த அவதாரங்களுக்குக் காரணம் ஆயிற்று. காண்டரிஷியைக் கோபம் கொள்ளத் தூண்டி சாபம் பெற்று ஏழு அவதாரங்கள் எடுத்து அனைவருக்கும் நிரந்தரமாய் உபகாரம் செய்துத் தேவாங்கப் பிரம்மம் செய்த நாடகம் இது. யார் அறிவார் அவன் லீலை.

குல மகளும் குல தெய்யவமும், பாற்கடற பயணம்

தேவர்ங்கப் பிரம்மத்தின் முதல் அவதாரம் தேவல முனிவர் அவதாரம். நிரந்தரமாக அனைவருக்கு ஆடையும், பூணூலும் வழங்க வந்த அவதாரம் இவ்வவதாரம். காண்ட ரிஷியின் சாபத்தை உலக உபகாரமாக மாற்றிய அவதாரம் இந்த அவதாரம். இவ்வவதாரம் முதற்கொண்டு அனைவரும் நிரந்தர நன்மை அடைந்தர்.

வேதங்களுடன் பிறந்தது நூல். அந்த நூல் ஸ்ரீமன் நாராயணனின்
நாபிக்கமலத்தில் சேர்து இருந்த்து. தேவலர் பாற்கடல் சென்று நாரணனைத் தரிசித்து அவரிடம் அந்த நூலைப் பெற்று வரவேண்டும் என்பது சிவாஞ்ஞை.

வேவாங்க மாமுனிவர் உமாதேவியை வணங்கினார். ‘‘தாயே ! நான் சுகமாய் பாற்கடல் சென்று திரும்பி வரவேண்டும். நான் எடுத்த காரியங்களில் ஜெயம் பெற வேண்டும். அருள்பாலிப்பாயாக’’ – என்று வேண்டினார்.

தேவலனே ! ‘‘ நலமே சென்று வருக ! வழியில் விரோதிகள் தோன்றினால் என்னை நினைத்துக் கொள். அந்தக்கணமே நான் தோன்றி அவர்களைச் சம்ஹரிமபபேன். அஞ்ஞாதே மகனே ! ‘‘ என்று தேவியும் வரம் கொடுத்தாள். பரப்பிரம்மத்தின் அமிசமான தேவலர் எடுத்துக் கொண்ட வேடத்திற்கு ஏற்றார்போல் தனக்கு எந்தச் சகதியும் அல்லாதவர் போல நன்கு நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் பாவனையே தோவாங்ககுலம் அனைத்தினுக்கும் ஒரு குல மகளை, குல தெய்வத்தை அருளியது.

பேரொளிப் பிழம்பின் வடிவமான தேவலர், மாதவனின் பாற்கடலை அடைந்தார். அதன் அருகே; பலவகை மரங்களும், பலவகைச் செடி கொடிகள் நிறைதமு அழகாலும் நறுமணத்தாலும் மனோ ரம்மியமாய் விளங்கிய சொர்ணாசிரமத்தில் தவம் இயற்றினார்.

சித்தத்தில் நாரயணனை நிறைத்தார். வாய்ஓயாது நலம் தரும் திருநாமத்தை முழங்யது. தன்னைத் தானை நோக்கி இயற்றிய தவம் அது? தேவலரின் வைராக்கியத்திற்கு மகிழ்ந்தான் எம் பெருமான். அவர்க்குத் தரிசனம் தந்தான்.

முனிவர்களும், யோகிகளும் உள்ளத்துக் கொண்டு ஹரி ! ஹரி ! எனப் போற்றும் பரந்தாமனள நோக்கி இருகரம் கூப்பினார். தேவாதிதேவனே ! வெள்ளத்து அரவில் துயிலமாந்த வித்தே ! பரவாசுதேவனே ! லக்ஷ்மீ ரமணனே ! கருடவாகானா ! கருடத்துவஜா ! ஆதிசேஷசயானா ! துஷ்ட நிக்ரக சிஷ்ட்ட பரிபாலனே ! போற்றி ! போற்றி எனப் போற்றி இசைத்தார்.

‘‘தேவலனே ! உன்பகதிக்கு மெசசினேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்’’ – என மாதவன் திருவாய் மலர்ந்து அருளினார்.

‘‘ஜகத்ரடசகனே ! பரமசிவன் விருப்பத்தின்படி உனக்கு நாபிகி கமலநூலைப் பெற்றுப் போக வந்துள்ளேன். அந்த நூலால் ஆடைகள் நெய்ய வேண்டும். ஆடைகளைச் சகல தேவர, மகரிஷிகள், மானிடர், நாகர் அனைவருக்கும். அனைவரின் மானத்தையும் காக்கவேண்டும். தாங்கள் அருள் கூர்ந்து நூலைத் தந்து அருளல் வேண்டும்’’ – எனத் தேவலர் வணங்கினார்.

‘‘தேவாங்கனே உலகம் தொடங்கிய காலம் முதாக இந்நூலைக் காப்பற்றி வந்துள்ளேன். உன்னிடம் வழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நீ நூலை வாங்கிச் சென்று ஆடைகள் நெய்து மூவுலகோர் மானத்தையும் சம்ரட்சணம் செய்வாயாக. செல்லும் வழியில் நற்காரியங்களுக்குத் தீங்கு பல செய்யும் அரக்கர்கள் மாயாவிகளாய் இருக்கின்றனர். நூலைக் கவர முனிவர் வேடம் அணிந்து வருவார்கள். அவர்களின் மோசத்தில் சிக்கி விடாதே. உன் வனமையால் அவர்களை வென்று செல்லுவாயாக ’’ என்று ஆசி வழங்கி தன் சக்கரங்களில் ஒன்றையும் நூலையும் தேவலருக்குக் கொடுத்து மறைந்தார்.

மாயா ஆசிரமம்

பாற்கடலை விட்டுத் தேவலர் புறப்புட்டார். ஜம்புத்வீபத்தில் லவண சமுத்திரக் கரையில் மரங்கள் அடர்ந்த ஒர் ஆசிரமத்தைக் கண்டார். உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவ்வாசிரமத்தில் உள்ள தவசிகளைக் காண உள்ளே நுழைந்தார்.கள்ளத் தவ்வேடம் கொண்ட முனிவன் ஒருவன் அனேக சீடர்கள் படை சூழ அங்கே இருந்தான். பத்மாசனம் இட்டுக் கொண்டும் ஜப மாலை இருட்டிக் கொண்டும் இருந்த அந்தக் கள்ளத் தவசியைகி கண்டார் தேவலர்.

கள்ளத்தவ முனிவனும் தேவலரைப் பார்த்தான். வஞ்சகம் சத்தியத்தை வெல்ல நினைத்தது. நீர் யார்? உமது சரிதையை எனக்கு உரையும் எனக் கேட்டான் அவன். தம் வரலாறு அனைத்தயும் தேவலர் அவனுக்கு உரைத்தார். நீர் மேற்கொண்ட செயல் மிகவும் பனிதமானது. உம்மை உபசரிக்க விருப்பம் கொண்டேன். இரவு இவ்வாசிரமத்தில் தங்கி இருந்து பொழுது விடிந்து செல்லலாம் என்று அவன் வேண்ட தேவலரும் சம்மதித்தார்.

ஸ்ரீ சூடாம்கிகை அவதாரம்

அன்று இரவு; கபட முனிவனும், அவன் சீடர்களும் சுயரூபம் கொண்டு அரக்கர் ஆயினர். தேவலரைத் தாக்கத் தொடங்கினர். தேவலர் உடனே மாகவிஷ்டணுவால் தமக்குக் கொடுக்கப்பட்ட சக்கரத்தை மந்திர உச்சாடனத்துடன் விடலாயினர். சக்கரம் அரக்கர் கூட்டத்தைத் தாக்கியது. கை வேறு தலை வேறு என முண்டங்களாகி கபந்தங்களாக ஆடலாயினர் அரக்கர். வஞ்ஜிரமுஷ்டி, தூம்ரவக்கிரன், தூம்ராட்சன், சித்திரசேனன், பஞசசயனன் என்னும் தலைமை அரக்கர் அவர்களை அறுக்கப் பெருகிய அவர்கள் இரத்தத் துளிகளில் இருந்து கணக்கற்ற அரக்கர் தோன்றலாயினர். அரக்கர் கூட்டம் பல்கிப் பெருகலாயிற்று.

ஓங்கார ரூபிணி ! புஜக பூசணி ! மகா சக்தியே சண்டிகா ! சாமுண்டி ! எனத் தேவலர் தம் தாயைத் திரு உற்றத்தில் சிந்தித்தார்.

குழந்தையின் குரல் கேட்ட மாதா ஓடி வந்தாள். மகனே ! அஞ்சாதே ! அஞ்சாதே ! என்ற அவள் ஆர்வர் குரல் எங்கும் முழங்கியது. தரும்மே அவளுக்குச் சிங்க வாகனம் ஆனது. கரங்களோ திசைகளை அளந்து கொண்டு நான்காக விளங்கின. பலகோடி சூரியர்கள் ஒன்றாய்த் திரண்டு அவளுக்கு மணிமகுடமாக அமர்ந்தனர். கையில் காலத்தை வென்ற சூலம் விளங்கியது. வாள் ஒரு கரத்தில் துள்ளியது. கதையை ஒரு கரம் தாங்கியது. சக்கரத்தை ஒரு கரம் தாங்கியது. பரப்பிரம்மத்தின் சக்தி எதுவோ அதுவே தேவாங்கர் தெய்வமாகத் தோன்றியது.

மூன்றே முக்கால் நாழிகைக்குள் இந்தப் பாவாத்மாக்களை ஒழிக்கின்றேன் என்று முழங்கினாள் ஸ்ரீ செளடேஸ்வரி. கோர கர்ஜனை புரிந்தாள். தரும சொரூபத்தை அதரும சொருபங்கள் பார்க்கலாயின. தாயின் நான்கு புஜங்களும் விம்மிப் புடைத்தன். கன்றினுக்கு ஆபத்து எனில் சாதுவான தாய்ப் பசு சீறிப் பாயுமே. அந்தப் பாய்ச்சலைக் காட்டினாள் வீரமாதா. கருணை நயனங்கள் கோபத்தால் சிவந்தன. குளிர்ந்த செளமியமான விழிகள் பிரளய காலாக்கினியைப் பொழிந்தன. வெயிலின் முன் இருள் உண்டே உலகில் ? எம் பெருமாட்டுயின் மகுடமே அரிய பெரும் போரினை நிகழ்த்திய அற்புதத்தை தேவாதி தேவர்கள் கண்டு வியந்தனர்.

சர்வலோக தயாபரியின் மகுடம் கோடி சூரியப் பிரகாசமாக ஒளிவிட
அவ்வொளியைத் தாங்க இயலா அரக்கர் மூர்ச்சித்து விழலாயினர். ஆயுதங்கள் நான்கும் அரக்கரைச் சம்ஹரிக்க ஆரம்பித்தன். ரக்த பீஜர்களான அவர்களின் ரத்தம் பூமியில் விழாதவாறு தேவியின் சிங்க வாகனம் நாவால் பருகிற்று. சத்தியம் அசத்தியத்தை விழுங்கலாயிற்று. உணமை பொய்மையை விழுங்கியது. மாமேருமலைகளைப் போல அரக்கர் பிணங்கள் குவியலாயின். தலைமை அரக்கர் ஐவரும் திரி சூலத்தால் பலியாயினர். அவர்கள் இரத்தம் வெண்மை, கருமை, செம்மை, மஞ்சள், பசுமை கொண்ட ஐந்து நிறங்களாய் ஓடியது.

தம்மிடம் இருந்த நூலை ஐந்தாகப் பாகம் செய்த தேவலர் அதில் தோய்த்து பஞ்சவர்ண நூலாக மாற்றிக் கொண்டார். கோடி சூரியப் பிரகாசம் கொண்ட கிரீடத்தின் தேஜஸால் அரக்கர் கண் மமுங்கிப் போனதால் அன்னைக்கு சூட அம்பிகை அல்லது செளடாம்பிகை என்ற திருநாமம் வழங்கலாயிற்று. (சூட – கிரீடம்)
சிங்கத்தவர்

அரக்கர் அனைவரும் இறந்தவுடன் அம்பிகையின் சிங்க வாகனம் அதர்மத்தை அழித்த மகிழ்வுடன் எழுந்து நின்று உடம்பினைச் சிலிர்த்தது. சிங்க வாகனத்தின் காதுகளில் இருந்து இருதுளி இரத்தம் விழுந்து. அவ்விருதுளி இரத்தத்தில் இருந்து அரக்கர் தோன்றினர்.அரக்கர் இருவரும் தேவலர் பாதங்களில் விழுந்து வணங்கினர்.மனம் மகிழ்ந்தாள் மகாதேவி.’’நிவிர் இருவரும் என்மகனைச் சரணம் அடைந்தீர். எனவே அவனை அண்டிப் பிழைக்கும் பிள்ளைகள் ஆவீர்’’ என ஆக்ஞாபித்தாள்.

அவர் இருவரும் சிங்கத்தவர் எனப் பெயர் பெற்றனர். (சிலர், ஓருவர் சிங்கத்தவராகவும் ஓருவர் மாணிக்கத்தவராகவும் இருந்தனர் என்று கருதுகின்ரனர். அன்னையின் ஆணையினை ஏற்ற சிங்கத்தவர் இன்றும் அன்னையின் திருவிழாக் காலங்களில் கோமியம் தெளித்தல், பஞ்சகவ்யம் வழங்கல் முதலியன செய்து வருகின்றனர். அம்மையின் ஆணையை அனுசரித்தே தேவாங்க வம்சாவளியினரான நாமும் சிங்கத்தவருக்கு விழாக்காலங்களில் தனி அழைப்பினைத் தந்து அவர்தம் ஊழியத்திற்காக தக்க சனமானங்களையும் மரபு வழியாக விடாது செய்து வருகின்றோம்.)

பிறந்த நாள்

மகனே ! நீ விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் பிரத்யட்சமாவனே. நீ என்னை அமாவாசை இரவிலே நினைத்து நான் உனக்குக் காட்சியளித்ததால் இந்த அமாவாசையே உனக்கும் எனக்கும் பிறந்தநாள். ஆகையால் நீயும் உன் குலத்தோரும் அமாவாசை தோறும் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும், சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நலமே வாழ்வீர்’’ – எனக் கூறி மறைந்தாள், செளடேஸ்வரி.

(எனவே தான் நம் பெரியோர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையையே நினைத்து வாழ்ந்தனர். அன்னையின் அருளைப் பெற கடும் தவங்களையோ, மனைவி மக்களை இழப்பதையோ, துறவு மேற்கொள்வதையோ, வேறு கடுமையான விரதங்களையோ, அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகிறேன் என்று அந்தக் கருணையை நினைத்து நினைத்து உருக வேண்டாமா! அப்படி நினைக்கின்றோமா? என்ன இதயம் நமக்கு? நம் அன்னைக்கு கருணையே இதயம். (பிள்ளைகளுக்கோ சுட்ட கருங்கல்லே இதயம்)

சக்கரத்தால் சாகாவரம்

இவ்வரலாற்றினைக் கேட்டுக்கொண்டு இருந்த நாரத மகரிஷி பிரம்மதேவனைத் துதித்தார். பிதாமகனே ! எம்பெருமானின் சக்ராயுதத்தாலும் வஜ்ரமுஷ்டி முதலான அரக்கர் மடியவில்லையே என்ன காரணம் ? என்று கேட்டார்.

‘’திரிலோக சஞ்சாரியே ! பூர்வத்தில் மகாவிஷ்ணுவின் வியர்வையில் இருந்து உதித்தவர் இந்த வஜ்ஜிர முஷ்டி முதலான ஜந்து அரக்கரும், நாரணனை மகிழச் செய்ய அவனுடன் கடும்போர் புரியலாயினர். தன்னுடன் நீணைட நாட்கள் போராடிய அவர்கள் வீரத்திற்கு மகிழ்ந்த நாரணன்’’ என்ன வரம் வேண்டுமோ பெற்றுக் கொள்ளுங்கள்’’ என அருளினார். அருட்பெருங்கடலே ! நாம் எந்த ஆயுதத்திற்கும் அஞ்சோம். உன் சக்கரத்திற்கே அஞ்சுகின்றோம். உன் சக்கரத்தால் மரணமில்லா வரத்தினை அருளவேண்டும் என, திருமாலும் அவ்விதமே அனுக்கிரகம் புரிந்தார்.

சாகாவரம் பெற்றோர் சாகும் விதம்

வரம் பெற்ற அரக்கர் ஆணவம் கொண்டனர். திருமாலால் நமக்கு மரணம் இல்லை. எனவே மரணத்தை வென்று விட்டோம். நமக்கு மரணபயம் இல்லை என்ன செய்யினும் நம்மை வெல்வார் யாரும் இல்லை என, கர்வம் கொண்டனர். திரிலோகத்தையும் அலைக்கழித்தனர்.

ஜவரும் பாதாள லோகத்தைச் சுற்றி வருங்கால் ஓரு அழகான பர்ணக சாலையைக் கண்டனர். அரக்கரின் குலகுருவான சுக்கராச்சாரியின் பர்ணகசாலை அது .சுக்ராச்சாரியின் மகளான சோமையை ஐவரும் பார்த்தனர். சோமையின் ஈடுஇணையில்லாப் பேர் அழகு அவர்களை மயக்கியது. மோகமாகக் கொண்ட அரக்கர், காமத்தால் கருத்திழந்த ஐவரும் அவள் குரு புத்திரி என்பதனை மறந்தனர். பெண்ணே ! ஐவரில் ஒருவனை மணக்க வேண்டும் என அவளை வேண்டி வற்புறுத்தத் தொடங்கினர். கோபம் கொண்டாள் சோமை .மதியீனர்களே ! யான் குருபுத்திரி என்பதை மறந்திர் ! முறை தவறி நடந்த நீர் என் போன்ற ஒரு பெண்ணிடம் உங்கள் வலிமை எல்லாம் இழந்து யுத்த களத்தில் மாள்வீர் எனச் சாபம் இட்டாள். (சோமை தேவயானி என்பாரும் உண்டு.)

சாபம் பெற்ற ஐவரும் பரமசிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர் .அவர்க்கு முன் சாம்பமூர்த்தி பிரசன்னமானார். நீலகண்டனே ! யுத்தகளத்தில் ஓரு பெண்ணால் மடியும் சாபம் பெற்றோம். யுத்த களத்தில் நாங்கள் மடிந்தால் எங்கள் உதிரத்தை தேவர் முதல் யாவரும் அணிந்து கொள்ளும் வரம் கொடுக்க வேண்டும்’’ என வேண்டினர். ரிஷபவாகனரும் அவர் வேண்டிய வரம் கொடுத்தார்.

மன்னுயிர் காக்கும் மாதவன், ஆமோத நகர்

சிவபிரானே ! என் அமிசம் மானுவடிவம் தாங்கி உன் இதயத்தில் இருந்து தோன்றும் அவன் உன் ஆணையின்படி நடந்து கொள்வான்’’ – என்று தன்னைத் தியானித்த சிவபிரானிடம் பரம்பொருள் உணர்த்தியதும், அதன்படி அவதரித்த தேவலர், பெருமானே ! தேவாதி தேவனே ! நான் எங்கு வசிப்பது ? என் குலத்தவர் யாவர் ?’’ என்று பரமசிவனிடம் கேட்டார்.

தேவல முனிவன் ! மன்னுபுகழ் இமயமலைக்குத் தெற்கே புண்ணியத்தின் வடிவமான பரத கண்டத்தில், எல்லா வளங்களும் நிரம்பிய நாடு ‘’சகர’’ நாடு. நாடென்ப நாடா வளத்தது என்னும் இலக்கணம் எல்லாம் நிரம்பியது. அந்நாட்டவர் ஓன்றினை விரும்பி வேறு நாட்டிற்குப் போக வேண்டியதில்லை. எல்லா வளங்களும் சிறப்புகளும் அங்கு உண்டு.

அந்நாட்டின் தலைநகரம் ஆமோத நகர். அந்த நகரத்திற்கு இந்திரனின் சொர்ணபுரியம் ஈடாகாது. யமபயம் இன்றி அந்நகர மக்கள் ஓழுக்க சீலர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தான் உன் குலத்து தேவாங்க தெய்வீக பிராமணர்கள். அந்நகரத்தின் கொலுச்சபை குபேரன் சபையை வென்றது. தேவலோகத்தின் சுதர்மை என்னும் கொலுச்சபையும் வருணனின் சபையும் அச்சபைக்கு முன் வெட்கித்தலை குனியும் நீ அந்நகர் செல்லவேண்டும். உன் குலத்தாரையும் ஆண்டு உலகில் அரசநீதி நிலைபெறச் செய்ய வேண்டும்’’ என்று சிவபிரான் தேவலரிடம் அருளிச் செய்து இருந்தார்.

தேவாங்க மாமன்னர்

சத்திய சீலர்களான தன் குலத்து தேவாங்க தெய்வீக பிராமணர்களை அருளாட்சிச் செய்ய; தேவாங்க பிராமண குலோத்தமர் தேவலப் பிரம்மா புறப்பட்டார். வழியெங்கும் குதூகலமான பல காட்சிகளைக் கண்டார். பல தேசங்களையும் புண்ணிய நதிகளையும், மலைகளையும் கடந்தார். புனித பொற்பாதங்கள் மண்ணில் தோய மாதவ மூர்த்தி நடந்தார். மன்னுயிர் காக்கும் மாதவனின் பொற்பாதங்கள் பரல் கற்களிலும் முள்ளும் செம்பொடியிலும் படிந்து வருந்த வேண்டுமோ ? திருமேனி வெயிலில் வருந்தல் வேண்டுமோ ? கருணையின் கனிவை என் என்று எண்ணி உருகுவது ?

நடந்த மாதவனிடம் இயற்கை அன்னை உருகினாள். மேகம் என்னும் துருத்தி கொண்டு வழியெங்கும் பனிநீர் தெளித்தாள். தன் மைத்துனர் வருகின்றார் என்பதால் சூரியனும் பேரன்பினால் இளகினான், வெயில் அவர் திருமேனியை
வருத்தவில்லை கல்லும் முள்ளும் மலர்ப் பஞ்சணை ஆயின். மரம், செடி, சொடிகள் எல்லாம் பணிந்து வணங்கி நிழல் செயதன. கொடிய விலங்குகள் எல்லாம் தம் கன்றினைக் கண்டாற் போல் பேரன்பு கொண்டு பின் தொடர்ந்த. பறவை இனங்கள் வானில் நெருங்கி நி.ல் செய்து வந்தன.

உயிர் இனங்கள் எல்லாம் அவர் கு.ந்தைகள் அன்றோ ! உயிர்கள் அனைத்தும் அவரிடம் அன்பு கொண்டு தொடர்ந்தன. இராஜ கம்பீரர் நடந்தார்.

பேரழெஉ வாய்ந்த ஆமோத நகரின் கோட்டைநைக் கண்டார்.கோட்டை வாயிலை அடைந்தார். ராஜ வமிசத்தவர் அவரை எதிர்தோக்கிக் காத்து இருந்தனர் மந்திரிகள், சேனைத் தலைவர்கள், ஆஸ்தான பிரதானிகள், புரோகிதர்கள், நகர மக்கள் ஆனந்த அனுபவம் மேலீட்டால் மெய்சிலித்து உள்ளம் குழைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கி நின்றனர்.

தேவலரை எதிர்கொண்டு அழைத்தனர் வைதிக முறைப்படி புனிதமான வரவேற்பினை நிகழ்த்தினர். ‘‘மாகனுபாவரே ! சிவபிரான் அருள்பாலித்தபடி தாங்கள் இந்த இராஜ்ஜியத்தை ஏற்க வேண்டும். திருமுடி சூடிக் கொள்ள வேண்டும். எங்களைப் பரிபாலனம் செய்ய வேண்டும் ’’ – என முறைப்படி வேண்டுகோள் விடுத்தனர். தேவாங்க மா முனிவர் மகிழ்வுடன் சம்மதித்தார்.

தேவதுந்துபி முழங்க, தேவர்கள் கற்பகம், மந்தாரம், பாரிஜாதம் என்னும் தெய்வீக மலர் மாரி பெய்ய, பலவகை மங்கல வாத்தியங்கள் முழங்க, சுமங்கலிகள் மங்கல கீதம் இசைக்க, தேவமாதர்கள் ஆடிவர, நகரமக்கள் மங்கல ஒலி முழங்கிப் பின் தொடர தேவலர் பட்டணப் பிரவேசம் செய்தார். நகரமெங்கும் பேரு அழகுடன் திகழ்ந்தது. தருமத்தின் பட்டணப் பிரவேசம் அது. சத்தியத்தின் சத்திய வாழ்கை மானுட வடிவம் கொண்டு செய்த பட்டணப் பிவேசம் அது. அகலமான தெருக்கள், சித்திரமயமான கோபுரங்கள், ஆலயங்கள், வானளாவிய வீடுகள் என ஓர் அற்புதக் காட்சியாய்த் தோற்றம் தந்தது, ஆமோத நகரம்.

ஆடல் ஒலி, பாடல் ஒலி, மதங்கொண்ட யானைகளின் முழுக்கம், விருந்நினரை வரவேற்கும் ஒலி, விருந்தினர் உணவு உண்ணும் ஒலி,வசமையல் தொழில் ஒலி என்னும் வகையில் எங்கும் தருமத்தின் பேர் ஒலியே கேட்டது. நகர் எங்கும் தெருக்களை எல்லாம் கடந்து தங்கச் ணுவராகளில் நவ மணிகள் பதித்ததும், முத்துக்களால் இயன்ற கோபுரங்கள் உடையதும் ஆன அரண்மனையில் நுழைந்து அந்தப்புரம் அடைந்தர் தேவலர்.

பின்னர் மந்திரி ராஜ புரோகிதர்களை வரவழைத்தனர். ஏழு பண்ணிய ந்தி தீர்த்தங்களும், சப்த சமுத்திர புனித தீர்த்தங்களும் கொண்டு வரப்பட்டன. வேத முழக்கம் எங்கும் கேட்கத் தொடங்கியது. யாகங்கள் தொடங்கப்பட்டன. தேவங்க தெய்வப் பிராமண புரோகிதர் தேவலருக்கு நவரத்தஅன கசிதமான திருமுடியைச் சூட்டினார். வைதிகர்களுக்கு தட்சிணை ஏராளமாக வழங்கப்பட்டது. புலவர்கள், இரவலர், ஏழைகள் ஏனையோருக்கு மானியங்கள், தானங்கள் வழங்கப்பட்டன. கொள்ளும் ஒலியும் ஒலியும், கொடுக்கும் ஒலியுமே எங்கும் நிறைந்தது.

தேவாங்க மாமன்னரிடம் அமைச்சர்கள் ராஜமுத்திரை முதலான அரச சின்னங்களைத் தந்து வணங்கினர். ராஜ்ஜியத்தின் நிலைமைகளை எடுத்து விளக்கினர். தேவலர் தம் ராஜாங்க அதிகாரிகள் எல்லோரையும் வரவழைத்து ஒன்று கூட்டினார். அவர்களில் சுபுத்தி, காரியதாட்சன், நீதிவந்தன், தீர்க்கதரிசி முதலிய நால்வரையும் மந்திரிகளாக. தருமத்தின் அரசாட்சிக்கு கூர்ந்த நல் அறிவு ஒரு அமைச்சராங்கவும், சகல காரியங்களையும், நிறைவேற்றும் சக்தி ஒரு அமைச்சராகவும், நீதி ஒரு அமைச்சராகவும், திரிகால ஞானம் ஒரு அமைச்சராகவும், அமைந்ததில் வியப்பு என்ன ?

நீதி நிலைபெற்ற அரசாட்சியை தேவாங்க மாமன்னர் நடத்தி மூவுலகோருக்கும் அரசியல் நெறிமுறைகளை எடுத்து விளக்கி வந்தார். மூன்று உலகத்தாருக்குஊ தேவங்கரின் அரசாட்சி அரசாயல் நெறி முறைகளை உணர்த்தும் நன் நெறியாக எடுத்துக்காட்டாக விளங்கியது.

கருணை வெள்ளம்
கபிஞ்சலன் சாப விமோசனம்

ஆமோத பட்டணத்தின் அரசியல் காரியங்களை நன்கு கவனித்து நடத்தினார் வேவாங்க மாமன்னர். வேண்டியபொழுது மழை பெய்தது. தருமம் தவறுவோர் ஒருவரும் இன்மையால் நாட்டில் சிறந்த போகங்கள் நிலை நின்றன. தருமவழியில் திரட்டிய பொருள் தருமத்திற்கே பயன்பட்டது. கொலையும், புலைத்தொழிலும், வஞ்சகமும் எங்கும் இல்லாமல் போயின. வானத்து தேவர்களும் சகர நாட்டல் குடியேற ஆசைப்பட்டனர்.

அவதாரத்தின் செயல்களைச் செய்ய ஆவல் கொண்டார் தேவாங்க மாமன்னர். ஒரு நாள் தம் மந்திரிமார்களை அழைத்தார் தேவல மாமன்னார்.
‘‘அறிவு ஆற்றல்களில் சிறந்த அமைச்சர்களே ! நான் பரமேஸ்வரனின் ஆக்ஞைப்படி ஆடைகள் நெய்தல் வேண்டும். தறி, ராட்டை முதலிய கருவிகள் தயாரித்துக் கொண்டு வரவேண்டும். விஸ்வகர்மனின் குமாரன் மயன் என்பான் மாமேரு மலையில் வாழ்ந்து வருகின்றான். கருவிகள் பெற்றுவர நான் மயனிடம் செல்லுகின்றேன். நீங்கள் அரசியல் காரியங்களை மிகக் கவனத்துடன் நடத்திக் கொண்டு குடிமக்களை கண்ணினுள் வைத்துக் காப்பாற்றிக் கொண்டு இருங்கள் ’’ என ஆணை பிறப்பித்தார்.

எம்பெருமானே ! நால்வகைச் சைனியங்களுடன் நாங்களும் உங்களுக்குத் துணை வருகின்றோம். அருள் பாலிக்க வேண்டும் என அமைச்சர்கள் வேண்டி நின்றனர்.

‘‘ அன்பு, அறிவு, ஆராயிந்த சொல்வன்மை முதலான திறன்களை உடைய நீங்கள் என்னுடன் வந்துவிட்டால் அரச காரியங்கள் தடைபன்னு நின்றுவிடும். எனக்கு யாரும் துணையாக வரவேண்டும் வில்லும், அம்பும் துணையாகத் தரித்துப் புறப்பட்டார்.

கார்க்கிய முனிவர் ஆசிரமத்தில் ஒருநாள் தங்கினார். அம்முனிவரின் உபசரணையை ஏற்றுக் கொண்டு நாடுகள், வனங்கள், ந்திகளைத் தாண்டி, அடராந்த வனம் ஒன்றை அடைந்தார். கொடிய விலங்னங்கள் நாநாவிதப் பறவைகள், மலைப்பாம்புகள் நிறைந்து விளங்கிய அவ்வனத்தில் கொடிய சிங்கம் ஒன்று தேவலர் மீது பாய்ந்தது. தேவாங்க மாமன்னர் வில்லில் இருந்து சக்தி வாய்ந்த பாணம் ஒன்று பாய்ந்தது. மாண்டு விழுந்தது சிங்கம்.

கொல்லப்பட்ட சிங்கத்தின் உடம்பிலிருந்து சுந்தரபுருஷன் ஒருவன் வெறிப்பட்டு நின்றான். அதைக் கண்ட தேவபர் மிகவும் வியப்படைந்தார். யார்
நீர் ? உம் வரலாறு யாது ? என்று வினவினார்.

பெருமைகளுக்கெல்லாம் இருப்பிடமே ! தயா நிதியே ! அடியேன் தங்கள் கருணைப் பெருக்கால் சாபக்கடலைக் கடந்து புனிதன் ஆயினேன். நான் யட்சர் குலத்தலைவன் குபேரனின் நண்பனாகிய கபிஞ்சலன் என்பவன். யான் ஒரு கந்தர்வன். நான் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக கானகம் ஒன்றினை அடைந்நேன். அநேக மிருகங்களை வேட்டையாடினேன். அழகிய புள்ளிமான் ஒன்ரு துள்ளித் திரிவதைக் கண்டேன். என்னைக் கண்ட மான் மிரண்டு ஒடியது. அதனைத் துரத்திச் சென்றேன். பாணப்பியோகம் செய்தேன். அம்மானோ என் அம்புகளுக்கு அகப்படாமல் கெளதம முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைந்தது. நானும் விடாமல் பின்தொடர்ந்து ஆசிரமத்துள் நுழைந்து என் பாணத்தால் மானைக் கொன்று நின்றேன்.

அச்சமயம் வெளியில் சென்றிருந்த கெளதம முனிவர் ஆசிரமத்துள் நுழைந்தார். கோரக்காட்சியைக் கண்ட முனிவர் என் மீது கடுங்கோபம் கொண்டார். ‘‘ அற்பனே ! குழந்தை போல் யான் வளர்த்த மான் குட்டியைக் கொன்று
விட்டாயே ! இன்று முதல் கொடிய சிங்கமாக மாறுவாயாக. காட்டு விலங்குகளைப் புசித்துத் திரிவாயாக ’’ எனச் சாபம் இட்டார்.

அஞ்சி நடுங்கிய நான் முனிவரின் பாதங்களில் சரணம் என விழுந்தேன். அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என வேண்டினேன். என்மீது மனம் இரங்கிய முனிவர் கூடிய விரைவில் தேவாங்க மாமுனிவர் இவ்விடம் வருவார். உலகினை உய்விக்க வரும் அப்புண்ணிய மூர்த்தியால் உன் சாபம் விலகும் என சாப விமோசனம் கொடுத்தார். தங்கள் கருணை வெள்ளத்தால் சாப விமோசனம் பெற்றுப் புனிதன் ஆனேன் என்று தேவலரிடம் விடை பெற்று சுவர்க்கலோகம் சென்று சேர்ந்தான் கபிஞ்சலன்.

அக்கிரதனுவன் சாப விமோசனம்

ஸ்நானம் செய்வோரின் சகல பாபங்களையும் நீக்க வல்லதும் பகீரதன் பெருந்தவத்தால் பூலோகத்தில் பிரவகித்ததும் பகீரதி எனப் பெயர் பெற்றதுமான கங்கா ந்தியை அடைந்தார் தேவலா. முறைப்படி நித்ய கர்மங்களை முடித்தார். பின் வாம தேவமுனிவர் ஆசரமத்தை அடைந்தார். வேத சாஸ்திரங்களை அங்கங்களுடன் அத்தியயனம் செய்துபரிசுத்த பிரம்ம ஞானியாய் அருளே வடிவாய்த் தன் சீடர்கள் புடைசூழ அமர்ந்து இருந்த வாம தேவரை வணங்கினார் தேவலர். ஞான பூஷணமே ! ஞான சிரேஷ்ட்டரே ! தங்கள் சுகக்ஷேமங்களைக் கூறவேண்டும், தங்கள் தவம் தொல்லைகள் ஏதும் இன்றி நடைபெறுகின்றதா ? என்று கேட்டார்.

வலிமையின் இருப்பிடமே ! தேவாங்க சிரேஷ்ட்டரே சமீபகாலம் வரை எங்கள் தவம் யாதொரு தொல்லையும் இல்லாமல் நடந்து. சிறிது காலமாக இங்குள்ள வைதிகச் சன்றோர்க்குல்லாம் பெரும் தலைவலி ஒன்று தோன்றியுள்ளது. இங்கிருந்து சற்று தூர்ரத்தில் குண்டிகன் என்னும் அரக்கன் வாழ்ந்து வருகின்றான். அவனுக்கு அஞ்சி பறவைகள், உயிரினங்கள் அனைத்தும் இங்கிருந்து ஓடிவிட்டன. பயங்கரமான வேலை ஆயுதமாகக் கொண்ட அவ்வரக்கன். இரக்கம் சிறிதும் இல்லாதவன். பிரம்மதேவன் உயிரினங்களை எல்லாம் தான் தின்னுவதற்கென்றே படைத்து உள்ளான் என்று கருதுகின்றான்.
அவ்வரக்கனை வெல்வது எங்களுக்குச் சாத்தியம் இல்லை. அவனால் எங்கள் தவம் தடைபடுகின்றது.

நீர் மிகுந்த வலிமை படைத்தவர். சகலரையும் ரட்சிக்கும் கருணை உடையவர். அவனை வென்று எங்களைக் காக்க வேண்டும் என வேண்டினார் முனிவர்.

வாமதேவர் ஆசிரமத்தில் இருந்து நான்கு காத தூரத்தில் வசித்து வந்த குண்டிகளைச் சந்திக்கப் புறப்பட்டார் தேவாங்க மன்னர். பாவாத்மாவைச் சந்திக்க பரமாத்மா புறப்பட்டார். குகையைச் சுற்றிலும் என்கும் கபாவங்களும், எலுப்புக் குவியல்களுமாய்க் காணப்பட்டன. தலையற்ற, காலற்ற, கண்கள் தொண்டப்பட்ட மிருகங்களின் உடல் மலை போல் குவித்து வைக்கப்பட்டு அவற்றின் துர்நாற்றம் காத்தூரம் வரை சகிக்க முணியாது வூசிக் கொண்டு இருந்தது.

தேவலர் கொண்ட மனத்துன்பத்திற்கு ஓர் அளவே இல்லை. தன் தநுசை வளைத்தார். ஓரு பாணத்தைக் குகைக்குள் எய்தார். ரத்தம் ஒழுகும் தன் கைகளையும், வாயையும் துடைத்துக் கொண்டே வெளியில் வந்தான் அரக்கன். அண்டங்கள் அதிர கோர கர்ஜனை. நான்கு காத தூரத்திற்கு அப்பால் உள்ள வாமதேவர் நடுநடுங்கினார்.
தேவலர் அஞ்சாது நின்றதைக் கண்டான் அரக்கன். அவனுக்கு இக்காட்சி புதிது. தேவலரின் வீரம் அவனை மேலும் கோபம் அடையச் செய்த்து. தேவாதி தேவனைக் கொல்லத் தன் வேலையும், சூலத்தையும் ஓங்கினான். தேவலரின் வில்லில் இருந்து புறப்பட்ட மூன்று பாணங்கள் அரக்கனின் ஆயுதங்கள் அனைத்தையும் பொடிப்பொடி ஆக்கின. அரக்கன் மரங்கள், கற்பாறைகள் இவற்றை எறிந்நான். அவைகள் அனைத்தையும் தம் பாணங்களால் தூள்தூள் ஆக்கினார் தேவாங்க மாமன்னர். பெரும்பாறை ஒன்றைத் தேவலர் சிரசிற்குக் குறி வைத்து வீசினான் அரக்கன்.

தேவலரோ பிரம்மாஸ்திரத்தை மந்திரபூர்வமாக ஏவினார். பிரம்மாஸ்திரம் அண்ட கடாகங்கள் நடுநடுங்கப் பாய்ந்து பாறையைப் பொடியாக்கி அரக்கன் தலையை அறுத்து மீண்டது. மலைபோல் சாய்ந்தது குண்டிகனின் உடல். அவ்வுடலில் இருந்து ஒரு மாகபுருஷன் தோன்றி தேவாங்கரை வணங்கி நிற்க, வயந்த தேவலர் யார் நீ ? என்னும் குறிப்பில் பார்த்தார்.

மன்னாதி மன்னனே ! நான் இட்சுவாகு வமிசம். இட்சுவாகு மன்னரான் பேரனும் வசால பூபதியின் மகனுமான அக்ரதனுவன். நான் பெருவலிமையுடன் விசாலமாபுரியை ஆண்டு வந்தேன். விகடன் என்னும் அரக்கன் நாடெங்குமுள்ள மக்களைத் துன்புறுத்தித் தவசிரேஷ்ட்டர்களைக் கொன்று வேதனைப் படுத்தி வந்தான். மனிதர்களைக் கொன்று தின்னும் அவ்வரக்கனை நான் கொன்று நாட்டிற்கு நலம் செய்தேன். அதனால் விகடனின் தம்பி கற்கடகன் எனபான் என்னை வஞ்சித்துப் பழிக்குப் பழி வாங்க கங்கணம் கட்டிக் கொண்டான். என்னைப் போரில் வெல்ல இயலாது என உணர்ந்த அம் மாபாவி மானுட வடிவம் கொண்டான். என்னிடம் சமையல்காரனாக வந்தான். தன் சமையல் தொழில் வன்மையை என்னிடம் கூறினான்.

வஞ்சகம் அறியாத நான் அவனை என் அரண்மனைச் சமையல்காரனாக வைத்துக் கொண்டேன். அந்த வஞ்சகனும் சரியான காலத்தை எதிராநோக்கிக் காத்து இருந்தான்

ஒருநாள் சாப அநுக்கிரக சாமார்த்தியம் உடைய துருவாச முனிவர் என்னிடம் விருந்தினராக எழுந்தருளினார். மோசக்காரனான கற்கடகன் மனித மாமிசத்தூப் பக்குவம் செய்து துருவாசருக்குப் பரிமாறினான். அதைப் பார்த்த துருவாசருக்குக் கண்கள் சிவந்தன. கடுங்கோபம் கொண்டார் மகாமுனிவர். ‘’எனக்கு நரமாமிசம் படைத்த நீ நரமாமிசம் உண்ணும் அரக்கன் ஆவாய்’’ எனச் சாபம் இட்டார்.

பயந்து நடுநடுங்கிய நான் சுவாமி ! மனதாரச் செய்த பாபம் இல்லை, அறியாது நிகழ்ந்தது. சமையற்காரனின் வஞ்சகம் இது. அறியாது நிகழ்ந்த பிழையை மன்னிக்குமாறு மன்றாடினேன். மனம் இரங்கினார் மாமுனிவர். ‘’மன்னவனே ! வெகுவிரைவில் உமா மகேஸ்வரனின் இதய கமலத்தில் இருந்து ஓரு மகாபுருஷன் அவதரிக்கப் போகின்றான். தேவலர் என்னும் அம் மகாபுருஷர் இவ்விடம் வருங்கால் அவரால் உன் சாபம் விலகும் என்றருளிச் சென்றார். அன்று தொட்டு இன்றுவரை கொன்று தின்று தீமை தேடிய எனக்கு உம்மால் விடுதலை கிடைத்தது’’ என்று தேவாங்கரை வணங்கி விடைபெற்ற அக்கிரதனுவன் மேல் உலகம் சென்றான்.

தேவலர் வாமதேவ மகரிஷி ஆசிரமம் வந்து அவரிடம் செய்தி கூறி அவராலும் அவர் சீடர்களாலும் கொண்டாடப் பெற்றுப் பின் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

நவரத்தின கங்கணம்

தேவர்களின் இருப்பிடம் முனிவர் தவக்கூடமுமாய் விளங்கும் மேரு மலையை அடைந்தார் தேவலர். அங்கிருந்த விசித்திரமான மயனின் மாளிகையை அடைந்தார். தேவலரைபக் கண்ட மயன் எழுந்தோடி வந்து வரவேற்றான். சர்வேஸ்வரா ! தாங்கள் பரிவாரங்கள் இல்லாமல் என் மாளிகை வந்து அடைந்த காரணம் யாது ? என்னால் ஆக வேண்டிய பணி ஏதேனும் இருப்பின் அருள்கூர்ந்து சொல்லுங்கள் என வினயத்துடன் கேட்டான்.

அன்பனே ! ‘’நான் திருநீலகண்டனின் ஆணைப்படி ஆடைகள் நெய்ய வேண்டும். நெய்த ஆடைகளை எல்லோருக்கும் வழங்க வேண்டும். தறி முதலிய அதற்குத் தேவையான கருவிகள் அனைத்தையும் நீர் தயாரித்துத் தரவேண்டும்’’ எனத் தேவலர் கூறினார்.

மனம் மகிழ்ந்தான் மயன். புனிதமான காரியத்தில் தனக்கும் பங்கு கிடைத்ததே என மகிழ்ந்தான். தேவலரின் சரித்திரத்தில் தனக்கும் இடம் கிடைத்ததே என மகிழ்ந்தான். அவர் வேண்டிக் கொண்ட தறி முதலிய கருவிகள் எல்லாவற்றையும் மனதால் எண்ணிச் சிருஷ்டித்துத் தந்தான். (இங்ஙனம் நினைத்த மாத்திரத்தில் கருவிகள் படைக்கும் ஆற்றலைத் தான் வேதங்களும் புகழும். மயனின் தகப்பன் விஸ்வகர்மாவை கருவிகள் படைக்கும் ஆற்றல் இருத்தலின் அவரை ‘’பிரம்மா’’ என வேதங்கள் முழங்கும்.)

நவரத்தின மயமான தறியையும் வைரத்தால் படமரமும், வைடூரியத்தால் பலகையும் ஓளி பொருந்திய கோமேதகத்தால் பன்னையும், புஷ்பராகத்தால் தண்டமும், மரகதத்தால் நாழியும் (நாடாவும்) அழகான ராட்டினமும் ஓரு நொடியில் மயன் சிருஷ்டித்துத் தந்தான்.

மயன் வழங்கிய கருவிகளைப் பெற்றுக் கொண்ட தேவலர் ஆமோத நகர்க்குப் பயணம் ஆனார். நகர் வந்தடைந்த அவரை அமைச்சர் குடிமக்கள் முதலிய அனைவரும் அன்புடன் வரவேற்றனர். மன்னர் பயணம் இனிது நிறைவேறியதற்காக மக்கள் மகிழ்ந்தனர்.

மங்களமான ஓரு தினத்தில் திதி நட்சத்திரம் கிரகங்கள், நேத்திரம் ஜீவன் அனைத்தும் நல்ல நிலையில் இருக்கும் நேரத்தில் அரண்மனையின் ஒருபுறத்தில் தறியைப் பூட்டினார்.

தன் மாதாவை மனதில் நினைத்தார் தேவலர். ‘‘ நினைத்த மாத்திரத்தில் வருகின்றேன் ’’ என்று வரம் அருளில் மீண்டும் இரண்டாம் முறை தேவலர் முன் பிரசன்னமானாள். அன்று மதல் முறை பிரசன்னமாகி தேவலரையும், தேவாங்க குலத்தின் மூலாதாரமான நூலையும் காத்துத் தந்தவன் இன்று இரண்டாம் முறை பிரசன்னமானாள்.

அம்பிகையைத் தரிசித்த தேவலர் ஆநந்த பரவசர் ஆனார். ‘‘தாயே ! உன் அருளால் பரமேஸ்லரினின் ஆணையின்படி இன்று ஆடைகள் நெய்யத் தொடங்கி இருக்கின்றேன். ஆடைகளைத் தேவர், கந்தருலர், முனிவர், கிம்புருடர், கின்னரர், சித்தவித்யாதரர், கருடர், மானிடர், நாகர் முதல் அனைவருக்கும் வழங்க வேண்டி இருக்கின்றது. நான் நெய்ய நெய்ய நூல் குறையாது இருக்க வேண்டும். ஆடைகள், எவ்வளவு வழங்கினாலும் எஉறையாது இருக்க வேண்டும். அவரவர் விரும்பும் வண்ணத்தில் ஆடைகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் அவர் விரும்பும் ஆடைகள் வழங்க வேண்டும். அருள் பாலிக்க வேண்டும் – தாயே ! எனப் பணிந்து குழைந்து வேண்டினார்.

சுயநலம் இல்லா மகனைக் கண்டு மாதா திருஉள்ளம் மகிழ்ந்தாள். தனக்கென ஒன்றையும் வேண்டிக் கொள்ளாத மாதவத்தை மகிழ்ந்தாள். அனைவரின் மானம் காக்க அவதரித்த என் மகனே ! நீ விரும்பியபடி அனைத்தும் மங்ளமாக நிறைவேறும் என வரம் தந்தாள் ஸ்ரீசெளடேஸ்வரி.

மேலும், ‘‘ என் மகனே ! என் கரத்தில் விளங்கும் நவரத்தின மயமான கங்கணம் ஒன்றைத் தருகின்றேன். இதுவரை என் கரத்தில் இருந்த கங்கணம் இனி உன் கரத்தை அலங்கரிக்கட்டும் எனக் கங்கணத்தைத் தேவலரின் கரத்தில் அணிவித்தாள். ‘‘ நீ நெய்யும் ஆடைகள் ஒவ்வோன்றும் புதுப்பது வண்ணத்தில் அமையும். நீவிரும்பும் வண்ணம் ஆடைநெய்யம் ஆற்றலை உனக்கு வயங்கி உள்ளேன் ’’ என்று அருள் பாலித்து அம்பிகை மறைந்தாள்.

மாதவின் கங்கணத்தை அணிந்த தேவலர் சிவபிரானையும், நாரணமூர்த்தியையும் தியானித்துக் கொண்டு தறியில் அமர்ந்தார். துடிகளை நெய்தார். சின்னச்சின்ன இழைகள் பின்னிப்பின்னி சித்திர விசித்திரமான ஆடைகளி தோன்றலாயின.

நேத்திரபந்தர், அமிர்தசந்திரபந்தர், அன்னபந்தர், அன்னபுஞ்சர், தாராவளி, மேகாவளி எனச் சிலவகைத் துணிகளின் பெயர்களை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு :- (திருமண விழாக்களில் முகூர்த்தத்திற்கு முன்நாள் இரவு மணமக்கள் கங்கணம் தரித்தல் என்றும் சடங்குக்கும், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் திருவிழாத் துவக்கத்தில் கங்கணம் தரித்தல் நம் குலப் பிள்ளைகள் முதன்முதலாக நெசவுத் தொழில் பழகுங்கால் கங்கணம் தரித்தல் முதலான எயல்களுக்கும், உயிரொட்டம் எது ? எனில் தேவலருக்கு நம் குல தெய்வம் கங்கணத்தை வழங்கிய செயலே ஆகும். இதனை மனதில் கொண்டுதான் மேற்சொன்ன காரியங்களை நம் குலத்தோருக்கு நம் பெரியோர்கள் விதித்தனர். எந்தச் செயலையும் செய்யும்முன் நம் குலத்தோர், நம் குலத்தின் மாதா தந்த கங்கணத்தையும் அவளையும் மனதில் தியானித்துக் கங்கணதாரணம் செய்து செய்து கோள்ள வேண்டும்.

ஆடை பெற்ற தேவர்கள் அகமகிழ்ச்சி

தேவலர் நெய்த ஆடைகள் பலவித வண்ணங்களில் மின்னின. ஆடைகளில் நாநாவித மலர்களும், செடிகொடிகளும், ஜீவ ஜந்துக்களின் உருவங்களும், தேவதைகளின் உருவங்களும் அவைகளின் பீஜாட்சரங்களும் கூடி சித்திர விசித்திரமாகக் கணகவர் வண்ணங்களில் விளங்கின. ஆடைகளை எடுத்துக் கொண்ட தேவலர் முதன்முதலாகத் தமக்கு நூலை வழங்கி அருள் செய்த ஸ்ரீமந்நாராயணனின் ஸ்ரீவைகுண்டம் சென்றார். ஸ்ரீவிஷ்ணுமூர்த்தியின் திருவடிகளில் வணங்கினார். அருக்குப் பொன்னிற பீதாம்பரங்களும் வழங்கியதுடன் அங்கிருந்த மற்றவர் அனைவருருக்கும் அவரவர் விரும்பிய ஆடைகளை வழங்கினார்.

பின்னர் சத்தியலோகம் சென்றார். படைக்கும் கடவுளான பிரம்மதேவனுக்குப் பல வண்ண ஆடைகளும், செம்மைநிற வஸ்திரங்களும், சரஸ்வதி தேவிக்கு வெண்பட்டு ஆடைகளும், சாவித்ரி தேவிக்குப் பசுமை நிற ஆடைகளும் அங்கிருந்த தேவர் கின்னரர், கிம்புருடர், கந்தர்வர்கள், சித்தர், வித்யாதரர், மகரிஷிகள், முதலானோர்க்கு அவரவர் விரும்பிய ஆடைகளும் வழங்கினார். பின்னர் பிரம்மதேவனை வணங்கி சிருஷ்டி கர்த்தாவே ! இனி என் குலத்தவருக்கு நெய்வதற்கு நூல் வேண்டும். என் குலத்தாருக்கு நூல் எளிதாகக் கிடைப்பதற்கு அருள் புயும் வேண்டும்’’ எனத் தேவல முனிவர் வேண்டினார்.

தேவல ராஜாதிராஜனே ! உன் தேவாங்க குலத்தவர்கள், வருந்தாமல் எளிதாய் நூல் அடையும்படி ஏற்பாடு செய்து உள்ளேன். ஆதிகாலத்தில் மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் மானி, அபிமானி என்ற இரண்டு பெண்கள் பிறந்து இருந்தனார். அவர்கள் பூலோகத்தில் பருத்திச் செடிகளாக உற்பத்தி ஆகி இருக்கின்றனர். அந்தச் செடிகளிள் இருந்து வேண்டிய பருத்தி கிடைக்கும். பருத்தியில் இருந்து எளிதாக நூல் கிடைக்கும் எனப் பிரம்மதேவர் அருள் புரிந்தார். தேவலர் மனம்மிக மகிழ்ந்தார்.
(எதிர்காலத்தில் தன்குலத்தோர் வருந்தாது இருக்க வேண்டும் என்ற அருள்நெஞ்சம் கொண்ட நம் குலத்தின் ஆதிபுருஷரின் பெருமைகளை என்ன சொல்லிப் பாராட்டுவது ?)

பின்னர் இந்திரலோகம் சென்றார். இந்திரனுக்கும், அவன் மனைவி சசி தேவிக்கும் அவர்கள் மகன் ஜயந்தனுக்கும் அஷ்டவசுக்கள், ஏகாதசருத்திர்ர, துவாச ஆதித்யர் அசுவினி தேவர்கள் முதலான அனைவருக்கும் அவர் விரும்பும் ஆடைகளை வழங்கினார்.

பின்னர் மேரு பர்வதம், மஹேந்திர பர்வதம், விந்திய பர்வதம், பாரிஜாத பர்வதம், ருக்ஷவந்த பர்வதம் முதலிய இடங்கள் சென்று அங்குள்ள தேவர், வித்யாதரர், சாரணர், சாத்தியர், யக்ஷர், ரிஷிகள் முதலானோர்க்கும், ஆரணியங்களில் வசிக்கும் முனிவர்களுக்கு, அவர்தம் பத்தினிகளுக்கும் பலவகை ஆடைகள் வழங்கினார்.

அக்கினி தேவனுக்கு கருமை நிற ஆடையும், எமதர்மனுக்கும் அவன் பரிவாரங்களான கிங்ர்ரஃகளுக்கும் கருமை நிற ஆடைகளும் வழங்கி, வருணன், குபேரன் முதலானேஆர் பட்டணங்கள் சென்று அங்கிருந்தோர்க்கு எல்லாம் ஆடைகள் வாரி வழங்கினார்.

திருக்கயிலாச மலைக்குச் சென்றார். சாம்பசிவ மூர்த்திக்கும் உமாமகேஸ்வரிக்கும் ஒளியுள்ள வெண்பட்டு ஆடைகளும் பூத, பைசாச கணங்களுக்கு ஏற்ற ஆடையும் வழங்கினார்.

ஆடைகள் பெற்ற எல்லா உலகத்தாரும், தேவாங்க மாமன்னருக்கு திவ்யமான வாளாயுதங்கள், அஸ்திரங்கள், இரத்தினக் கிரீடங்கள், பலவகை ஆபரனங்கள் பறபல வாகனங்கள் முதலான சன்மானங்களையும், காணிக்கைகளையும் வழங்கினார்கள்.

பூலோக பாதாள உலகினருக்கு ஆடை வழங்கல்

தேவலோகம் செல்லுங்கால் வழியில் தென்பட்ட நாடுகளுக்கும், ஆரண்யத்தில் வாழும் மகிரிஷிகளுக்கும், ஆடை வழங்கிய தேவலர் பூமண்டலம் முழுவதற்கும் ஜம்புத் த்வீபங்களுக்கும், பாதாள லோகத்திற்கும் சென்று அனைவருக்கும் ஆடை வழங்க வேண்டும் எனத் திருஉள்ளத்தில் எண்ணினார். அப்பயணத்தையும் மேற்கொண்டார்.

ஜம்புத் த்வீபத்தின் மன்னன் பிருதிவீபாலனின் தலைநகர் வஜ்ஜிரபட்டிணம் சென்று அவனுக்கும், அவன் மனைவிக்கும், பிரஜைகளுக்கும், இரவித்தீவின் மன்னன் சூரசேனன் மற்றும் அவன் நாட்டு மக்களுக்கும், குசத்தீவின் மன்னன் குசனுக்கும், கிரெளஞ்ச தீவின் மன்னன் ஹேமாட்சனுக்கும், காசித்தீவின் மன்னன் அபிராமனுக்கும், சால்மலத்தீவின் ராஜன் சாலிஹோத்திர ராஜனுக்கும், புட்கலத்தீவின் அதிபதி பானுமதிராஜன் முதலானோர்க்கும் அவர்கள் நாட்டுப்பிரஜைகட்டும் ஆடைகள் வழங்கி ஜம்புத் த்வீபத்தில் பரத கண்டத்தில் விளங்கும் நாடுகளுக்கு எல்லாம் ஆடைகள் வழங்கி எண்ணற்ற காணிக்கைகள் பெற்றார்.

ஏகாங்கியாய் தேவலர் பாதாள லோகம் சென்றார். சர்ப்பராஜன் வாசுகிக்கும், அஷ்டமா நாகங்களுக்கும் ஆடைகள் வழங்கி ஆதிசேஷன் திருமாளிகை சென்றார். ஆதிசேஷனுக்குப் பல வித ஆடைகள் வழங்கி அவனை மகிழ்வித்தார். அங்கிருந்தோர் அனைவருக்கும் வண்ண வண்ண ஆடைகள் வழங்கினார். தேவல வள்ளலின் தன்னலமற்ற தியாக உள்ளத்திற்கு மகிழ்ந்த ஆதிசேஷன் தன் மகளான சந்திர்ரேகையே தாரை வார்த்துத் தந்தான். நாகரத்தினம், ஜீவரத்தினம் முதலன நாகரத்தினங்களைப் பரிசாக வழங்கினான். சந்திரரேகையை ஒப்புக்கொண்ட தேவலர் அவளுடன் ஆமோதநகர் வந்து அடைந்தார். இங்ஙனம் தேவலர் திரிலோகமான சம்ரட்சணகர்த்தாவானார்.

(தேவலர் ஆதிசேடன் மகளை மணம் புரிந்த காரணத்தால் சந்திர்ரேகை வழி ஒரு கிளை பிரிந்து வந்தது. சேடன் மகனை மணந்த அவள் வயிற்றில் வளர்ந்த சந்ததி எனக் கொண்டு தேவாங்கர் அனைவருக்கும் சேடர் என்ற ஒரு பெயர் இன்றும் வழங்கி வருகின்றது.)

யக்ஞோப வீதம் வழங்கல்

தேவாங்க மாமன்னர் திருக்கயிலை செல்ல வேண்டும் என ஒருநாள் ஆசை கொண்டார். பலவகையான சித்ரவிசித்ரமான ஆடைகளை எடுத்துக் கொண்டார். பரமேஸ்வரனின் தரிசனத்திற்காகத் திருக்கயிலைமலை சென்றார். கயிலாய பர்வதம் எங்கும் பனிமூடி பனித்தலை மலை எனக் காட்சி தந்தது. பலவகை தெய்வீக ந்திகள் ஓடிக் கொண்டு இருந்தன. நீர்வீழ்ச்சிகள், குளங்கள் என எங்கும்
இறைவனின் பேர் அருள் நிரம்பி வலிந்து வழிந்தது கொண்டு இருந்தது. முனிவர்களும், தேவர்களும், பூத கணங்களும் எங்கும் நிறைந்து இருந்தனர்.

அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டே தேவாங்கர் பரமசிவனைச் சென்று அடைந்தார். நெற்றிக் கண்ணா ! பரமேஸ்வரா ! பக்தர்க்கருள் புரிபவனே புரிபவனே !புண்ணியனே ! ஞான மூரித்தியே ! என தோத்தரித்து நின்றார்.

‘‘பின் ஆடைகள் நெய்து மூவுலகினருக்கும் வழங்கி உள்ளேன். மாதா வழங்கிய கங்கணத்தின் மகிமையால் இச்செயல் இனிமையாகச் சுலபமாக நிறைவேறியது. கங்கணத்தின் மகிமையால் இப்பொழுது நூல்மிகுந்து உள்ளது.
மிகுந்து நூலைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆணை இட்டால் அவ்வண்ணமே செய்வேன்’’ – ஏன்று கூறி வணங்கினார்.
‘‘தேவாங்க பிரம்ம ரிஷியோ ! மிகுந்த நூலைக் கொண்டு வேத கரியன்களான வைதிக காரியங்களுக்கும், பிரம்மோபதேசத்துக்கு உரிமை தரும் யக்ஞோபவீத சூத்திரம், மாங்கல்ய சூத்திரம், கங்கண சூத்திரம் (அரைஞாண்), சஞ்ஜாத சூத்திரம் சூத்திரம் எனப் பஞ்ச சூத்திரங்களாகத் தயாரித்து வழங்குவாயாக.

வேத ஸந்தசுக்களுக்கு எல்லாம் மாதாவான காயத்திரி தேவியைப் பிரணவத்தில் அமைத்து பிரம்ம ஆன பூணூலை மந்திரம் ஜபித்து, மந்திரத்தை உபதேசித்து தேவர்கட்கும் பிராமணர்களுக்கும் வழங்குவாயாக. பிரம்மச்சாரிகளுக்கு ஒரு பூணூலும், திருமணம் ஆனவர்களுக்கு இரண்டு பூணூலும், உத்தரீய காரியங்களுக்கு மூன்று பூணூலும் வழங்குவாயாக.

யக்ஞோபவீதம் நாபிக்கு, வயிற்றிற்கும் மத்தியில் அமைந்து இருக்க வேண்டும். பூணூலின் அளவு சிரசில் இருந்து நாபி வரையிலும் ஆகும். இந்த அளவிற்கு மேற்பட இருக்குமாறு பூணூலைத் தரித்தல் கூடாது.

மங்களத்தின் சின்னம் மாங்கல்ய சூத்திரம். அதனைப் பதிவிரத்தை சாதனமாகப் பென்களுக்கு வழங்குவாயாக. கங்கண சூத்திரத்தை வேத விதிகளின்படி நடக்கும் சுப காரியங்களுக்கும், அரைஞாண் கயிற்றை உபநயன காலத்திலும், சஞ்ஜாத சூத்திரத்தை பெண்கள் பிரசவ சமயத்தில் சுகபிரசவம் கருதியும் அணிய வேண்டியது எனப் பரமேஸ்வரன் தேவாங்க மாமன்னரிடம் கூறினார்.
சூத்திர கர்த்தன்

தேவல மாமுனிவர் யக்ஞோப வீதத்தை வேத விதியின்படி தயாரித்தார். பிரம்ம, விஷ்ணு, சிவபிரான் என மும்மூர்த்திகளுக்கும் இந்திரன் முதலான தேவர்களுக்கும் பிரம்மரிஷி முதலான ரிஷிகணங்களுக்கும், கந்தர்வர், பிராமணர் முதலானோர்களுக்கு மந்திரோபதேசம் செய்து பூணூலை வழங்கினார். அதனால் சூத்திரகர்த்தன் என எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

தேவாங்க மன்னரைச் சிவபிரான் அலங்கரித்து மகிழல்

தேவல முனிவர் சின்னச்சின்ன இழைப்பின் வரும் சித்திர விசித்திர கைத்தறி ஆடைகளைச் சாம்பசிவ மூர்த்திக்கு வழங்கினார். முக்கண் பெருமான் ஆடைகளின் விநோதங்களைக் கண்டு திரு உள்ளத்தில் மகிழ்ந்தார். உலகோரை ஆடைகளால் அலங்கரிக்கும் உத்தமனை, விலங்காய் வாழ்ந்தோரை பிரம்ம சூத்திரத்தினால் பிரம்ம நிலைக்கு உயர்த்தும் தெய்வீக பிராமணனைத் தாம் அலங்காரம் செய்து மகிழ வேண்டும் எனத் திரு உள்ளத்தில் ஆசை கொண்டார்.
தேவல முனிவரை அமர வைத்தார். அவர் கொண்டு வந்திருந்த ஆடைகளை வாங்கி அவரை தம் திரு உள்ளம் குளிர அலங்காரம் செய்து, கண்டு மகிழ்ந்தார் சிவபிரான். பின்னர் மிகுந்த ஆடைகளைத் தாம் அணிந்து கொண்டார். உமாதேவிக்கு ஆடைகளை வழங்கித் தம் அந்தப்புரம் சென்று விநாயகன், குமரக்கடவுள், வீரபத்திரன் பத்திரகாளி, தேவசேனை முதலானோருக்கும், அங்கிருந்த தேவர் பூதகணங்கள் அனைவருக்கும் வேண்டிய ஆடைகளை வழங்கினார் பரமேஸ்வரன்.

செளடேஸ்வரி பிரசன்னம்

பரப்பிரம்ம சக்தியான நம் குல தெய்வத்தை மனதில் பக்திப் பரவசத்துடன் தேவலர் தியானத்தார். தேவாங்கரின் குலதெய்வமும், குலமகளும் இஷ்ட தெய்வமுமான மாதா பல்லாயிரங்கோடி சூரியப் பிரகாசத்துடனும் திருஉள்ளத்தில் மகிழ்ச்சியும் துள்ள தாய்ப்பாசம் மிளிர சிங்க வாகனத்தின் மீது பிரசன்னம் ஆனாள். தேவலர் கைகூப்பி வணங்கினார். தாயின் பேரருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தார். தாயே ! உன் அனுக்கிரத்தால் ஆடைகள் நெய்து மூன்று உலகத்தோருக்கு வழங்கினேன். எஞ்சிய நூலால் பஞ்ச சூத்திரங்கள் தயாரித்து உபவீதத்தை அனைவரும் வழங்க உள்ளேன். என் தாயான உனக்குத் தெய்வீகமான ஆடைகளை வழங்கி வேண்டும் என ஆசைப்படுகின்றேன். அருள்கூர்ந்து இவ்வாடைகளை ஏற்று அணிந்த தரிசனம் தரவேண்டும்’’ என வேண்டினார்.

மகன் வழங்கிய ஆடைகளை ஆனந்த வடிவமான அம்பிகை, மங்கள வடிவமான அம்பிகை, மூவுலகினையும் ரட்சித்துக் காக்கும் அம்பிகை, ஆனந்த பரவசத்துடன் ஏற்றாள். தேவலர் வேண்டியபடியே ஆடைகளை அணிந்து அவருக்குத் திவ்யமான தரிசனம் தந்தாள். தாயைத் தரிசத்ததால் மகனுக்கும், மகனைக் கண்டதாலும், அவன் தந்த ஆடைகளை ஆணிந்தால் மாதாவிற்கும் ஏற்பட்ட ஆநந்தத்தை வருணிக்க வார்த்தைகள் ஏது ?

வாளாயுதம் கொடியும் பெறல்

சிவபிரானின் சீர்பெற்ற சபையில், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான தேவகன்னியர் தேவகீதங்களை இசைத்துக் கொண்டு மதுரகான மழை பொழிந்தும், இசைக்கு ஏற்ப பரதசாத்திர விதியின்படி நாட்டியம் ஆடியும் சிவபிரானை மகிழ்வித்துக் கொண்டு இருந்தனர். திருஉள்ளத்தில் மகிழ்ந்தார். சிவபெருமான். தேவலரை அழைத்தார். தேவமாதர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டினார். நாட்டிய மாதர்களுக்கு ஏற்ற தெய்வீகமான ஆடைகளைச் சிவபிரானிடம் சமர்ப்பித்தார் தேவலர. ஆடைகளின் பேர் அழகினைக் கண்டு தேவமாதர் மெய்மறந்து நின்றனர். தேவலரிடம் ஆடைகள் பெற்ற சிவனார் அவ்வாடைகளை நாட்டிய மாதர்களுக்கு வழங்கினார்.

மூவுலகோர் மானங்காத்த மாதவனுக்கு மூவுலகினையும் வெல்லும் ஆற்றல் பெற்ற ஆயுதங்கள் வழங்கத் திருஉள்ளத்தில் சிந்தை கொண்டார் சிவபிரான். ‘’சுசந்திரகம்’’ என்ற வாளாயுதமும் அழகிய ‘’நந்தித் துவஜமும்’’ தேவலருக்குக் கொடுத்தார்.

தேவலரே ! மூவுலகில் யாரை நீ வெல்ல நினைத்தாலும் இவ்வாயுதங்களால் வெல்ல முடியும்.நீ சதா காலமும் சுகமே பெற்று இனிதே வாழ்வாயாக என ஆசிகள் பல எண்ணற்று வழங்கினார்.

மேலும் சிவபிரான் மகிழ்ச்சிக்கடல் பெருக்கெடுக்க ஒளிவடிவமாக அங்கிருந்த சூரியதேவ))னைப் பார்த்தார். பகலவனே! உன் உடன் பிறந்தவளும் பெரும் புகழ் பெற்றவளுமான ‘’தேவதத்தையைப்’’ பெரும்புகழும் பராக்கிரமங்களும் உடைய தேவாங்க மாமுனிவருக்குத் திருமணம் செய்து கொடுப்பாயாக என ஆணையிட்டார்.

சூரியதேவனும் பெருமானே ! கரும்புதின்ன கூலியா பெறவேண்டும்? மகாபாக்கியம் பெற்றேன் என மன மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். தேவகணங்களும், பூதகணங்களும் முனிவர் திருக்கூட்டமும், இத்திருமணம் இனிதே நிறைவேற ஆசிகள் வழங்கினர். எங்கும் ஜயகோசம் விண்ணைப் பிளந்தது.

தேவாங்க மாமுனிவர் வாளும், நந்திக் கொடியும் பெற்று அனைவரிடம் விடைபெற்று ஆமோத நகர் திரும்பினார்.

மெய்ஞ்ஞானத்திற்கு அஞ்ஞானத்தின் சாபம்

தேவலர் தம் தலைநகர் ஆமோத பட்டணம் நோக்கிவந்து கொண்டு இருந்தார். வழியில் தேவலோகத்துக்குக் கற்பகமரங்கள் எனக் கண்டோர் மயங்கும் மரங்கள் அடர்ந்த சோலை ஒன்றினைக் கண்டார். வண்டினம் முரலும் அச்சோலையில் , மயிலினங்கள் ஒருபுறத்தே தோகை விரித்து ஆடி மகிழ்ந்து கொண்டு இருந்தன. குயிலினங்கள் கூவிக் கொண்டிருந்தன. நிர்மலமான கண்ணாடி போல் நீர் நிரம்பிய தாமரைத் தடாகம் ஒன்றினையும் அச்சோலையுள் கண்டார் தேவலர். அன்னங்கள் தத்தம் பேடைகளுடன் களித்துக் கொண்டு இருந்த மனோகரமான வேளை அது. அப்புலர் காலைப்பொழுதில் தம் நித்திய கடமைகளைச் செய்ய திருஉள்ளம் பற்றினார் தேவலர். காலைக்கடன்களை முடித்தார். தடாக்கத்தில் நீராடி முடித்தார். தாமரை மலர்களைப் பறித்தார். பரம்பொருளைப் பூசித்தார். வைதிக விதிப்படிப் பூசை முதலியன முடித்தார். தியானத்தில் மூழ்கினார்.
அரம்பையின் அபிலாசை

அவ்வேளை அரம்பை அங்கு தோன்றினாள்.சிவபிரான் சபையில் முதல்நாள் நடனம் ஆடியவள் அவள். சபையில் தேவலரைப் பார்தவள். தேவாங்க மன்னரின் சுந்தர ரூபத்தைக் கண்ணாரக் கண்டு காதல் கொண்டவள். கண்டோர் மயங்கும் தன்மை கொண்டவள். பல மாமுனிவர்களின் தவத்தைப் பங்கப்படுத்திய பேரழகு கொண்டவள். மூவுலகினும் ஈடு இணையற்ற பேர் அழகு கொண்டவள். அவள் தேவாங்க மாமன்னரின் அதி சுந்தர ரூபத்தைக் கண்டாளே தவிர தேவாங்க மாமன்னரின் திவ்யமான உள்ளத்தைக் கண்டவள் இல்லை.

மானின் விழிபெற்றாள்; மயிலிடம் சாயல் பெற்றாள். காமவல்லிக் கொடி கற்பகமரத்தை அணைக்க முயல்வதுபோல் பஞ்சியன்ன கால்கள் கொஞ்சக் கொஞ்ச மேகத்தையே மயிர் முடியாகக் கொண்டு நூலன்ன இடை நெளிந்து வருந்த தேவலரின் முன் வந்து நின்றாள்.

அலங்கரித்த மயில் போன்ற அரம்பையைக் கண்டார் தேவலர், அரம்பையே! நீ தனித்து இவ்விடம் வரக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அழகினுக்கு இருப்பிடமே! வீரத்தின் விளைநிலமே! தேவாங்க மாமன்னரே! உம்பேர் அழகிலும், ஆஜானுபாகுவான உம்தோள்களின் திண்மையிலும் மலைபோல் பரந்த உம்மார்பிலும், பிற அங்கங்களிலும் மையல் கொண்டேண். கயிலை மலையிலே உம்மைக் கண்டபோது இருந்த நான் என்னை மறந்தேன். அருள் கூர்ந்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ – என்று அரம்பை வேண்டினாள்.

இவ்வார்த்தைகளைத் தேவலர் கேட்டார். தம் இரு காதுகளையும் பொத்திக் கொண்டார். அரம்பையே! சகல சாஸ்திரங்களையும் கற்றவள் நீ. நீ கற்றது எல்லாம் ஏட்டுச் சுரைக்காயா ? கற்றபடி தரும நெறியில் அல்லவா கற்றவர்கள் வாழ வேண்டும் ? தரும நெறியில் நிற்க வேண்டும் என்ற ஆவல் உடையவன் நீதி நூல்களின்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். நீ விரும்பும் காமம் தகாத காமம். இது அறநூல்களுக்கு மாறானது. துராசாரம் உடையவர்களே வேசையர்களை விரும்புவர். சத்கருமத்தில் ஈடுபாடு கொண்டோர் உன்னைக் கண்ணெடுத்தும் பாரார். தகாத எண்ணம் கொண்டவளே ! உடனே தேவ உலகம் திரும்பச்செல் ! இவ்விடத்தில் நில்லாதே என்று கூறினார்.

அரம்பையின் முகம் சிவந்தது. புருவங்களும் அதரங்களும் வளைந்து துடித்தன. நெடுமூச்சு எறிந்தாள். கோபம் மிகக் கொண்டாள். ஊடு இணையற்ற தன் பேரழகு தேவல மாமுனிவரின் உள்ள உறுதிக்கு முன் செல்லாக்காசு ஆகிவிட்டதை உணர்ந்து துடித்தாள். மன்னாதி மன்னர்களும் மாமுனிவர்களும் திரிலோக சக்ரவர்த்தியான இந்திரனும் தனக்காகத் தவம் கிடந்து வருந்துவதை நினைத்தாள். எத்தனை மாமுனிவர்கள் தன் சாகசத்தின் முன் தவம் குலைந்து தடுமாறுவதை எண்ணினாள், மனம் குமுறினாள்.
தேவாங்க மாமன்னரே என்ன மறுமொழி கூறி விட்டீர் ! ஒழுக்கம் கெட்டவர்களே விலை மாதரைக் கூடுவர் என்று கூறி என்னை ஏளனம் செய்து விட்டிரே ! என்னுடன் ஒரு முறை கூடினால் மகரிஷிகள் வேதவிதிப்படி செய்த வேள்வியின் பயன் கிட்டும் என்பதை மறந்தீரா ?

பராசரர், அத்திரி, மிதலான மாமுனிவர்களும் என்னை கண்டு என் போகத்திற்காக விரத பங்கம் அடைந்ததை மறந்தீரா ? அல்லது அந்த விவரங்களைக் காதாரக்கூட நீர் கேட்டதில்லையோ ? புண்ணியம் புரிந்தவர்களுக்கே நான் கிடைப்பேன் என்பதை நீர் உணரவில்லையா ? தயவு செய்து என்னை அவமானப் படுத்தாதீர். என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள். மன்மதனின் பஞ்ச பாணங்களால் நான் பஞ்சையாய்க் கிடக்கின்றேன், என அரம்பை மீண்டும் தேவலரை வேண்டினாள்.

அரம்பையே ! நீ தலைகீழக நின்றுத் தவமே இயற்றினாலும் முறையற்ற உன் வேண்டுகோளுக்கு என்மனம் சிறிதும் இடம் கொடுக்காது. பேரின்ப நெறியில் என் மனம் ஈடுபடுமேயன்றி அற்ப சுகத்தில் என் மனம் ஈடுபடாது. ஞானவான்கள் புற்றீசல்போல், நீர்மேல் குமிழி போல் விளங்குமி இந்த அற்பசுகத்தை, நீர்க்கோல அற்ப வாழ்வை மனதிலும் இண்ணார். எவன் தன் மனைவி இல்லத்தில் இருக்க அவளை வஞ்சித்து விலைமாதரிடம் இன்ப அனுபவிக்கின்றானோ அவன் பல
பிரவிகளில் நரகத்தை அனுபவித்தான். அரம்பையை ! வந்தவழியே செல்க ! என்னிடம் உன் கோரிக்கை நிறைவேறாது.

அரம்பையே ! அவைதிக சம்பத்தை இவ்வுலகம் மெய் என்று எண்ணிகின்றது. இவ்வுலகில் கண்ணால், காதால், நாசியினால், நாவினால், உடலால் பெறும் ஐம்புலன் இன்பங்கள் அனைத்தும் சிற்றின்பங்களே ! அளவுபடாத, பேரின்பத்தையே மெஞ்ஞானம் பெற்றோர் பெறவேண்டும். பேரின்பம் பெறுவதற்கு இச் சிற்றின்பங்கள் அனைத்தும் தடையானவை.இச்சிற்றின்பங்களே, முறை தவறிய இன்பங்களே ஓர் உயிருக்கு இம்மையில் நோயினையும், மறுமையில் பிறப்பினையும் தருகின்றன.

உறை மெழுகில் பொன்துகள் போல் ஜீவன்கள் பிரகிருதி மாயையில் ஒட்டிக் கிடக்கின்றன. அவ்வாதகமாக்களைப் பேரின்பம் பெறவைக்க வேண்டும் என்னும் கருனையினால் பரதாத்மா சிருஷ்டியைத் தொடங்குகின்றான். தனு, கரணம், வனம் போகங்களையும் படைக்கின்றான். உலகில் உயிர்கள் வாழ ஏற்ற உடலையும் ந்தது அனுப்புகிறான். இறைவனால் தரப்பட்ட உடலைக் கொண்டு ஜீவன்கள் பேரின்பம் பெறும் நெறிநில் செல்ல வேண்டும். அனால் ஜீவன்கள் தவறான நெறியில் சென்று வேடர் குடியிருப்பினுள் சென்ற மான் போல் தடுமாறி அழிகின்றன.

அரம்பையே ! ஆணும் பெண்ணும் அனுபவிக்கும் சுகத்திற்கு ஆன்றோர் பல நன்முறைகள் வகுத்துத் தந்துள்ளனர். அந்நெறிப்படி வாழ்ந்தால் மண்ணில் பெண்ணுடன் நல்ல வண்ணம் வாழலாம். ஒரு பெண்ணை ஆன்றோரும், பெற்றோரும் தர, ஆண் மகன் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவனும், ஒருத்தியும் தனி இடத்து எதிர்ப்பட்டு மனம் ஒன்றிச் செய்து கொள்ளும் திருமணம் கந்தர்வ விவாகம் எனப்படும். அத்தம்பதியர் இல்லறம் ஏற்று நடத்துவர். எப்படிப் பார்த்தாலும் சாத்திரங்களில் கூறப்படும் எண்வகை மணமுறைகளைக் கடந்தது உன் வேண்டுகோள்.

உன் வாழ்க்கை கணிகைகளின் வாழ்க்கை. உன்னால் பல முனிவர்கள் தவம் இழந்து வருந்தி இருக்கின்றனர் என்று நீயே கூறுகின்றாய். எனவே தேவப்பெண்ணே ! புறப்படு ! நேரான வழியில் வாழ முயல்வாயாக என்று அருளினார் தேவலர்.

குன்றை முட்டிப்பார்த்த குருவி ஆனாள் அரம்பை, ‘‘கல்மன் படைத்தவரே ! பூக்களின் தேனை உண்டு அனுபவிப்பதற்கு வண்டுகள் கூட பல காதங்கள் சிரமம் பாராது பறந்து வரும். ஆனால் எங்கும் வண்டை நாடி மலர் பறந்து செலவது இல்லை. ஆனால் இங்கோ வண்டைத்தேடி மலரே வருந்தி வந்தும் வண்டு மறுப்பது முறையற்றதாகும். விரகவேதனையால் பலவாறு நான் கெஞ்சிக் கேட்டும் நார் என்னை நிராகரித்துவிட்டீர். நீர் உம் இருதிக் காலத்தில் வலிமை இழப்பீராக. பகைவரிடம் கட்டுண்டு துன்பம் அடைவீராக’’ என்று சாபம் இட்டு மறைந்தாள் அரம்பை.

தேவாங்க மாமன்னரால் ஆடைபெற்று அலங்கரித்ததை மறந்தாள் அரம்பை. உலகம் அவரால் மானங்காக்கப்பட்டதை மறந்தாள் . தன் தகாத ஆசைக்குத் தேவலர் இணங்காததால் சாபம் தந்தாள். உலகில் என்றைக்குமே தருமநெறி நடப்பவர்க்கே சோதனைகள் பலவரும் எனத் தெரிகின்றது. வந்த சோதனைகள் அனைத்தும் வேதனையையே தரும் போல் தோன்றிறுகிறது. என்ன செய்வது ? பொன்னாய் இருக்கும் காரணத்தினால்தான் அதனைப் பலமுறை தீயிலிட்டு உருக்கியும் தட்டியும் பலவகை ஆபரணங்கைள் செய்கின்றனர். அதற்காகத் தங்கம் வருத்தப்படவா செய்கின்றது ? இல்லையே.

அரம்பையின் சாபம் கேட்டு தேவாங்க மாமன்னர் வியப்படைந்தார். பின் தம் ஆமோதபட்டணம் நோக்கிப் பயணமானார்.

(தேவாங்க குலத்தின் மூத்த திருமகனின் தூய உள்ளம் கண்டு தேவாங்கர்
அனைவரும் பெருமைப்பட வேண்டும். அற்ப சுகத்தைத் துச்சமாகக் கருதிய அவருடைய திடசித்தம் தேவாங்கர் அனைவருக்கும் ஏற்பட்டடும். தூய நெறியில் வாழ்ந்த அவர் வாழ்க்கை நெறிகள் தேவாங்குல வாழ்க்கை நெறிகள் ஆக வேண்டும். உச்சி மீது வானிடிந்து வீழினும் நெறிதவறா அவருடைய உறுதி நம் குலத்தின் உறுதி ஆகவேண்டும். தேவாங்க தெய்வப் பிராமணனின் தவம் உலகிற்கு வழிகாட்டும் தவம் ஆன்றோ ?)

தேவாங்க மாமன்னர் திருமணம்

உலகில் இருளை ஒட்டி மருளை நீக்கும் சூரியதேவன், திருக்கயிலாய மலையில், சிவபிரான் தேவாங்க மாமன்னருக்குத் தன் தங்கை தேவதத்தையை மணமகளாக நிச்சயித்ததைத் தன் உள்ளத்தில் எண்ணி மகிழ்ந்தான். தன் தங்கையின் திருமண நன்னாளை நிச்சயிப்பதற்காகப் பிரம்ம தேவனிடம் சென்றான். அவரிடம் நாள் குறித்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினான்.

‘‘வைகாசி மாதம் சுத்த பஞ்சமி திதியில் சோமவாரம் (திங்கட்கிழமை) இரவு ஏழு நாழிகைக்குமேல் தனுசு லக்கினத்தில் திருமணம் என்று நன்னாளைப் பிரம்மதேவன் நிச்சயித்துக் கொடுத்தார். குதூகலம் அடைந்தான் சூரியதேவன்.

பிரம்மதேவரே ! தாங்கள் கணித்துத் தந்த திருநாளில் என் தங்கை தேவதத்தைக்கும் பராகிரமம் மிகுந்த தேவங்க மாமன்னருக்கும் திருமணம் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் திருத்தேவிமாருடன் சுற்றதம் சூழ, வருகைதந்து பெருமைப் படுத்த வேண்டும் என வேண்டிக் கொண்டான். அவ்வாறே பாற்கடல் சென்று பரந்தாமனிடமும், திருக்கயிலை சென்று சிவபிரானிடமும், தேவலோகம் சென்று தேவேந்திரனிடமும் பரிவாரம் சூழ திருமணத்திற்குவருகை தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தன் தூதுவர்கள் மூலம் மற்றும் உள்ள தேவர், முனிவர், யட்சர், கின்னரர் முதலான திரிலோகவாசிகளையும் திருமணத்திற்கு வருமாறு அழைப்பினை விடுத்தான்.

தேவலர் தன் முக்கிய அமைச்சர்களான சுபுத்தி, காரியதட்சன் முதலானவர்களை அழைத்துச் சூரிய தேவனிடம் சென்று திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட நாளை அறிந்து வருமாரு உத்தர விட்டார். பல நல்ல சகுனங்களைக் கண்டு மகிழ்ந்து கொண்டே அமைச்சர் இருவரும் சூரியலோகம் சென்றனர். தேவலரின் அமைச்சர்களைச் சூரியதேவன் வரவேற்றான். தக்க சன்மானங்களைச் செய்து பின் முகூர்த்த தினத்தைத் தெரியப் படுத்தினான். அமைச்சர்கள் ஆமோதபட்டணம் திரும்ப வந்து தேவலரிடம் செய்தியைத் தெரியப் படுத்தினர்.

‘‘இன்றைக்கு மூன்றாம் நாள் சோமவாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. உற்றார், உறவினர் சகிதம் வரவேண்டும்’’ எனச் சூரியதேவன் தன்அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் தேவலருக்குச் செய்தி சொல்லி அனுப்பினான் நால்வகைப் படைகள் சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க வீரமார்த்தாண்டன் ஆமோத பட்டணம் வந்தான். வீரமார்த்தாண்டன் வருவதை அறிந்த தேவலர் இன்னிசை முழங்க, மகிழ்வுடன் அவனை நகர்வலமாய் அழைத்துப் பெருமை செய்தார். செய்தியை உணர்ந்த தேவலர் மறுநாள் சூரியலோகம் வருவதாய்த் தகவல் சொல்லி அனுப்பினார். தேவலரின் செய்தியை உணர்ந்த சூரியன் பெருமகிழ்வு கொண்டான்.

விஸ்வகர்மனை அழைத்து திருமண மண்டகபம் அமைக்கச் சொன்னான். சூரிய பட்டணத்தின் மத்தியில் பொன்னாலும், நவரத்தினங்களாலும் இயன்ற திருமண மண்டபத்தை உண்டாகுமாறு மனதில் நினைத்தான். விஸ்வகர்மனின் நினைப்பின்படியே வெகுசிறப்பான திருமணமண்டபம் உண்டாயிற்று.
கம்பங்கள் பச்சை, வைடூரியங்களாலும், மேற்கூரை வைரங்களாலும், கீழ்த்தளம் புஷ்ப ராகத்தாலும் மண்டபம் எங்கிலும் நவரத்தினங்களும் விளங்கும் விதத்தில் விசாலமாக அம்மண்டம் பேரழகுடன் திகழ்ந்த்து. இத்தகு மண்டபத்தின் மத்தியில் முத்துக்களால் இயன்ற ஓரு சிறு மண்டபமும் முத்து மண்டபத்தின் மத்தியில் மணமக்கள் அமர நவரத்தின பீடமும் அமைந்திருந்தது.

பெரிய மண்டபத்தில் வேதவித்துக்களும், சாஸ்த்திரிமார்களும், தேவர்களும், மகரிஷிகளும் அமர்ந்து கொள்ள சுவர்ணமயமான சிம்மாசனங்கள அமைந்திருந்தன. மண்டபத்தின் கோபுரங்கள் மணிக் கோபுரங்களாகவும், அவற்றின் கலசங்கள் பலகோடி சூரியப்பிரகாசமாகவும் ஓளிவீசித் திகழ்ந்தன.

மண்டபத்தின் உள்ளும் புறமும் மங்கலார்த்தமான தெய்வீக விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

வீரமார்த்தாண்டனிடம் சொன்ன வாக்கினபடி தேவாங்க மாமன்னர் அமைச்சர் பிரதானிகளுடனும், நால்க்கைப் படைகளுடனும் , இஷ்டமித்தரர்களுடனும், முக்கியப் பிரஜை களுடனும். பற்பல நாட்டு மன்னர்கள் புடைசூழவும் மறுநாள் காலை மங்கள மூகூர்த்தத்தில் திருமணத்திற்குப் பயணப்பட்டார். வம்சாவளி கூறுவோரும் விருதுகள் கூறுவோரும் தத்தம் பணிகளைச் செய்து கொண்டு முதலில் புறப்பட்டனர். அனைவரும் சூரியலோகம் சென்றனர்.

சர்வலோக மானசம்ரட்சகர் வந்தார் ! சூத்திரகர்த்தர் வந்தார் ! வஸ்திரகர்த்தர் வந்தார் ! புஜபல பராக்கிரமர் வந்தார் ! மாமுனிபுங்கவர் வந்தார் ! முதல்வர் வந்தார் ! வைதிக குல செல்வர் வந்தார் ! தூய குணசம்பந்தர் வந்தார் ! என விருது கூறுவோர் சூரியலோகத்தில் தேவாங்க மாமன்னரின் அருமை பெருமைகளை விருதுகளாகக் கூறி முழங்கினர்.

தேவாங்க மாமன்னரின் தேர் சூரியலோகத்தில் ஓட ஆரம்பித்தது. வினோத விசித்திரமான பலவகை வாத்தியங்களும் முழங்க மங்கல மங்கையர் ஆலவட்டம் ஆலத்தி ஏந்திவர, தெய்வலோக கன்னியர் ஆடி-வர, மங்கல கீதங்கள் முழங்க நால்வகைச் சேனைகள் பின்னால் அணிவகுத்து வர மன்னர் புடைசூழ சூரியதேவன் தானே நேரில் வந்து எதிர் கொண்டு அழைக்க தேவலர் திருமண மண்டபம் அடைந்தார்.

சூரிய தேவனின் அழைப்பிற்கிணங்க பிரம்மா, திருமால், சிவபிரான், தேவேந்திரன் முதலியோரும் தத்தம் தேவிமாருடன் திருமண மண்டபத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். முனிலர்கள் ஆசிவழங்கிக் கொண்டு மனதில் மகிழ்ச்சி பொங்க அமர்ந்து இருந்தனர். உற்சாகம் கரைபுரண்டு ஓட சூரியலோகமே மங்கல உலகமாக மாறி இருந்தது.

ஸ்ரீசெளடேஸ்வரி தேவியை மனதில் தியானித்துக் கொண்டு அமர்ந்தார். தேவலர். தேவலர்கள் அவருக்குத் திருமணக்கோலம் செய்தனர். ஆடை தந்த அரிய வித்தகனுக்கு ஆடைகள் அணிவித்தனர். சூத்திரம் தந்த சூத்திரகர்த்தனுக்கு அணிமணிகள் பல பூட்டினர். மானங்காத்த மாவீரனுக்கு மணமிக்க பொடிகள் பல பூசினர். தெய்வீகம் விளங்கச் செய்த விமலனுக்கு மலர் மாலைகள் பல சூட்டினர்.

அரசியல் நன்னெறி காட்டும் அருங்கலை வினோதனுக்கு நவரத்தினக் கீரீடம் சூட்டினர். புஜபலபராக்கிரமம் காட்டி முனிவர் பலரை வாழச் செய்த முனிபுங்கவனுக்கு வாகுவலயங்கள் பூட்டினர். செங்கோல் ஏந்தும் திருக்கைகளுக்குப் பொன்னாபுரணங்கள் பூட்டினர். மலைபோன்ற மார்புதனில் பொன் அணி மணிகளைப் பூட்டினர். உலகெங்கும் புனிதம் பெற நடந்த பெற்பாத கமலங்களில் வீரக் கழல் அணிவித்தனர்.

தேவலரின் இயற்கை அழகினையும் அணிமணிபுனைந்த அழகினையும் கண்ட மன்மதன் வெட்கத்தால் தேய்ந்து மறைந்து அநங்கன் ஆனான்.

மணமகனாய் தேவலர் மணவறை ஆசனத்தில் அமர்ந்தார். மனமகிழ்வுடன் அவரையே நோக்கிக் கொண்டு இருந்த சூரியதேவன் தன் தங்கை தேவதத்தையை அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

சாமுத்திரிகா லட்சண சாஸ்திர விதிப்படியும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நால்வகைக் குணங்களும் நால்வகைக் படை களாகவும் சுவை, ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் ஐந்து அமைச்சர்களாகவும் விளங்க பெண்மை எனும் அரசை ஆண்டுவரும் தேவதத்தையை, தேவமாதர்கள் புனித நீராட்டி மகிழ்ந்தனர். அப்சரஸ் பெண்கள் ஆடை அணிமணிகளை ஏந்தி வந்து அலங்கரித்தனர்; மலர்மாலைகள் சூட்டினர்; சர்வாங்கங்களுக்கும் நவரத்தின சகிதமான ஆபரணங்களைப் பூட்டினர். ஆலத்தி சுற்றி கண்ணேறு கழித்துத் தேவதத்தையை இந்திராணி முதலிய தேவ மகளிர் அழைத்து வந்து மணமேடை ஆசனத்தில் அமரவைத்தனர்.

முரசு, பேரிகை, தவில், துந்தபி, சங்கம், எக்காளம், புல்லாங்குழல், நாதசுரம் முதலான பல்வகை வாத்தியங்கள் தேவதுந்துபியுடன் சேர்ந்து முழங்கின. சரஸ்வதி, இந்திராணி, பார்வதி, பூமடந்தை இலட்சுமி முதலான மங்கலதேவ மங்கையர் மங்கல கீதம் பாடினர்.

சங்கீத சாஸ்திரத்தில் வல்லவர்களான தும்புரு, நாரதர், கின்னரர் வித்யாதரர்கள் இன்னிசைபாட, அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான தேவகன்னிகள் பரத நாட்டியம் ஆடினர்.

வேதம் வல்லோர் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்கினர். தேவாங்க மாமன்னர் தேவதத்தையின் மணிக்கமழுத்தில் அழகிய திருமாங்கல்யத்தைக் கட்டினர்.

திரிமூர்த்திகளும் தேவர்களும், முனிவர்களும் அங்கிருந்த அனைவரும் ஆசிகள் வழங்கி மங்கல அட்சதைகளைத் தூவினர். திருமணச் சடங்குகள் அனைத்தும் வைதிக விதிப்படி நடந்து நிறைவேறியது.

சூரியதேவன் காமதேனு, கற்பக விருட்சங்களின் உதவியால் அனைவருக்கும் அறுசுவை உணவு படைத்து உபசரித்தான். சிந்தாமணியொத்த பல மணிகளைத் தானம் செய்தான். நான்கு நாட்கள் இத்திருமணம் வெகு சிறப்பாக நடந்து நிறைவுற்றது.

தேவாங்க மாமுனிவர் மனம்மிக மகிழ்ந்தார். சிவபிரான் உமாதேவி, திருமால் மகாலட்சுமி, பிரம்மா சரஸ்வதி முதலாக, தம் திருமணம் காணவந்திருந்த அனைவருக்கும் ஆடைகள் வழங்கினார்.

இறுதியில் உயர்தரமான ஆடை ஓன்றைப் பைரவனுக்கு வழங்கினார், தனக்குக் கடைசியில் ஆடை வழங்கியாதலும் அவ்வாடை மற்றவர்களுக்கு வழங்கியதைக் காட்டிலும் சற்றுத் தடிமனாக இருப்பதையும் கண்டு கடுங்கோபம் கொண்டான், தேவலர் தந்த ஆடையைக் கிழித்து அங்கிருந்த வன்னி மரத்தின்மீது எறிந்து விட்டு, ‘’தேவாங்கரே ! எல்லோருக்கும் உயர்ந்தரக ஆடை வழங்கினீர் எனக்குத் தரமற்ற ஆடை வழங்கினீர், எனக்கு முதலில் ஆடை வழங்காமல் கடைசியில் வழங்கினீர். ஆதலால் எனக்கு வேறு உயர்ந்த ரக ஆடை நெய்து தரவேண்டும்’’ என்று கூறினான்.

‘’பைரவனே ! வழங்கிய ஆடையை வீணாகக் கிழித்து எறிந்து அலட்சியம் செய்து விட்டமையால் இனி நான் உமக்கு ஆடைகள் வழங்க மாட்டேன்’’, என்று தேவலர் மறுத்துரைத்தார்.

பைரவன் சிவபிரானிடம் சென்று முறையிட்டான் – சிவபிரானும் தேவலரிடம் உண்மையை விசாரித்து உணர்ந்து கொண்டார். பைரவனே ! ‘’எந்த ஆடையை வன்னி மரத்தின் மீது கிழித்து எறிந்தாயோ அதனையே எடுத்து அணிந்த கொள்’’ என்று பைரவனைக் கோபித்துக் கொண்டார். இனி ஆடை இன்றி நிர்வாணி ஆவரய் எனச் சபித்தார். அன்று முதல் பைரவன் ஆடை அற்றவன் ஆனான்.

திருமண விழாவில் கலந்து கொண்டோர் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். தேவலர் சூரிய தேவனிடமும் அவன் மனைவி சாயாதேவியிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் பத்தனியுடனும் சூரியதேவன் தந்த சீர் சிறப்புகளுடனும் ஆமோதபட்டணம் வந்து அடைந்தார்.

அரசாட்சியும் அரிய மக்கட்பேறும்

தேவாங்க மாமன்னரின் அரசாட்சியில் சகர நாடு சுவர்க்கமாக மாறியது. தேவலர் புகழ் எங்கும் பரவியது. நீதி செழித்தது. பிரஜைகள் நல்ல சத்புத்திரர்களைப் பெற்றெடுத்தனர். தேவையான காலத்தில் தேவையான அளவு மலை பெய்து. வேள்ளக்கேடுகள், வறட்சிக்கேடுகள், நீங்கின. பயிர்பச்சைகள் செழித்து வளங் கொழித்தது. அனைவரும் தரும நெற்றியுடன் வாழ்க்கை நடத்தினர்.மன்னரின் செங்கோல் நல்லோருக்குக் காவலாக விளங்கியது. பகைவர் பயம், கள்ளர் பயம், காட்டு மிருகங்களின் பயம் எங்கும் இல்லாது போயிற்று.

அந்தணர்கள் வேதம் ஓதினர். தவம் யாகம் முதலியன சிறப்பற நடந்து வந்தன. அனைவரும் சாத்திரங்கள் பயின்றனர். எங்கும் வேத முழக்கங்கள் கேட்டன. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் முதலியன எங்கும் குறைவற நடந்துக் கொண்டு இருந்தன. வீரர்கள் வீரத்தொழிலில் சிறப்புற்று விளங்கினர். குறைவற வணிகம் நிறைவாக நடந்து வந்தது. வேளாண்மை அனைவருக்கும் உபகாரமாக நடந்து வந்தது.

தேவாங்க மன்னர் ஆட்சியில் உடல் ஏனமுற்றோர் என எவரும் இல்லை மோசம், துக்கம், தரித்திரம் என்பன மருந்திற்கும் இல்லையாயின்.

மங்கையர் தீர்க்கசுமங்கலிகளாய்ப் பதிவிரதா சிரோன் மணிகளாய் விளங்கினர். பொறாமை வரோதங்களின்றி வீதிகள் எங்கும் நேசமே மணந்தது. தர்ம சாத்திரத்தின்படி தேவாங்கர் சகர நாட்டை ஆண்டு வருங்காலத்தில் மும்மணிகளாய் அவருக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினர்.

தேவலரும், தேவதத்தையும் தம் கண்மணிகளைக் கண்டு களிப்புற்றனர். திவ்வியாங்கன், வமலாங்கன், தவளாங்கன் என அவர்களுக்கு நாமகரணம் சூட்டி நாளொரு மேனியாய் வளர்த்து வந்தனர்.

குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய வைதிகச் சடங்குகள் எல்லாம் குறைவற நடந்தன. தக்கவயதில் உபநயனம் செய்வித்து நல்ல ஆசிரியர்களால் சகல சாஸ்திரங்களையும், அரசர்க்குரிய கலைகளையும் கற்பித்துத் தக்க பருவத்தில் சூரிய தேவன் குமார்த்திகளான சுவர்ணப்பிரபாவை திவ்வியாங்கனுக்கும், பத்மாட்சியை விமலாங்கனுக்கும், சபலாட்சியைத் தவளாங்கனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

தேவல மாமன்னரின் மூத்த மகன் திவ்வியாங்கன் பட்டாபிஷேகம் சூணி தேவல மன்னரிடம் இருந்து அரசாட்சியைப் பெற்று அமைச்சர்களுடன் தன் தந்தையின் அரசாட்சியைச் செய்து வந்தான்.

ஆதிசேஷன் மகள் சந்திரரேகையிடமீக தேவாங்க மாமன்னருக்குப் பேரழகும், பண்பாடும், வீரமும் கூடிய சுதர்மன் என்ற மகன் பிறந்தான்.

குசத்தீவை அரசாண்ட சூரசேன மன்னன் ஆணவம் மிகக் கொண்டு தேவலர் மீது படையெடுத்தான். தேவலர் சூரசேனனுடன் பெரும்போர் புரிந்து சைனியங்களை அழித்து அவனையும் கொன்றார். பின் குசத்தீவைத் தம் வசப்படுத்திக் கொண்டு சுதர்மனைக் குச்த்தீவின் மன்னனாக்கினார். சவந்தி மன்னன் புத்திரியான புஷ்கலையைச் சுதர்மனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

சுதர்மனும் புஷ்கலையும் இல்லறம் எனும் நல்லறத்தை இனிது நடத்திக் கொண்டு குசத்தீவைத் தன் தந்தையைப் போலவே செங்கோல் செலுத்தி அரசாண்டு வந்தான்.

அசுரர் படையெடுப்பு

தேவர்கள், கந்தர்வர், யட்சர், கின்னரர், கிம்புருடர், மகரிஷிகள், நாகலோகத்தோர், மானிடர் முதலான அனைவரும் தேவலரிடம் ஆடைகள் பெற்றுக் கொண்டு அவற்றால் தம்மை அலங்காரம் செய்து கொண்டனர். பூணூல் பெற்றோர் அனைவரும் வைதிக மார்க்கங்களில் ஈடுபட்டனர். ஆனால் அரக்கர், அசுரர் போன்றோர் தேவனிடம் ஆடைகளும், பூணூலும் பெறவில்லை. ஆடை இல்லாமல் இருந்த அசுரர்களை அனைவரும் ‘’நிர்வாணிகள்’’ என்று கேலி செய்தனர்.

இக்கேலிப்பேச்சுகளை அசுரர் பொறுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம் மன்னனான வச்சிரதந்தனிடம் சென்று, தம் அவமானங்களைச் சொல்லி முறையிட்டனர். வச்சிரதந்தன் மூவுலகினையும் வென்று இந்திரனையும் வென்று திரிலோக சக்ரவர்த்தியாக வேண்டும் என ஆசைக் கொண்டிருந்தான். படையெடுப்பிற்குக் கேலிப் பேச்சுக்களையே ஒரு காரணமாகக் கொண்டான்.

வியாக்கர வக்கிரன், சர்வஜீவன் என்னும் தன் தம்பியர் இருவரையும் வரவழைத்தான்.’’தம்பிமார்களே! தேவலர் நெய்து தந்த ஆடைகளைத் தேவர்கள் அணிந்து அலங்காரம் செய்து கொண்டனர். ஆடை அணிந்த தேவர்கள் ஆடையற்ற நம்மை ‘’நிர்வாணிகள்’’ என்று கேலி பேசுகின்றனர். தேவர் , நாகர், மானிடர் எனத் திரிலொக வாசிகளுக்கும் ஆடை வழங்கிய தேவலர் நம்மவர்களுக்கு ஆடை வழங்கவில்லை. பரமேஸ்வரனும் நமக்கு ஆடை வழங்குமாறு கூறவில்லை. ஆகையால் தோள்வலிமையால் நம்மைக் கேலிபேசும் தேவர்கள் முதல் அனைவரையும் வென்று திரிலோக சக்ராதிபதியாக நான் முடி சூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்’’ என்று வச்சிரதந்தன் தன் தம்பிமார்களிடம் கூறினான்.

‘’அண்ணா! தேவர்கள் நம்மைக் கேலி செய்வது உண்மை. அதனால் நம்மவர் உள்ளம் வருந்துவதும் உண்மை. ஆயினும் தேவர்களைப் போரில் வெல்வது எளிதல்லவே. சக்ரதாரியான ஸ்ரீமந் நாராயணன் தேவர்களின் உதவிக்கு வருவார். அவரை வெல்லும் திறம் படைத்தோர் யாரும் இல்லையே’’ என அவன் தம்பிமார் கூறினார்.
சகோதரர்களே! துவக்க காலத்திலே நாம் அஞ்ச வேண்டியதில்லை. பயத்தை விட்டொழியுங்கள். தேவர்களை நாம் போரில் வென்று துரத்தியபின்னல்லவா மாகாவிஷ்ணு வரப்போகிறார்? அவர் போர்க்களத்தில் நுழையும்போது அதற்கு ஏற்ற உபாயங்களைச் சிந்திப்போம். நாம் சிவபிரானை நோக்கித் தவம் செய்வோம். அவரிடம் வரங்கள் பெறுவோம். வரபலத்தால் தேவர்களை வெல்வோம் என்று வச்சிரதந்தன் கூறினான்.

தம்பியர் இருவரும் தமையன் கருத்தினுக்கு உடன்பட்டனர். மூவரும் கானகம் அடைந்தனர். தவத்திற்கு ஏற்ற அக்கானகத்தில் மனதினைச் சிவத்திடம் செலுத்திப் புலங்களை அடக்கிக் கடும் தவம் புரிந்தனர், கூரியநகங்கள் நீண்டு வளர்ந்தன. தலைமுடி சடைமுடி ஆயிற்று. சடைமுடிகளில் பறவைகள் கூடுகட்டி வாழலாயின. எலும்புக்கூடாய் மாறினர் மூவரும். தவத்திற்க்கு மெச்சிய சிவபிரான் அவர்கட்குக் காட்சித் தந்தார்.

‘’அரக்கர்களே! உம் தவத்திற்க்கு மெச்சினேன். வேண்டும் வரங்களைக் கேளுங்கள்’’ என்று அருளினார் மங்கைபாகன்.

சிவபெருமானைப் பலவாறு போற்றித் துதித்து மகிழ்ந்தனர் அரக்கர்கள். ஆடினர், பாடினர். வணங்கிணர் பலமுறை. ’’தேவதேவா! சர்வசதாகாலமும் சூரிய வெளிச்சமே இல்லாமல் உலகம் அந்தகாரம் அடையவேண்டும்! இவ்வரம் அருள்புரிக என்று வேண்டினர்.

‘’அசுரர்களே! நீங்கள் வேண்டும் வரம் சரியானதன்று. உலகோர்க்குக் கண்போன்றவன் சூரியன். அவன் ஒளி இல்லையாயின் உலக இயக்கம் தடுமாறிப் போகும், தாவரசங்க-மங்களான அனைத்தும் மறைந்து விடும். எனவெ வேறுவரம் கேளுங்கள்’’ என்று கூறினார்.

பெருமானே! அப்படியாயின் ஒராண்டு காலமாவது சூரிய ஒளியின்றி உலகம் இருக்க அருள்புரிவீராக’’ என்று மீண்டும் மன்றாடினார் அசுரர்.

‘’அங்ஙனமே ஆகுக’’ என வரமீந்து மறைந்தான் கங்காதரன். உடனே உலகம் இருள் சூழ்ந்தது. அசுரர் ஆணவம் மிகக் கொண்டனர். இருள்காலம் நமக்கு வலிமை தரும் காலம். இக்காலத்தில் யாரும் நம்மை வெல்ல இயலாது. இருள் இருக்கும் போதே அனைவரையும் வென்று ஆட்சிதனைக் கைப்பற்ற வேண்டும் என வேகம் மிகக் கொண்டனர்.

தம் தலைநகரான வீரமகேந்திர பட்டணம் அடைந்தனர். நாற்புரமும் தூதுவர்களை விரைந்து அனுப்பினர். உலகெங்குமுள்ள அரக்க அசுரர்களையெல்லாம் தேவலொகப் படையெடுப்பிற்க்கு ஆயத்தமாக வந்து சேருமாறு கட்டளை இட்டனர். அரக்கர் அனைவரும் தலைநகரில் வந்து ஒன்று சேர்ந்தனர்.
தேவலோகப் படையெடுப்பு

வச்சிரதந்தன் வச்சிரக் கவசம் பூண்டான். அம்பறாத்தூணி, வேல். வாள், வில் ஆகியவற்றைத் தாங்கித் தேரேறினான். அவன் குமாரர்கள் சூரிய கோபன்,அக்நிகோபன் என்னும் இருவரும் சேனைத் தலைவர்களான தூம்ரநேத்திரன், கடகநாவன் என்னும் இருவரும் நால்வகைப் படைகளுடன் அணிவகுத்து நின்றனர். பலவகை ஆயுதங்களைத் தாங்கிய தூசிப்படை மின்னணயில் நின்றது. போர்முரசு முழங்கியது. படைகள் இந்திரனின் பட்டணமான அமராவதியை நாலாபுறமும் சூழ்ந்து தாக்கத் தொடங்கின.

தேவேந்திரன் தன் தேவப்படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து அரக்கர்களுடன் கடும்போர் புரிந்தான். அரக்கரின் படைகள் அனைத்தும் இந்திரனின் சரமாரிகளால் தடுமாறலாயின. இந்திரனின் வேகம் பொறுக்காத அரக்கப்படைகள் அமராவதிப் பட்டணத்தை விட்டு ஓடலாயின. தேவப்படைகள் பின் தொடர்ந்து அரக்கப்படைகளை வேட்டையாடத் தொடங்கின.

வச்சிர தந்தன் பிரளயகாலருத்தினாக மாறினான். கடுங்கோபங் கொண்டான். ஓடும் தன் படைகளைத் தடுத்து நிறுத்தினான். அணிவகுப்பைச் சரி செய்து கொண்டு தேவப்படைகளை மீண்டும் தாக்கத் தொடங்கினான். இரு சேனைகளுக்கும் கடும்போர் மூண்டது. கடல் அலையோடு அலைமோதுதல் போல் குதிரைப் படைகள் மோதின. மேகங்களுடன் மேகங்கள் மோதுதல் போல் தேர்களோடு தேர்கள் மோதின. மலைகளோடு மலைகள் மோதுதல் போல் யானைகள் மோதிக் கொண்டன. புலிகளோடு புலிகள் மோதுவதுபோல் வீரர்கள் மோதிக் கொண்டனர்.

வேலும், சூலமும், அம்புகளும், கத்தி, கட்டாரி போன்றனவும் எங்கும் பறந்து கொண்டு இருந்தன. ரதங்கள் ஓடும் ஓலி, யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு ஒலிகள், வீரர்களின் சப்தங்கள் போன்ற ஒலிகள் திசைகளைச் செவிடு ஆக்கின.

எங்கும் இருள் சூழ்ந்த அவ்வேளையில் வாள் வீச்சின் ஒளியாலும் முடிகளின் கதிர் வீச்சாலும் போர் நிகழ்ந்து கொண்டு இருந்தது. இருதியில் தேவர்படை தோற்று ஒடி ஒளிந்து கொண்டது.

வச்சிரதந்தன் அன்றைய போரை அத்துடன் நிறுத்தித் தன் படைகளைத் திரும் அழைத்தான். தன் தலைநகர் சோந்தான்.

இந்திரன் தேவர்களுடன் ஆலோசித்தான். திருக் கயிலைமலை சென்று பரமசிவமூர்த்தியை வணங்கி நின்றான்.

அஸ்வமேதயாகம் நூறு செய்து சுவர்க்க அதிபதியான இந்திரனே நலமா ? உன் ஆளுகைக்கு உட்பட்ட தேவர்கள் நலமா? எனப் பரமசிவன் வினவினார்.

கருணாமூர்த்தியே ! தங்கள் கிருபையினால் நேற்று வரை சுகமாக வாழ்ந்து இருந்தோம். துன்மார்க்கனான வச்சிரதந்தன் படைகளுடன் அமராவதியை முற்றுகையிட்டு எங்குடன் போர் தொடுத்து விட்டான். அவனுடனோ அவன் தம்பிமார்களுடனோ அவன் குமாரர்களுடனோ சரிசமமாய்ப் போர் செய்யும் ஆற்றலுடையவர்கள் சரண் புகுந்தோம். எங்களைத் தாங்குதல் தருமம்’’ என்று வேண்டினான் இந்திரன்.

அஞ்சேல் ! அஞ்சேல் ! என அபயம் தந்த சிவபிராமன் தேவலரைத் தம்மிடம் வருமாறு மனதில் தியானித்தார். அந்த நொடியே தேவலர் தோன்றி வணங்கி நின்றார்.

தேவர் சகாயன்

தேவாங்க மன்னரே ! நீர் உம் புத்திரர் முதலான சைனியங்களுடன் இந்திரலோகம் சென்று அரக்கர்களை வென்று அவர்களை அழிக்க வேண்டும். தேவர்களைக் காக்க வேண்டும் என்று அருளினார் சிவபிரான்.

தேவாங்க மன்னர் தேவர்களையெல்லாம் தேவலோகம் செல்லுமாறு அனுப்பிவிட்டு ஆமோதபட்டணம் வந்தடைந்தார். தம் நால்வகைப் படைகளையும் விரைவில் அழைத்துவரக் கட்டளையிட்டார். சமுத்திரங்கள் எழும் ஒன்று திரண்டார் போல் தேவாங்கர் சைனியம் திரண்டது. சேனைகள் அணிந்தார் தேவலர். பலவகை ஆயுதங்கள் தரித்தார். நவரத்தின கசிதமான கிரீடம் அணிந்தார். முழுமையான போர்க்கோலம் பூண்டார். காற்றாய்க் கடிது செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் ஆரோகணித்தார். சைனியங்களை நடத்திக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார்.

தேவலரைக் கண்டு இந்திரன் மகிழ்ச்சி மிக்க கொண்டான். அவரைத் தழுவி மகிழ்ந்தான். தன் சிம்மாசனத்தில் தேவலரை அமர வைத்தான். இந்திரனின் ஆசனத்தைத் தேவாங்கர் அலங்கரித்தார். ‘‘உம்மால் என் மனக்கவலை நீங்கியது. நான் பிழைத்தேன்’’ என்று கூறி மகிழ்ந்தான் இந்திரன். பின்னர் தேவாங்கர் படைகளும் தேவப் படைகளும் ஒன்று சேர்ந்து அரக்கருடன் போர் தொடங்கப் போர்க்களம் புறப்பட்டன. வச்சிரதந்தன் தன் படைகளுடன் போர்க்களம் வந்தான்.

இருதரப்புப் படைகளும் மோதிக் கொண்டன. தேவலர் வில் சோனைமாரி போல் சரமழை பொழிந்தது. அரக்கர் தீயிலிட்ட பஞ்சு போல் கருகி எரிந்தனர். அங்கங்கள் பங்கப்பட்டுப் பதறினர் பலர். தேவாங்கரின் பாணங்கள் இரண்டு வச்சிரதந்தன் வில்லையொடித்துக் கவசத்தை வீழ்த்தியது. மற்றும் பல பாணங்கள் தேரை அழித்துப் பாகனைக் கொன்றன. அரக்கரின் ரத்தம் ஆறாய்ப் பெருக அவர் உடலை நாய் தரிகளும் இழுக்கலாயின. பிண மலைகள் தோன்றலாயின. தேவாங்கரின் பராக்கிரமத்திற்கு ஆற்றாத அரக்கர் நாளை வருவோம், நாளை வருவோம், நாளை தாகபராக்கிரம சாலியான வியாக்கிர வக்கிரனை அழைத்துக் கொண்டு வந்து போர்புரிவோம் என ஓடலாயினர்.

வியாக்கிர வக்கிரன் வதம்
முதல் நாள் போர்ல் தோற்ற வச்சிரதந்தன் வியாக்கிர வக்கிரனுக்கு அழைப்பினை விடுத்தான். மறுநாள் உஷத் காலத்தில் விஞாக்ர வக்கிரன் தலைமையில் அரக்கர்படை அணி வகுத்தன. போர் துவங்கியது. வியாக்கிர வக்கிரன் தன் தேரை தேவலர்முன் செலுத்தினான். தேவாங்க ராஜன் ! நேற்றைய தினம் யுத்தத்தில் உனக்குச் சமமான வீரர்கள் இல்லாத்தால் அரக்கர்படை சிதறியது. உன் வீரமே வீரம் ! இன்றைக்கு என்னை வெல்லுவாயே யானால் திரிலோகத்திலும் உனக்கு இணையான வீரர்கள் இல்லை எனலாம் என்று கூறிக்கொண்டே தீமுகக் கணைகள் பலவற்றைத் பலவற்றைத் தேவாங்கர் மீது செலுத்தினான்.

தேவாங்கரோ சூரியனோ என்று எண்ணுமாறு பிரகாசிக்கும் பாணங்களால், அரக்கனின் பாணங்களைப் பொடிப் பொடியாக்கினார். அரக்கன் மீண்டும் ஆயிரம் பாணங்களை ஏவ அவற்றை நூறு பாணங்களால் தூள் தூள் ஆக்கினார்.

கடுங்கோபம் கொண்ட தீய வியாக்கிர வக்கிரன் அக்நியாஸ்திரத்தை ஏவ அதனை வருணாஸ்திரத்தினால் சூரியன் முன் இருள்போல் ஒழித்தார். வருணாஸ்திரத்தை ஏவினான் அரக்கன் அண்டங்களை எல்லாம் அழிப்பேன் எனப் பெருமழை பொழிந்து வரும் அரக்கனின் வருணாஸ்திரத்தூக் கண்டு இந்திரன் மதி மயங்கி நின்றான். மாயையைக் கடந்து நிற்கும் தேவலர் அவ்வஸ்திரத்தை வாயு வாஸ்ரத்தால் அழித்தார்.
அக்நி யாஸ்திரத்திற்குச் சமமான பல்லாயிரம் பாணங்களால் வியாக்கிரவக்கிரன் மேலும் கீழும் சரகூடம் போல் கட்டி நெருப்பு மழை பொழியச் செய்தான். மூன்றே மூன்று பாணங்களால் அச் சர கூடத்தைத் தவிடுபொடி ஆக்கினார் தேவாங்கர்.

இவ்வாறு இருவரும் போர்செய்யுங்கால் தேவலரின் சக்தி வாய்ந்த பாணம் ஒன்று அரக்கனின் தேரைக் குயவன் சக்கரம் போல் சுழற்றி மேலே தூக்கி எறிந்தது. ஆக்கினார் தேவாங்கர்.

தேர் இழந்த வியாக்கிரவக்கிரன் ஒரு தண்டு ஏந்தி போருக்குவர, தேவலர் தேர்விட்டு இறங்கித் தாமும் ஒரு தண்டாயுதம் ஏந்தி வந்துபோர் புரிந்தார். இரு பெரும் மலைகள்போல் இருவரும் இடசாரி வலசாரி திரிந்து கடும்போர் புரியலாயினர்.

தண்தாயுதம் நொறுங்கி விழ வியாக்கிரவக்கிரன் வேறு தேர் நாடித் தன் பாசறைக்குள் ஓடினான். இருவரும் நிகழ்த்திய விசித்திரமான போரைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் இதுவன்றோ போர் என்று வியந்து நின்றனர். பிரளய காலருத்திரனும் எமனும் போல் இருவரும் போர் செய்கின்றனரே ! என்று வியந்து பேசிக் கொண்டனர்.

தேவலர் தேரில் அமர்ந்து அரக்கனின் வருகையை எதிர்நோக்கி இருந்தார். அரக்கனும் வேறு தேர் ஏறி போர்க்களம் வர அவனுக்கு அவகாசமே கொடாமல் சாரதியையும் தேர்க்குதிரைகளையும் கொன்று ஓழித்து அர்த்த சந்திர பாணத்தால் அவன் சிரத்தையும் துண்டித்தார். பொன்முடி அணிந்த அரக்கனின் தலை அறுபட்டு வானில் கிறுகிறு எனச் சுழன்று கீழே விழந்தது.

வியாக்கிரவக்கிரன் மடிந்த்தைக் கண்ட அரக்கர் படை பினவாங்கி ஒடியது. இந்திரன் தேவலரை மார்புறத் தழுவி மகிழ்ந்தான். பலவாறு புகழ்ந்து கொண்டாடினான்.
நந்திக் கொடியின் நலம்

பாரோர் போற்றும் பராக்கிரம சாலியான வியாக்கிரவக்கிரன் மடிந்த செய்தி அறிந்தான் வச்சிரதந்தன். பெருங்கோபமும் துக்கமும் கொண்டான். தேவல மன்னரைக் கடுமையாய் போர்க்களம் வந்து எதிர்த்தான். ஓருவரை ஓருவர் வெற்றி கொள்ளும் எண்ணத்துடன் படுபயங்கரமான யுத்தத்தில் இருவரும் ஈடுபட்டனர். வச்சிரதந்தன் தேவலர் மீது பாணமழை பொழிந்தான். தேவலரும் வச்சிரதந்தன் மீது சீறிப் பாய்ந்து தம் பாணங்களால் அவன் தேரையும் தேர்க் குதிரைகளையும் அழித்தார். வச்சிரதந்தன் நிராயுத பாணி ஆனான்.
வலுவான கதாயுதம் ஓன்று கொண்டு தேவலர் தலைக்குக் குறிவைத்து அரக்கன் வீசினான். தேவாங்கரின் பாணங்கள் கதையைப் பொடிப் பொடியாக்கின.

ஆத்திரத்தில் அறிவிழந்த வச்சிரதந்தன், ஏ தேவாங்க மன்னரே ! என் தம்பியைப் போரில் வென்று விட்டோம் என்று கர்வத்தில் போர் புரியாதீர் ! இதோ ! ஓரு நொடியில் உம்மையும் இந்தத் தேவர்களையும் வென்று, உம்மை என் விருப்பப்படி ஆடைகள் நெய்து தர வைக்கிறேன்’’ என்று கூறி ஹேம கூட பர்வதத்தின் சிகரங்களில் ஓன்றைப் பறித்துச் சுழற்றி வீசினான்.

பர்வத சிகரம் பயங்கரமாக ஆகாய மார்க்கமாய் வரலாயிற்று. தேவர் படைகள் சிதறி ஓடலாயின. முனிவர்களும், சித்தர்களும் தேவலர் வெற்றி பெற வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொண்டனர். வச்சிரமயமான தேவலரின் பாணங்கள் மலையைத் துகள் ஆக்கின. தேவலர் பின்னும் தம் அம்பு மழையால் அரக்க சைனியங்களைச் சிதறி ஓடச் செய்தார்.

நேரான போரில் தேவலரை வெற்றி கொள்ள முடியாது என உணர்ந்த அரக்கன் மாயப்போர் துவங்கினான். தான் கற்ற மாயங்களை எல்லாம் செய்து காட்டத் துவங்கினான்.

தேவர்களின் மீது மண்மாரி, கல்மாரி பெய்தது. ஊழிக்காலக் காற்று வீச ஆரம்பித்தது. தேவர்களின் படை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது,

நந்திக்கொடி தந்த நலமான வெற்றி

இதனைக் கண்டார் தேவலர், ஆதியில் சிவபிரானல் தமக்குக் கொடுக்கப்பட்ட நந்திக் கொடியை எடுத்தார். அற்புதச் சக்திவாய்ந்த அந்த நந்திக் கொடியை மந்திரம் ஓதி, பூசித்து அதனை அரக்கர்கள் மீது பிரயோகித்தார்.

நந்திக்கொடி அரக்கர் நடுவில் புகுந்தது. பயங்கரக் காளைகளும், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், மதங்கொண்ட யானைகள், விசித்தரமான கரடிகள், உக்கிரமான அண்டபேரண்டப் பறவைகள். கழுகுகள் என இவை கோடி கோடியாய் தோன்றி அரக்கர்களை வதைக்கத் தொடங்கின.

இதனைச் சற்றும் எதிர்பாரத வச்சிரதந்தன் எஞ்சியுள்ள அரக்கர்களுடன் உயிர்பிழைத்தால் மகாபாக்கியம் எனப் போர்க்களம் விட்டு ஓடிப்போனான்.

தேவலரும் தம் சைனியங்களுடன் இந்திரனிடம் விடைப் பெற்று கொண்டு ஆமோதபட்டணம் சென்றார். தேவாங்கரின் உதவியினால் இந்திரன் பெரு மகிழ்ச்சி கொண்டான்.

வச்சிரதந்தனின் தம்பியர்களான வியாக்கிர வக்கிரன், சர்வஜுவன், அவனது குமாரர்களான சூரியகோபன், அக்நிகோபன், சைனியத் தலைவர்களான தூம்ர நேத்திரன், கடகநாபன் முதலானவர்களும் கணக்கற்ற அரக்க சைனியங்களும் இப்போரில் மாண்டனர்.

வாழையடி வாழை

அரக்கர் குலத்தலைவனாலன வச்சிரதந்தன் மிகுந்த துக்கங் கொண்டான். போரில் மாண்டு போன சகோதரர்கள், மக்கள், மருகர், சேனைத்தலைவர்கள், சேனைவீரர்கள் இவர்களை எண்ணி எண்ணி மறுகினான். ஊதுலைத் துருத்தி போல் பெருமூச்சு எறிந்தான். தேவாங்கரின் பெருவீரத்தை எண்ணி உள்ளம் சாம்பினான். நந்திக் கொடியின் மகிமையை சிந்தித்து உள்ளம் தடுமாறினான். அனலிலிட்ட மெழுகுபோல் உருகினான். துன்பக் கடலில் இருந்து தன்னை மீட்பார் இல்லையா ? என ஏங்கினான்.

ஓருவாறு மனம் தெளிந்து தனக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கும் நண்பன் வித்யுந்தேசனை நாடிச் சென்றான். வித்யுந்தேசன் தக்க மரியாதைகளுடன் வச்சிரதந்தனை வரவேற்று உயர்ந்ததோர். ஆசனத்தில் அமரச்செய்தான்.

என் நண்பனும் மைத்துனனுமான வித்யுந்தேசனே ! தேவாங்கருடன் ஏற்பட்ட போரில் நான் அடைந்த தோல்வியைக் கேள்விப்படவில்லையோ ? தேவர்களின் கேலிப்பேச்சு மேலும் மேலும் அதிகம் ஆகுமே ! தேவலரை வெல்ல முடியவில்லையே ! அவரால் அல்லவா தேவர்கள் வெற்றி பெற்றார்கள். இனி நம்மால் தேவர்களை வெல்ல இயலாதே. தேவாங்கரின் துணை இனிப்போரில் தேவர்களுக்குக் கிடைத்துக் கொண்டு இருக்குமே ! நந்திக்கொடியால் அரக்க இனம் பெரும் அழிவுக்கு ஆளானதே ! உலகினை எல்லாம் தனித்து வெல்லும் வலிமை கொண்ட என் தம்பிமார், மக்கள் முதலியோர் தேவலரால் கொல்லப்பட்டனரே ! என் சைனியங்கள் சர்வ நாசம் பெற்றனவே. தேவாங்கரின் ஆற்றல் வெல்லமுடியாத ஆற்றலாய் இருக்கிறதே!

பிரம்மதேவனும், இந்திரனும், இமயனும் மற்றும் உள்ள வலிமை வாய்ந்த தேவர்கள் அனைவரும் ஒருவடிவாகி தேவலரை வெல்ல இயலாது. அவரிடம் இருக்கும் நந்திக்கொடி ஒரு நொடியில் மூன்று லோகங்களையும் பஸ்மீகரம் செய்து விடுமே ! அதனை நினைந்து நினைந்து நான் நடுங்கிக் கண்ணீர்ப் பெருக்கிக் கொண்டு உள்ளேன். அக்கொடியின் பிரதாபங்களை வருணிக்கவோ ! மனதால் செய்யவோ முடியாததஆய் இருக்கின்றது. அது ஈஸ்வரனால் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அதனால் நீ என்ன வஞ்சகம் செய்வாயோ அல்லது ஏது செய்வாயோ தேவல மன்னரிடம் இருக்கும் நந்திக் கொடியைக் கவர்ந்து வருவாயேயானல் தேவலரை வென்று விடலாம். நாமும் தேவலரைக் கைப்பற்றலாம். அவர் மூலமாக அரக்க இனமும் ஆடைகள் பெறலாம். தேவர்களின் கேலிப்பேச்சிலிருந்து பிழைக்கலாம். எனவே நம் காரியங்கள் ஜெயம் அடைவதற்கு ஒரே வழி நந்திக் கொடியைக் கைப்பற்றுவதாகும் என்று வச்சிரதந்தன் கூறினான்.

‘’தேவலரிடம் இருக்கும் நந்திக்கொடியை நான் கைப்பற்றியே தீருவேன். இக்கணமே புறப்படுகின்றேன்’’ என்று வச்சிரதந்தனிடம் விடை பெற்றுச் சென்றான் வித்யுந்தேசன்.

வஞ்சனையும் வஞ்சக வேடமும்

தேவகுமாரனைப் போல் மங்கல வேடம் தரித்தான் வித்யுந்தேசன். ஆமோதபட்டணம் சென்றான். தேவல மன்னரின் சமூகம் சென்று வணங்கினான். தன்னை இந்திரனின் தூதன் என்று கூறிக் கொண்டான். சத்தியம், நேர்மை, தருமம் இவற்றைத் தவிர வேறு அறியாத தேவாங்க மாமன்னரும் அவனைத் தேவ தூதனாக நம்பி, வந்த செய்தியைக் கூறுமாறு கேட்டார். ‘’ மன்னர் மன்னா ! வச்சிரதந்தன் கணக்கற்ற சேனைகளுடன் தேவலோகத்தை முற்றுகை இட்டு இருக்கின்றான். நடந்த யுத்தத்தில் தங்களின் சைனியங்கள் களைப்புற்று இருப்பதினால் தேவந்திரன் தங்களின் சைனியங்களின் உதவியை வேண்டாமல் தானே தேவசைனியங்களுடன் போர் புரியச் சென்றுள்ளார். தங்களின் மேலான உதவியைத் தேவந்திரன் எதிர்நோக்குகின்றான். உங்களின் உதவி இல்லாமல் அரக்கர்களை எதிர்கொள்வது என்பது முடியாத காரியம். தாங்களோ கடந்த போரில் பெரும் உதவிகள் செய்துள்ளீர். அடிக்கடித் தங்களைப் போர்முனைக்கு அழைக்க விரும்பாத இந்திரன் தங்களின் நந்திக் கொடியின் உதவியை வேண்டுகின்றார். தாங்கள் நந்திக் கொடியைக் கொடுத்தால் அதன் மகிமையால் அரக்கர்களை வென்று மீண்டும் கொடியைத் திரும்பக் கொடுப்பதாகக் கூறி அனுப்பினார்’’ என்று கூறினான் அவ்வஞ்சகன்.

உலகில் சத்தியவான்கள், அனைவரையும் சத்தியக்கண் கொண்டு பார்த்தலின் அவர்களுக்கு எல்லோரும் சத்தியவான்களே ! தேவலர் வஞ்சனான அவன் கூறியன யாவும் உண்மை என நம்பி அவனிடம் அரிய மகிமைகளை உடைய நந்தித்துவஜத்தைக் கொடுத்தார். தூதனே ! “இந்த த்வஜத்தை யார் தோத்திரம் செய்து அருச்சித்தாலும் அவர்கள் விரும்பிய வண்ணமே பகைவர்களை அழித்து வெற்றியை உண்டாக்கும்’’ என்று கூறினார்.

வேஷதாரி மகிழ்ந்தான். தேவர்களை வென்றோம் என்று அக்கணமே முடிவு செய்தான். வீரமகேந்திர பட்டணம் வந்தான்.வச்சிரதந்தனிடம் கொடியைக் கொடுத்தான். மைத்துன்னைப் பலவாறு புகழ்ந்தான். அவனை மார்புறத் தழுவிக் கொண்டான் வச்சிரதந்தன். சதுரங்கசேனைகளுடன் அக்கணமே புறப்பட்டான். சுவர்க்கலோக வாசலில் போர்ப்பறை முழங்கினான்.

தேவர்களின் தோல்வி

கடந்த போரில் வெற்றிப் பெற்ற தேவப்படைகள் வேற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைத்து இருந்தன. போர் முழக்கம் கேட்ட தேவர்கள் திடுக்கிட்டனர். வியப்படைந்தனர். மீண்டும் வச்சிரதந்தன் போருக்கு வந்தான் என கேள்விப்பட்டுப் போர்முனைக்கு வரலாயினர். இருதிறப்படைகளும் கடும்போர் புரியலாயினர். அனைவருக்கும் வெற்றி என்பதே லட்சியமாக இருந்த்து.

வச்சிரதந்தனை வெற்றி பெற இயலாது என்பதை நன்கு உணர்ந்த தேவேந்திரன் தேவலருக்குத் தூது அனுப்பினான். நால்வகைப் படைகளுடன் அவரை உடனே உதவிக்கு வருமாரு வேண்டிக் கொண்டான்.

உண்மைத் தேவதூதன் தேவாங்கரை வந்து வணங்கினான். இந்திரனின் செய்தியைக் கூறினான்.’’தவத்தில் மிக்க தேவாங்கரே! வச்சிரதந்தன் மீண்டும் போர் துவங்கி விட்டான். தங்களின் போர் உதவியை இந்திரன் வேண்டுகின்றான்’’ எனக் கூறினான்.

‘’நேற்றைய தினம் நந்திக் கொடியைப் பெற்றுச் சென்ற இந்திரன் இன்றைக்கு தம் உதவியை வேண்டுகின்றானே’’ என்று சிந்திக்கத் தொடங்கினார் ,தேவலமாமன்னர் . நந்தித் துவஜத்தின் வல்லமைக்கு ஈடு இணை கிடையாதே! அதனை வைத்து இருக்கும் இந்திரன் ஏன் இன்னும் வெற்றி பெறவில்லை. நந்திக் கொடி இருக்கும்போது என் உதவி தேவையே இல்லையே! ஒருவேளை நந்திக்கொடியை இந்திரனிடம் இருந்து வஞ்சகமாக அரக்கர் கவர்ந்து கொண்டார்களா? என்று யொசித்து, முடிவில் தன் குமாரர்கள், சேனைத்தலைவர்கள், சதுரங்க சேனைகளுடன் கவர்க்கலோகம் சென்றார்.

போர்க்களத்தில் நந்திக்கொடி
தேவலர் போர்க்களம் செல்லுவதற்கு முன்பே வச்சிரதந்தன் நந்திக்கொடியைத் தேவர்கள் மீது ஏவியதால் தேவர்கள் பெரும்துன்பங்களை அனுபவித்து கொடியின் மகத்துவத்தினால் போர்களத்தை விட்டே ஓடிவிட்டனர். இதனை உணர்ந்த தேவாங்க மன்னர் பெருவேகத்துடன் போர்களம் புகுந்தார். வீராவேசத்துடன் அரக்கர் மீது அஸ்திரப் பிரயொகங்கள் செய்தார். அரக்கர்கள் தேவலரை நாலாபுரமும் சூழ்ந்தனர். வச்சிரதந்தன் தேவலர் மீது நந்திக் கொடியைப் பிரயோகித்தான்.

சாபம் பலித்தது

நாடகத்தைப் பலர் பார்க்கின்றனர். நாடகக் கதையில் , நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களை நடிகர் வழியாகக் காணுகின்றனர். நாடகக் கதாபாத்திரத்தில் , அதனை ஏற்று நடிக்கும் நடிகர்களின் சொந்த வாழ்க்கை குறுக்கிடுவதில்லை.நாடகத்தில் அரசனைக் காணுவோர் அவ்வேடம் தாங்கும் நடிகனையோ அவன் தனி வாழ்க்கையையோ மேடையில் காணுவதில்லை. பரம்பொருளே தேவலராக மானுடவேடம் தாங்கி நடிக்க வந்தது. தான் ஏற்ற வேடத்தில் என்ன செய்யவேண்டுமோ எப்படி நடிக்க வேண்டுமோ அப்படியே நடித்தது. தன் மேன்மையை அது சிந்தித்துப் பார்க்கவில்லை. அச்சிந்தனை வருமாயின் நாடகம் பாழ் ஆகிவிடுமே.

நந்திக் கொடியின் பிரதாபத்திற்குத் தேவலர் கட்டுப்பட்டார். அரக்கர்கள் தேவலரின் தேரைச் சூழ்ந்தனர். சிலர் சாரதியையும், சிலர் குதிரைகளையும் பிடித்துக் கொண்டனர். அரம்பையின் சாபத்தைத் தேவாங்கர் ஏற்று நின்றார். பகைவரிடம் கட்டுப்பட்டார். வீராதி வீரர் நிராயுதபாணி ஆனார். வச்சிரதந்தன் அவரைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். வீரமகேந்திரபட்டணம் சென்றான்.

போர்க்களத்தில் தனித்து விடப்பட்ட திவ்யாங்கன் தன் படைப்பரிவாரங்களை அழைத்துக் கொண்டு ஆமோதபட்டணம் சென்றான். தன் தாய் தேவதத்தையிடம் நடந்ததைத் தெரிவித்தான். தாயின் ஆணைப்படி ஆமோதபட்டத்தை ஆட்சி செய்துக் கொண்டு இருந்தான்.

அக்நிதத்தை திருமணம்

வச்சிரதந்தன் ஓரே தேரில் தேவலருடன் பயணம் செய்தான். தேவலருடன் நட்புரிமையுடன் பழக ஆரம்பித்தான் மிக்க விருப்பத்துடன் பரிசுகள் பல வழங்கி அவர் மனதைக் கவர ஆரம்பித்தான். தனக்குரிய மரியாதைகளையும் அவருக்கு வழங்க ஆரம்பித்தான்.தேவலரின் நட்பையும் பெற்றான். சில நாட்கள் பல நலன்களோடும், பெருமைகளுடனும் தேவலரை நடத்தினான். தன் கொலுவில் அவருக்குச் சரியாசனம் வழங்கினான்.

தன் வளர்ப்புமகளும் சகல லட்சணங்களும் பொருந்திய பத்மினி ஜாதிப்பெண்ணான அக்நிதத்தையை அவருக்கு மணம் செய்விக்க எண்ணினான். அரக்க சம்பந்தம் ஏற்படுகின்றதே என்று மனதில் வருந்திய தேவலர் முன் அக்நிதேவன் தோன்றினான். ‘’ தேவலரே ! வருந்தாதீர். அக்நிதத்தை என் மகள். அவளை வச்சிரதந்தன் வளர்த்து வருகின்றான்’’ என உண்மையைக் கூறினான். தேவலரும் திருமணத்திற்குச் சம்மதிக்க தேவலர் அக்நிதத்தை திருமணம் சகல சம்பிரதாயங்களுடன் இனிதே நிறைவேறியது.

ஆமோத பட்டணம் செல்லல்

தேவாங்க மன்னருக்கு அக்நிதத்தையிடமாக சாலன், ஆலன், பெலன் என்ற மூன்று ஆண்மக்கள் பிறந்தனர். அவர்கள் உரிய சிறப்புகளுடன் வளர்ந்து இளங்காளைப் பருவம் எய்தினர். தேவலர் அவர்களுக்கு நெய்யும் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் நெய்த துணிகள் அனைத்தையும் அரக்கர்களுக்கு வழங்குமாறு செய்தார். ஆடைகள் பெற்ற அரக்கர்களும், வச்சிரதந்தனும் மனம் மகிழ்ந்தனர்.

ஓருநாள் தேவலர் வச்சிரதந்தனைச் சந்தித்தார். நான் உங்கள் அனைவருக்கும் ஆடைகள் நெய்ய என் வமிசத்தவரை உற்பத்தி செய்து விட்டேன். அவர்கள் மூலமாக இனி உங்களுக்குத் தொடர்ந்து ஆடைகள் கிடைக்கும். இனி நான் என் தேசம் செல்ல மகிழ்வுடன் விடை கொடுக்க வேண்டும் எனக் கேட்டார்.

வச்சிரதந்தன் தேவலரைப் பிரிவதற்கு மிகவும் வருந்தினான். அவர் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து அவரைத் தழுவித் கொண்டாடி அவரிடம் வஞ்சகமாகப் பெற்ற நந்திக் கொடியையும் திரும்பத் தந்து அளவற்ற பல பரிசுகளுடன் அவரை ஆமோத பட்டணம் செல்ல வழியனுப்பி வைத்தான். தேவலரும் தம் நகர் வந்து தம் மனைவி மக்களுடன் இனிதே வாழ்ந்து இருந்தார்.

பிற அவதாரங்களின் அடிக்கிழங்கு
(ஓரு வாழையின் கிழங்கில் இருந்து வாழைக்கன்றுகள் கிளர்ந்து எழுவதைக் கண்கூடாகக் காணுகின்றோம். தேவலர் அவதாரத்தில் இருந்து இனி அடுத்த அவதாரங்கள் எடுக்க தேவலப் பரம்பொருள் சிவபிரானுடன் சேர்ந்து நடித்த நாடகம் இனி வருவதாம்.)
தேவலர் ஓரு நாள் கைலாச பர்வதம் சென்றார். பரமேஸ்வரன் தேவலரைக் கூர்ந்து நோக்கினார். தேவலரும் சிவபிரானை வணங்கி அவரை நோக்கி நின்றார். ’’ தேவலரே ! உமக்கு நான் வழங்கிய நந்தித் துவஜத்தை அரக்கருக்குக் கொடுத்து தேவர்களின் தோல்விக்குக் காரணம் ஆனீர். ஆதலால் நீர் வித்தியாதரனாகப் பிறக்க கடவீர்’’ எனச் சாபம் இட்டார். நன்மை போய் சாபம் பெற்றார் தேவலர். ஆமோதபட்டணம் திரும்பினார். தன் சாபத்தை மனைவி மக்களிடம் கூறினார்.
உடனே தேவலரின் திருமேனி லிங்க வடிவமாக மாறியது. லிங்கத்தை மையமாக வைத்துக்கருவறை அமைத்து அவ்விடத்தை திருக்கோவிலாக மாற்றினான். திவ்யாங்கன். இராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்தை லிங்கத்திற்குச் சூட்டி தினமும் வழிபாடு செய்த திவ்யாங்கன் தம் தந்தையின் ஆணையின்படியே இராஜ்ஜியத்தைத் தர்ம பரிபாலனம் செய்து வந்தான்.
இவ்வாறே தேவலப் பரம்பொருள் வித்யாதரனாகவும், புஷ்பதந்தனாகவும், வேதாளமாகவும், வரரிஷியாகவும், தேவசாலியாகவும், தேவதாஸ் ஆகவும் அவதாரங்கள் பல எடுத்து உலகினுக்குப் பல நன்மைகள் செய்து தர்மத்தை நிலை நாட்டியது எனக் காணுகின்றோம்.
இதுவரை கண்ட செய்திகளையும், பிற அவதாரச் செய்திகளையும் தேவல உபநிஷத், பிரம்மாண்ட புராணம் உத்திரகாண்டம், ஆக்நேய புராணம் ஆகிய நூல்களிலும் பிறவற்றிலும் காணலாம்.
ya-zasnyalзаймы через интернет по всей россии