முன்னோர் வழிபாடு

முன்னோர் வழிபாடு

தேவாங்க தெய்வீக பிராமணரின்
தினசரிக் கடமைகள்
(வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி)

உலகில் அந்தணர்கள் இருபிறப்பாளர் எனப்படுகிறனர். தாய்வயிற்றில் ஒன்றும், காயத்ரி உபதேசத்தினால் இன்னொரு பிறப்பும் கொண்டாவர்கள். அதனால் அந்தணர்கள் (துவிஜன்) இருபிறப்பாளர் என்ற பெயர் பெற்றனர்.

காயத்ரி உபதேசத்துடன் பூணூல் அணிந்து அதுமுதல்
சந்தியாவந்தனம் செய்வதால் தான் அவர்கள் அந்தணத்தன்மை அடைகின்றார்கள். எனவே அந்தணர்கள் பிராக்ருத பிராமணத்துவம் கொண்டவர்கள்.

இந்தப் பிராமணத்தன்மை அந்தணர்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டது அல்ல நடுவில் சம்பாதித்துக் கொள்ளப்பட்டதாகும். அந்தணர்களுக்கு இயற்கை பிராமணத்துவம் கிடையாது. மேலும் அந்தணர் சந்தியாவந்தனம் செய்ய வில்லை எனில் பதிதன் ஆகிவிடுகின்றார் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ‘‘ பதிதோபவேத் ’’
அன்றாடம் சந்தியாவந்தனத்தின் மூலம் பிராமணத்வத்தைப் பிராமணார் பாதுகாத்துகொள்ள வேண்டும் என்பது அவர்களது விதி

பிராமணர்களுக்குக் கர்ப்ப சூத்ரத்வத்வம் உண்டு. பிறக்கும் போது சூத்திரனாகப் பிறந்து காயத்ரியினால் பிராமணத்வம் பெறுகின்றனர்.

தேவாங்கர் பிறப்பிலேயே பிராமணத்வத்துடன் பிறக்கின்றனர்.
‘’தேவர்ங்கர்க்குத் தாயின் கர்ப்பத்தினால் வரும் சூத்ரத்வம் இல்லை’’ ‘’தேவாங்கோ கர்ப்ப சூத்ரத்வம் நாஸ்திரத்வம்’’ எனவே தேவாங்கர் அப்பிராக்க்ருத பிராமணத்வம் உடையவர்.

பூலோக பிராமணர் பிரம்மனின் முகத்தில் தோன்றினர் என்பது புருஷ சூக்தம். ஆனால் பிரம்மனுக்கும் மேலான ஈசனின் மேற்குத் திசை முகமான ஸத்யோஜாத முகத்தின் நெற்றிக் கண்ணில் இருந்து தேவாங்கர் தோன்றினர். எனவே தான் நமதுகோத்ரப் பிராவரத்தில் ஸத்யோ ஜாதப்பிரவாதம் என்ற வசனம் தோன்றியது. முதன் முதலில் பூணூலுடன் தோன்றியவர்
தேவாங்கா. முதன் முதலில் ஆடையுடன் தோன்றியவர் தேவாங்கர். அவர் அவதாரம் செய்தபோது மும்மூர்த்திகளுக்கு ஆடையும் பூணூலும் கிடையாது. தேவலர் தந்த பின்தான் அனைவரும் ஆடையும் பூணூலும் பெற்றனர்.

தேவலரின் விசுவரூபத்தை ரிக் வேதம் வணிக்கின்றது. ஈரேழு பதினான்கு புவணங்களும் தேவாங்கரான் திருமேனியில் அடங்கி உள்ளன.தேவாதி தேவர்கள் எல்லோரும் அவர் திருமேனியில்
அங்கம் வகிக்கின்றனர்.

இன்னும் இதுபோன்ற தூய காரணங்களால் தேவாங்கர் தெய்வீக
பிராமணர் என்று கூறப்படுகின்றனர்.

இதனால் நமக்கு அன்றாட கடமைகளாகப் பல உண்டு.அவற்றுள்
சிலவற்றைக் காண்போம்.

தென்புலத்தார், தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றைம்புலத்
தாறோம்பல் தலை-என்ற தெய்வப் புலவர் திருவாக்கின் படி முன்னோர் என்கின்ற தென்புலத்தார், தெய்வம், விருந்தினர்,
உறவினர், தன்குடும்பம் என்ற ஐவகைக் கடமைகளைத் தேவாங்கர் செய்தல் வேண்டும்.

முதல் தன்னை பாதுகாத்தல் என்பதில் அரசுக்குச் செலுத்தும் வரியும் அடங்ரும். இவ்ஐவகைக் கடைமைகள் தேவாங்கர்க்கு உண்டு.

முன்னோர் வழிபாட்டில் முன்னோர் கடன் தீருகின்றது. தெய்வ
வழிபாட்டில் தெய்வக்கடனும் விருந்தினரைப் பாதுகாத்திலில்
விருந்தினர் கடனும் சுற்றத்தாரைப் பாதுகாத்தலினாலும் தன்குடும்பம் அரசின் வரி செலுத்துதல் இவற்றில் தான் என்பதின் கடமையும் தேவாங்கர் செய்தல் வேண்டும்.

அகந்தூய்மை, புறந்தூய்மை ;- சத்யத்தைக் கைக் கொள்வதால் அகந்தூய்மையும் நீராடி வருவதாலும் சமயச் சின்னங்களை உடம்பில் அணிவதாலும் புறத்தூமையையும் தேவாங்கன் கடைப்பிடிக்க வேண்டும்.

நீறணிதல், திலகமிடல் திருமண் அணிதல் இவை தெய்வீகத் தோற்றத்தைத் தரும். இவை அவரவர் முன்னோர் காட்டிய குடும்ப வழக்கத்தின் படி அணிதல் வேண்டும்.

நீராடும் நீரின் தூய்மைக்காக ‘’கங்கேசயமுனே சைவ கோதாவரி
சரஸ்வதீ நர்மதா சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு’’ என்ற மந்திரதைச் ஜெபித்து நீரைத் தூய்மை ஆக்கி நீராட வேண்டும். நீராடுங்கால் முன்னோர், குரு, தெய்வம் இவர்களை
எண்ணி நீராடுக.

பூணூலுடன்தான் தேவாங்கன் தோற்றம் தரல் வேண்டும்.

பிரம்மசாரி ஒற்றை முடிப் பூணூலும்,
இல்லறத்தார் மும்முடிப் பூணூலும் அணிதல் வேண்டும்.

திரிகால சந்தியா வந்தனம் செய்யவேண்டும்.
1. கண்டு, 2. கோணாமே, 3. காணாமே செய்க என்பது விதி

காலைச் சந்தியா வந்தனம் வானில் நட்சத்திரங்கள்
இருக்கும் போதே செய்ய வேண்டும்.-கண்டு

நண்பகல் சந்தியா வந்தனம் வானில் சூரியன் உச்சியில்
இருக்கும் போது செய்ய வேண்டும்.-கோணாமே

மாலைச் சந்தியா வந்தனம் வானில் நட்சத்திரங்கள் தோன்றுமுன் செய்யவேடண்டும்.-காணாமே

அமாவாசை, பௌர்ணமி மாதப்பிறப்பு திதி முதலான சம்பிரதாய
காலங்களில் முன்னோர் வழிபாடு அவசியம் செய்க.

யாகாதி காரியங்பளைச் செய்தல் ;-
ஆசாட அமாவாசையில் ஸ்ரீ சௌடேஸ்வரி ஜெயந்தி மற்றும் அமாவாசை நாட்களில் அன்னையின் வழிபாடு, சைத்ர சுத்த பஞ்சமி நாளில் ஆதி தேவாங்கர் ஜெயந்தி, நவராத்திரி தீபாவளி
முதலான புண்ய விழாக்களைக் கொண்டாடுதல்.

நமது சம்பிரதாயப்படி பங்களத்தில் கட்டுப்பட்டு இருத்தல்.

குருவை உயிரினும் மேலாகப் பேணல்

கண்ணினுள் வைத்துப் பெண்மக்களைப் போற்றுதல் என்னும் இவை போன்ற உன்னதக கடமைகள் தேவாங்கருக்கு உரியதாம்.

தேவாங்கர் முக்யமாக ஓம் கோப்பஸ்ச்ச நம என்ற மந்திரம் கூறி பசுவிற்கு உணவு தருதல் நமது முக்கிய கடமையாம். இவை விரிக்கில் பெருகும்.

முன்னோர் வழிபாடு

“ அரிது அரிது மானுட ராய்ப் பிறத்தல் அரிது ’’
- என்பது ஆன்றோர் வாக்கு. மனிதனை மிருகங்ளில் இருந்து வேறு ஆக்கி உயர்த்துவது, ஆறஆவது அறிவு எனப்படும். பகுத்தறிவு,

உண்ணுவது உறங்குவது வம்ச விருத்தி செய்வது இவற்றுடன் மிருக வாழ்வு நிறைவுற்று விடுகின்றது. மனிதன் அப்படிப்பட்டவன் அல்லன்.
மனிதனுக்குப் பலகடமைகள் உண்டு. இவைகள் வாளழ்வில் செய்தாக வேண்டிய கடைகள் ஆகும். இக்கடமைகளுள் மிக மிக முக்கியமானது, பிதுரர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப்பிராட்டி பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டினாள். சாஸ்திரங்கள் பலவும் மாதா, பிதா, குரு, தெய்வம் என எடுத்துக் கூறி உள்ளன.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளஆக்குய பெற்றோர்களை என்றும் நன்றியுடன் நினைத்து போற்றி வணங்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். அவர்கள் இல்லை எனில் நாம் இல்லை

‘‘ நன்றி மறப்பது நன்றன்று ’’

– பால் நினைந்து ஊட்டியவள் தாய் – தன் ரத்தத்தைப் பால் ஆக்கி – தாய்ப்பால் ஊட்டி வளர்த்தவள். ஆண்டவன் தாய் வடிவில் நடமாடிக் கொண்டு இருக்கின்றான்.

‘‘ எந்த நிலையிலும் தாய் வணங்கத் தக்கவன் ’’

– தாய்தந்தையை வழிபடுவது நம் கடமை. அவர்கள் உயிருடன் வாழுங்காலை உணவு, உடை, உறையுள் என இவை வழங்கி அன்புடன் போற்றுவதும் அவர்கள் உயிர்நீத்தபின் ஆண்டுதோறும் திதியில் வணங்கியும் அமாவாசை தோறும் நர்ப்பணம் செய்தும் அவர்களை வழிபட வேண்டும்.

முனிவர் ஒருவர் காட்டில் வெகுகாலமாகத்தவம் புரிந்து வந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார் மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு எச்சம் இட்டது. அது அம்முனிவர் தலைமீது விழிந்த்து.

தியானம் கலைந்து முனிவர் அக்கொக்கைக் கோபத்துடன் பார்த்தார். முனிவரின் தவ வன்மையால் கொக்கு எரிந்து சாம்பல் ஆயிற்று.

சற்றுநேரம் கழித்து முனிவர் காட்டின் அருகில் இருந்த ஒர் ஊருக்குப் பிட்சைக்குச் சென்றார் அவ்வீட்டின் முன்நின்று
‘‘ பவதி பிட்சாம் தேஹி ’’ என்று பிட்சை கேட்டார். நீண்ட நேரம் அகும் நின்று பிட்சை கேட்டுக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் கழித்து அந்த வீட்டின் தலைவி பிட்சைப்
பொருள்களுடன் பிட்சையிட வெளியில் வந்தார். அவ்வம்மையாரை முனிவர் கோபத்துடன் பார்த்தார் பிட்சை இட இவ்வளவு காலதாமதமா ? என்பது அக்கோபப் பார்வையின் பொருள்.

முனிவரின் கோபத்தை அவ்வம்மையார் லட்சியம் செய்யவில்லை. மாறாகச் சிரித்துக் கொண்டே ‘‘கொக்கென்று நினைத்தனையோ ? கொங்கணவா ! என்றார் .

அதிர்ந்து நின்றார் முனிவர். என்கோபப் பார்வையால் கொக்கு எரிந்து சாம்பல் ஆனது. மேலும் என்கோபப் இவ்வம்மையாரை ஒன்றும் செய்யவில்லை. அவர் எரிந்து சாம்பல் ஆகவில்லை ?

மாறாக்க கொக்கென்று நினைந்தனையோ ! என்று கேட்கின்றார்
கொக்கை நான் எரித்தது காட்டில். அதுயாருக்கும் தெரியாதே !
ஊரில் அதுவும் வீட்டினுள் இருக்கும் இவ்வம்மைக்கு கொக்கெரிந்த சம்பவம் எப்படித் தெரியும் ? என்று தடுமாறிக் கொண்டு இருந்தார் முனிவர்.

கொங்கணமுனிவரே ! உங்களுக்குத் தருமம் இன்னது என்று தெரியவில்லை. கடமை இன்னது என்றும் தெரியவில்லை.

நான் வீட்டின் உள்ளே ! என் தர்மத்தை என் கடமையைச் செய்து கொண்டு இருந்தேன். இல்லத்தரசியான எனக்கு என் கணவர் தான்முதல் தெய்வம். அவருக்கு உபசரணை (பணிவிடை) செய்து கொண்டு இருந்தேன்.

அவருக்கு உரிய பணிவிடை செய்து முடித்தபின் உமக்குப் பிட்சை இடவந்தேன். காலதாமதம் ஆனதால் நீங்கள் என்னைக் கோபத்துடன் பார்த்தீர்கள்.

என்னுதைய தர்மத்தை என் கடமையை நான் முரையாக விடாமல் கடைபிடித்து வருவதால் உங்கள் கோபம் என்னை எரிக்கவில்லை.

ஒவ்வொருவரும் அவர்வர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தருமங்களை செய்ய வேண்டும்.

கொங்கணமுனிவரே தருமத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அவ்வம்மையார் கூறினார்.

அம்மையே ! என்னை மன்னியுங்கள் ! எனக்குரிய தரும்ம தவம் என எண்ணியே காட்டிற்குத்தவம் புரியவந்தேன். எனக்குத் தரும்ம தெரியவில்லை என்று நீர் கூறுகின்றீர் ! அப்படிறயாயின் நீங்களே எனக்குத் தருமத்தை உபதேசம் செய்யுங்கள் ! என்று கொங்கணமுனிவர்
வேண்டினார்.

ஆனால் அந்த அன்னை ஆனவள் முனிவரே ! சிலகல தொலைவு
சென்றால் ஓர் ஊர் வரும். அங்கு தருமவியாதன் என்ற மாபெரும் ஞானி ஒருவர் இருக்கின்றார். அவர் உங்களுக்கு தருமஉபதேசம் செய்வார் என்று அவரிடம் முனிவரை அனுப்பினாள். அவ்வம்மை குறிப்பிட்ட ஊருக்குமுனிவர் சென்றார். கோவில், குளம், அக்ரகாரம், தவச்சாலை, எனபுனிதமான இடங்களில் எல்லாம் தரும வியாதனைத் தேடினார். எங்கும் தருமவியாதன் இல்லை அவ்வம்மையார் குறிப்பிட்டது இந்தவூர்தான். அதில் மாற்றமில்லை இன்னும் தேடுவோம் என்று முயன்றார். அப்போது ஒருவர், ஒருகடையைக் காட்டி அக்கடையின் உரிமையாளர் தான் தரும வியாதனைத் தேடினார். எங்கும் தருமவிதயாதன் இல்லை அவ்வம்மையார் குறிப்பிட்டது இந்தவூர்தான். அதில் தாற்றமில்லை இன்னும் தேடுவேமாம் என்று முயன்றார். அப்போது ஒருவர், ஒருகடையைக் காட்டி அக்கடையின் உரிமையாளர் மான் தரும வியாதன் என்று காட்டினார்.

முனிவரின் அதிர்ச்சிக்கு எல்லைஇல்லை. ஏன் எனில் அக்கடை மாமிசம் விற்பனை செய்யும் கடை. மாமிசம்விற்கும் ஒருவரா ? மாபெரும் ஞானி. தவத்தால் கொக்கை எரித்த ஆற்றல் கொண்ட எனக்கு மாமிசம் விற்பவரா ஞான உபதேசம் செய்யப்போகின்றார். நம்பஇயலவில்லை.

சரிபார்ப்போம். என்று அருவருப்புடன் அக்கடைத்திண்ணையில் அமர்ந்தார். சற்று நேரத்தில் விகாரமான வடிவம் கொண்ட ஏழு பெண்கள் அவ்வீட்டினுள் நுழைந்தனர்.

சற்று நேரம் கழிந்து ஏழு தெய்வப்பெண்கள் அவ்வீட்டில் இருந்து வெளியேவந்தனர். முனிவர் அவர்களை நிறுத்தி ! அம்மா நீங்கள் எல்லாம் யார் ? சற்றுமுன் இவ்வீட்டினுள் குரூபியான ஏழு பெண்கள் நுழைந்தனரே ! அவர்கள் யார் ? என்று கேட்டார்.

முனிவரே ! சற்றுமுன் குரூபியாய் நுழைந்த ஏழுபேரும் நாங்கள் தான். நங்கள் சப்தநதித்தெய்வங்கள் கங்கை , யமுனை, கோதாவிரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என்பன எங்கள் பெயர்.

உலகமக்கள் எங்களிடம் நீராடி நீராடித் மங்கள் கர்மங்களை எங்களிடம் விட்டு விடுகின்றனர். அப்பாவங்களைத் தாங்கி நாங்கள் குரூபியாக ஆனோம்.

நாங்கள் சுமந்த எல்லாப்பாவங்களையும் தருமவியாதன் என்னும் இந்த ஞானியை தரிசிப்பதால் விலக்கிவிடுகின்றோம். தினம்தினம் இவர் தரிசனத்தால் உலகமக்களின் பாவங்களைச் சுமந்துவந்து தூயவர் ஆகிச்செல்கின்றோம்.

ஞானியின்தரிசனம் சகலபாவங்களையும் தீர்க்கும். முனிவருக்கு. அதிராச்சி மேல் அதிர்ச்சி. மாமிசம் விற்கும் ஒருவர் சபதந்தி தெய்வங்களின் பாவங்களை எல்லாம் தன்தரிசனத்தால் நீக்குகின்றரா ?ஆச்சரியம்தான்.

நதித் தெய்வங்கள் சென்றபின், தரமவியாதர் வெளியில் வந்தார் ! என்று தம் உபதேசத்தைத் தொடர்ந்தார்.

முனிவரே ! வீட்டினுள் என் வயது முதிர்ந்த தாய்தந்தையர் இருக்கின்றனர். இதுவரை வீட்டினுள் என் பெற்றோருக்கு வேண்டிய சேவையை செய்து கொண்டு இருந்தேன்.

அதனால்தான் காலதாமதம். பெற்றோர் வழிபாடு என் கடமை. அதைத்தான் நான் தவறாது செய்கின்றேன். என் பணிவிடையால் என் பெற்றோர்கள் மகிழ்கின்றனர். இதுதான் நான் செய்யும் தவம். வேறு எதுவும் நான் செயாவது இல்லை.

கொங்கணவ முனிவரே ! நீர் பேசாமல் உமது ஊருக்குச் செல்லும். அங்கு உமது தாய் தந்தையர் வறுமையாலும், கிழத்தனத்தாலும் வருந்துகின்றனர். ஈன்றெடுத்த தெய்வங்களுக்கு வேண்டியன எல்லாம் செய்து அவர்களை மகிழச் செய்யுங்கள். அதன்பின் நீங்கள் கானகம் வந்துதவம் செய்யலாம். அவர்கள் வருந்தினால் உங்கள் தவம் சித்திக்காது என்று தருமவியாதன் கொங்கண முனிவருக்கு உபதேசித்து அனுப்பினார்.

தெய்வ நதிகளின் கர்மங்களையே நீக்கும் ஆற்றல் பெற்றோர்
வழிபாட்டிற்கு உண்டு எனில் அதன் பெருமையை என்ன என்று சொல்வது.

*******************

அடர்ந்த கானகத்தின் வழியே ஒரு முனிவர் சென்று கொண்டிருந்தார். பக்கங்களில் அதலபாதாளம்.அதில் ஒங்கி உயர்ந்த மரங்கள். அம்மரங்களில் பலதவமுனிவர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தனர்.

அடேயப்பா ! இப்படி ஒரு தவமா ! நீருக்குள் முழுகிச் செய்யும் அகதர்ஷன ஜெபம் செய்யத் தெரியும். பஞ்சாக்கினிகளுக்கு இடையே இருந்து செய்யும் தவம் தெரியும்.

ஆனால் இப்படி மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு செய்யும் தவம் நமக்குத் தெரியாதே ! இத்தவம் செய்வது எப்படி என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று, மரத்தில்தலைகீழாகத் தொங்கிக் தொண்டு இருந்த தவசிகளிடம் சென்று வணங்கி, ஐயன்மீர், இப்படி மரத்தில் தொங்கிக் கொண்டு செய்யும் தவத்தினை அருள்கூர்ந்து எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று வேண்டினார் அம்முனிவர்.

வழியில் வந்து மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த தவசிகளிடம் சொல்லிக்கொடுக்குமாறு கேட்டவர் வேறுயாரும் இல்லை ஈசனுக்கு நிகராக உலகினைச் சீர்பெற இருத்திய அகஸ்திய மாமுனிவர் ஆவார்.

ஐயனே ! இதுதவம் இல்லை. யமன் எங்களுக்குத் தந்த தண்டனை. இதுதான் பத்எனும் நரகம். தந்தையை, பெற்றோரை புத் எனும் நரகில் விழாமல் காப்பாற்றுவதால்தான் மகனுக்குப் ‘‘ புத்திரன் ’’ என்று பெயர்

எங்கள் குலத்தில் அகஸ்தியன் என்று ஒருவன் தோன்றி இருக்கிறான். அவன் தவத்தையே குறிக்கோளாக்க கொண்டு இருக்கின்றான். அவன் உரியகாலம்வந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றான்.

அவன் திருமணம் புரிந்து கொண்டு பிதுர்க்கடன் செய்தால் அல்லவா நாங்கள் இத்துன்பத்திலிருந்து விடுபட முடியும் என்றனர். இதன் பின்னர்தான் அகஸ்திய மாமுனிவர் லோபாமுத்திரை என்னும் அம்மையை மணந்து கொண்டு இத்மவாகனன் என்ற ஒரு மகனையும் பெற்றார். அவருடைய முன்னோரிகளும் கடைத்தேறினர் ஈசனுக்குச் சமமாக உலகினைத்தாங்கும் அகத்தியராக இருந்தால் கூட முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டும். பிதுர்க்கடன் தீர்க்க வேண்டும் என்பது மவிர்க்க முடியாத ஒன்று ஆகும்.

பாண்டு மன்னன் ஒரு காலத்துக்கானகத்தில் தன் இரு மனைவியருடன் தவம்புரிந்து கொண்டு இருந்தான். அவனை நாடி சப்தரிஷிகள் வந்தனர்.அவர்களைப் பாண்டு உபசரித்து வரவேற்று மகிழ்ந்தான். சபதரிஷிகளும் மகிழ்ந்து அவனுடன் தங்கி இருந்தனர்.

அதன்பின் சப்தரிசிகள் ஸ்வர்க்கம் புறப்பட்டுச் சென்றனர். பாண்டுவும் அவர்களுடன் புறப்புட்டுச் சென்றான்.

ஸ்வர்க்கத்தின் வாயிலில் பாண்டுவைத் தடுத்து நிறத்திட்டர். ஆண் சந்ததி இல்லாதோருக்கு ஸ்வர்க்கத்தில் இடம் இல்லை. மக்களைப் பெற்ற மகராசனுக்குத்தான். இங்கு இடம். தந்தை மாண்டபின் அவன் மகன் அவனுக்குப் பிதுர்க்கடன்களைச் செய்ய வேண்டும் ( இங்கு கடன் என்ற சொல் கடமையைக் குறிக்கும் ) இல்லை எனில் அவனுக்குச் சுவர்க்கத்தில் இடம் இல்லை என்று மறுத்துவிட்டனர்.

பாண்டவர்கள் பிறக்காத காலம். பாண்டு வருத்தத்துடன் திரும்பினான். அதன்பின்னர்தான், குந்தி மந்திரங்களின் வழி தருமன், பீமன், அர்ச்சுன்னையும் இரண்டாவது மனைவியான மத்ராதேவி நகுல, சாகதேவர்களைப் பெற்றனர் என்பது பாரதம்.

ஆண்பிள்ளைப் பேறு இல்லாதவன் தத்தபுத்ரனையாவது தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவன் தன்னைத் தத்தெடுத்தவனுக்கு முறைப்படி பிதுர்க்கடமைகளைச் செய்ய வேண்டும்.

இதுவரைப் பார்த்த வரலாறுகளால் ஒவ்வொருவனும் பிதுர்க்கடன் செய்தாக வேண்டும் என்று தெரிகின்றது

தேவாங்க குலத்தின் ஆதிகர்த்தா தேவலமா முனிவர். முதல் தேவாங்கரே அவர்தான். அவர் யாருக்கும் பிதுர்க்கடன் செய்ய வேண்டியது இல்லை. எனினும் அவர் கங்கையில் தர்ப்பனாதிகளைச் செய்தார் என்று வியாச மாமுனிவர் கூறுகின்றார்.

அமாவாசை வேவர்ங்கர்களுக்கு மிகமிக இன்றியமையாத புனிதமானநாள். அன்று தேவாங்கரின் குல தெஃவமான ஸ்ரீ செளடேஸ்வரி அவதரித்த திருநாள்

ஆடி அமாவாசை அன்று மாயா ஆசிரமத்தில் அவதாரம் செய்த அன்னை ஸ்ரீ செளடேஸ்வரி இந்நாள் எனக்கு பிறந்தநாள், தேவஆங்கரான நீர் இந்நாளில் என்னால் எனவே இந்நாளில் என்னால் அசுரரிடம் இருந்து காப்பாற்றப்பட்டிர். எனவே இந்நாள் மேவாங்கர்க்கும் பிறந்தநாள் ஆகும். இந்நாளில் என்னை நினைத்து வழிபட்டால் அஷ்டஐசுவரியங்களையும் தந்துமகிழ்வேன் என்று வரம் தந்து உள்ளாள்.

மேலும் அமாவாசை என்பது பிதுரர்களுக்கு ( முன்னேஆர் ) உரியநால். உனவேதான், நமது சம்பிரதாயத்தில் அமாவாசை நமக்கு விடுமுறை நாள்

அமாவாசை இந்துக்கள் அனைவருக்கும் சிறப்பு நாள் எனினும் நமக்கு மிகமிகச் சிறப்புநாள்.

அமாவாசை அன்று நாமு முன்னோர்களை வணங்குவதுடன் ஸ்ரீ செளடேஸ்வரி ஆலத்திற்கும் சென்று வழிபடல் வேண்டும்.

பித்ருதர்ப்பணம் என்பதும் பித்ரு பூஜை என்பதும்
ஒன்றுதான்.

தர்ப்பயாமி என்றால் திருப்தி அடையுங்கள் என்று பொருள். பித்ருக்கள், தர்ப்பணம், சிரார்த்தம் என்று சொன்னாலே பலர் இதனைத் தீட்டு என்று அசுபம் என்று எண்ணுகின்றன. இது மிக்ககொடிய பாவம் ஆகும். பல சுப காரியங்களில் சிரார்த்தம் முக்கிய இடம் பெற்று இருக்கின்றது.

திருமண முகூர்த்தத்திற்கு முன்னும், கர்ப்பாதனல், சீமந்தம், உபநயனம் ( பூணூல் அணிதல் ) என்னும் இச்சுபகாரியங்களுக்கு முன் சிரார்த்தம் செய்ய வேண்டும் ( சிரார்த்தம் முன்னோர் வழிபாடு ) செய்ய வேண்டும். இதற்கு நாந்தி சிரார்த்தம் என்று பெயர். திருமணத்தில் நடைபெறும் நாந்தி முறைமையை எமதுதேவாங்க விவாககிரியையிலும், தேவாங்க சிந்தாமணியிலும் காண்க.

இதில் தாய்வகை தந்தைவகை என்னும் இரு வகையாரையும் பூசிக்கின்றோம்.

அப்பெருமக்கள் பித்ருதேவதைகளாக இருக்கின்றனர். அவர்கள்
மணமக்களை ஆசீர்வதிக்கட்டும் என்று பொருள். மற்ற சுப காரியங்களிலும் இப்படித்தான்.

சிரார்த்தததில் திருமூர்த்திகளும் ஸ்ரீகாயத்திரி தேவியும் வழிபடப்படுகின்றனர். எனவே இப்பூசனை மிகமிகப் புனிதமானதே தவிர அசுபமானது அன்று

தினசரி ஸ்நானம் செய்யும்போதும், பிரம்ம யக்ஞத்திலும் தேவர்ப்பணம், ரிஷிதர்ப்பணம், பித்ருதர்ப்பணம் என்ற மூன்றையும் செய்ய வேண்டும்.

முப்பதுபுக்கோடி தேவர்கள் படைக்கப்பட்டது போல் பித்ரு தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளனர்.

ஓர் ஆண்டில் 96 சிரார்த்தம் செய்ய வேண்டும் என்பது மஹரிஷிகளின் கட்டளை.

சிரார்த்த வகைகள் :- அமாவாசை, மாதப்பிறப்பு மஹாளயப்பட்சம், தட்சிணாயனம், உத்திராயனம் என்னும் புண்யகாலங்களில் செய்வது நித்யம் என்று பெயர்பெறும். கிரஹண காலங்களிலும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

பெற்றோர் இறந்த திதியில் பிரதி வரிஷமும் செய்யும் சிராத்தம் ப்ரத்யாப்திக சிரார்த்தம் என்பதாம். பெற்றோர் இருந்த திதியில் முதல் ஆண்டில் செய்வது ஆப்திக சிரார்த்தம் ஆகும். இறந்த 11வது நாளில் செய்வது ஏகோதிஷ்டம் என்று பெயர் பெறும்.

தேவாங்கரான நாம் முன்னோர் உயிர்விட்டநாளில் இருந்து 11 வது நாளில் செய்து முடித்து வேண்டும். ‘‘ அன்நொந்து தின தளிகை ’’ என்று கன்னடத்தில் கூறுகின்றோம்.

11 வது நாளில் செய்வதனால்தான் இதற்கு இப்பெயர். ஆனால் நவீனத்தில் பலர் சாஸ்திரம் கற்றவர்களைப் போல் போலியாக நடித்துக் கொண்டு. 11வது நால் வியழக்கிழமை வருகின்றது ஞாயிற்றுக்கிழமை வருகின்றது என்று மனம்போனபோக்கில் கூறிக் கொள்கின்றனர். இதுதவறு.

11 வது நாள் எப்படி இருப்பினும் இந்நாளில் அக்காரியம் செய்து முடிக்கப்பட வேண்டும்.

இது மநுமுதலான மகரிஷிகளின் உறுதியானகருத்து. மநுமகரிஷி சொன்னது ஆன்மவைக்காக்கும் மருந்து ஆகும்.

புண்யதூர்த்தங்களிலும் புண்ய சேத்திரங்களிலும் சிரார்த்தம் செய்யலாம். இதற்குத் தீர்த்த சிரார்த்தம் என்றும் கயாவில் செய்வது காயாசிரார்த்தம் என்றும் பெயர்பெறும்.

இந்த நூலின் நோக்கம் தேவாங்கரான நாம் ஒவ்வொருவரும் முன்னோர் வழிபாட்டைச் சிரார்த்தத்தைச் செய்யவேண்டும். அதற்காக இங்கு மிகமிக சுருக்கி எழுதப்பட்டுள்ளது இதனை விரிவாகச் செய்ய வேண்டும் எனில் ஆச்வலாயன சூத்ரம் நன்குகற்ற தேவாங்க சாஸ்திரிகள் வழியாகச் செய்துகொள்க.

நித்ய சிரார்த்தம்

ஸ்நான காலத்தில் தேவர்களையும் ரிஷிகளையும் பித்ருக்களைம் நினைத்து வழிபடுவது.

பூணூலின் வழியாக நுனிவிரலால் கீழ்கண்ட ஐந்து தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

1. பிரும் மாதயோ யேதேவா, தான்தேவான், தர்க்கயாமி

2. ஸர்வான் தேவான் தர்ப்பயாமி

3. ஸர்வதேவகணான் தர்ப்பயாமி

4. ஸர்வ தேவகத்நி தர்ப்பயாமி

5. ஸர்வ தேவகண பத்நி தர்ப்பயாமி

இதற்கு பூணூல் வலப்புறமாக இருத்தல் வேண்டும்.

இனி பூணூலை மாலைபோல் தரித்து கண்டுவிரல் உட்கையினால் ரிஷிதர்ப்பணம் செய்க

ஸர்வான் ரிஷீம் த்ருப்த்யந்து
ஸர்வான் ரிஷீ பத்னூம் த்ருப்த்யந்து
ஸர்வான் ரிஷீபுத்ரான் திருப்த்யந்து

பூணூலை இடப்பறமாக மாற்றி அணிந்து கொண்டு

ஸர்வான் பிதுரான் திருப்தியந்து
ஸர்வான் பிதுர்த்நீம் திருப்த்யந்து
ஸர்வான் பிதுர்புத்ராந் திருப்த்யந்து

ஸுக்லாம்பரதம் கூறிக்குட்டிக்கொண்டு ஸங்கல்பம் செய்து கொண்டு செய்வது முறைமை
**********************

இனி நாம் பிரம்ம யக்ஞம் முறைமையைக் காண்போம்.

ஸ்ரார்த்தத்தில் பிரம்ம யகஞம் அவசியம் செய்ய வேண்டும். இப்பிரம்ம யக்ஞம் தேவாங்கர் அனைவருக்கும் உரிய ஆச்வலாயன சூத்ரத்தின் அடிப்படையில் எழுதப்பெறுகின்றது.

ஓம் ஸ்ரீ மாத்ரே நடஹ ! ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரியை நமஹ !
ஸ்ரீ குருப்யோநமஹா!! – என்று சொல்லி ஸ்ரீ மாத்ரே நம: என்று கூறி தாயை மனதில் நிறுத்தி மானசீகமாக வணங்கிப்பின், ஸ்ரீ பித்ருப்யோ நம! என்று தந்தையை மனதில் முன்நிறுத்தி, ஸ்ரீ குருப்யோ நம ! என்று நமது குல ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ தயானந்தபுரி மஹாஸ்வாமியை மனதில் நிறுத்தி, ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்லர்யை நம ! என்று நமது குல தெய்வத்தை மனதில் நிறுத்தி மானசீகமாக வணங்க வேண்டும்.

பின் ஆசமனீயம் செய்ய வேண்டும்
ஓம் ராமலிங்காய ஸ்வாஹா !
ஓம் செளடாம்பாய ஸ்வாஹா !
ஓம் தேவாங்காய ஸ்வாஹா !
ஓம் பரப்பிரம்ஹணே நம ; என மும்முறை ஆசமனீயம் சொல்லித் தீர்த்தம் பருகவும்

சங்கல்பம் :

சிறிது அட்சதை புஷ்பம் கையில் எடுத்துக் கொண்டு மூன்று முறை தலையில் குட்டிக் கொள்க.

ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்பஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே

புதிய பூணூல் அணிந்து கொள்க பூணூல் அணியும் மந்திரம்
ஓம் யக்ஞோப வீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதேர் யத்
ஸஹஜம் புரஸ்தாத் அயுஷ்ய மகர்யம்
பிரதீமுஞ்ச ஸீப்ரம்
யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ :!!

பழைய பூணூலை அகற்றிவிடுக ! அதற்கு மந்திரம்
ஓம் ‘‘ உபவீதம் பின்ன தந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் !
விஸ்ருஜாமிபுனர் – பிரஹ்மன் வர்ச்சசோ தீர்க்காயுஸ்துமே

மீண்டும் ஒருமுறை ஆசமனீயம்
ஓம் ராமலிங்காய ஸ்வாஹா !
ஓம் செளடாம்பாய ஸ்வாஹா !
ஓம் தேவாங்காய ஸ்வாஹா !
ஓம் புரம்முரம்மனே நம :- என 3 முறை தீர்த்தம் பருகவும். மோதிர விரலில் பவித்ரம் இட்டுக் கொள்க.

தர்பாசனத்தில் கிழக்கு நோக்கி அதர்க.

இடது கைஊயில் சிறிது அட்சதை புஷ்பமு எடுத்து வலக்கையால் மூடி வலது தொடை மீது வைத்து கீழ்க்கண்ட மந்திரங்களைக் கூறுக.

ஸங்கல்ப மந்திரம்

மமோபாத்த ஸமஸ்ததுரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அமாவஸ்யாம் புண்யதீதெள புண்யகாலே

மமருக் ஸ்யாக ஸத்யோஜாத ப்ரவிரான்வித ஆச்வலாயன சூத்ர மநூர்குல மெய்வ ப்ராம்ஹண :

பூணூலை இடப்புறமாக அணிந்துகொள்க . . . . . . . . . . கோத்ரானாம் (இங்கு அவரவர் கோத்ரம் கூறுக)
. . . . . . . . . . சர்மனாம் வஸீருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, பிரபிதாமஹானாம் . . . . . . . . . .( அவரவர் கோத்ரம் கூறுக )
கோத்ரானாம்
( அப்பா – அப்பாவின் அப்பா ( பாட்டனார் ) பாட்டனாரின் அப்பா
இவர்கள் பெயர்களைக் கூறுக )

சர்மனாம், வஸீருத்ர ஆதித்ய ஸ்வருபானாம்
அஸ்மத் பத்னீக மாதாமஹ மாது :
பிதாமஹ ; மாது ; பிரபிதா மஹானாம்
உபயவம்ச
பித்ருணாம்ச அக்ஷய்ய த்ருப்த்யார்த்தம்
அமாவாஸ்ய புண்யகாலே தர்ச கீரார்த்தம்
தீல தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே என்று கூறி, தர்ப்பை, அட்சதை புஷ்பத்தைத் தெற்குப் பக்கம் போட்டுவிட்டு பூணூலை வலது புறமாகப் போட்டுக் கொண்டு மீண்டும் ஓருமுறை ஜலத்தைத் தொட்டு சுத்தி செய்து கொள்க.

ஆச்வலாயன சூத்ர முறைப்படி பிரம்ம யக்ஞம்

பிரம்மயக்ஞம் என்றால் தேவர், ரிஷி, பிதுர்க்களை வணங்கி இவர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்தல்
தேவர்கள் ரிஷிகளுக்கு அட்சதை புஷ்பத்துடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தேவதர்ப்பணத்திற்கு நுனிவிரல்களால் தர்ப்பணம் விட வேண்டும். ( தீர்த்தம் விட வேண்டும் )
ரிஷிதர்ப்பணம் சுண்டுவிரலில் தர்ப்பணம்விட வேண்டும்.
பிதுர்தர்ப்பணம் கட்டைவிரல் (பெருவிரல்) வழி எள் வைத்துத் தர்ப்பணம் செய்க. தர்ப்பணநீர் கட்டைவிரல் வழிச் செல்ல வேண்டும்.
பிதுர்தர்ப்பணம் விடும்போது தெற்குநோக்கி அமர்ந்து செய்க.
கீழ்வரும் மந்திரங்களைச் சொல்ல வேண்டும். த்ருப்தியந்து என்று சொல்லும் போதும் தர்ப்பயாமி என்று சொல்லும் போதும் தீர்த்தங்களைவிட வேண்டும்.

“ ஓம் பூர்: புவ: ஸுவ;
தத்ச விதுர்வரேணியம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தீயோயோன ப்ரசோதயாத்
தத்ச விதுர்வரேணியம்

1. பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தீயோயோன ப்ரசோதயாத்
தச்ச விதுர்வரேணியம்

2. பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தீயோயோன ப்ரசோதயாத்
ஓம் ரிக்வேதம் தர்ப்பயாமி ஓம்

ஓம் மஹா வ்ரதம் ஓம்
ஓம் ஏஷ பந்தா ஏதத்கர்மா ஓம்
ஓம் அதா தர்ஸம் ஸம்ஹிதாயா உபநிஷத்ஓம்
ஓம் இதாம கவஞ்விதா ஓம்
ஓம் மஹாவிரதஸ்ய பஞ்ச விம்சதீம் ஸாமிதேன்ய
அதைதஸ்ய ஸமாம்நாயஸ்ய ஓம்
ஓம் உக்தானி, வைதானிகானி வ்ருஹ்யானி ஓம்
ஓம் யஜுர்வேதம் நமஸ்தர்ப்பயாமி ஓம்
ஓம் ஸாம வேதம் நமஸ் தர்ப்பயாமி ஓம்
ஓம் அதர்வண வேதம் நமஸ் தர்ப்பயாமி ஓம்
ஓம் ஸமாம் நாயஸ் ஸமாம் நாதஹ : ஓம்
ஓம் விருத்தி ராதைச்ச ஓம்
ஓம் மயரதை ஐபநலஹு சவிதம் ஓம்
ஓம் அதசிட்சாம் ப்ரயட்சயாமி ஓம்
ஓம் கெளஹு இக்மஇட்சுமா இட்சுமா ஓம்
ஓம் பஞ்ச சம்பவத் சரமயே ஓம்
ஓம் அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸ தர்மவித்ந் ஞாஸா ஓம்
ஓம் அதாதோ பரம்ம ஜிஜ்ஞாஸா ஓம்
ஓம் நாராயண நமஸ்க்ருத்ய ஓம்

1. ஓம் நமோ ப்ரம்மணே அஸ்த்வநயே நமஹ் ப்ருத்வ்யை நம ஓஷதீ த்வயஹ
நமோவாசஸ்பதயே நமோ விஷ்ணவே மஹதே கரோமி

2. ஓம் நமோ ப்ரம்மணே அஸ்த்வநயே நமஹ்
ப்ருத்வ்யை நம ஓஷதீ த்வயஹ
நமோவாசஸ்பதயே நமோ விஷ்ணவே மஹதே
கரோமி

3. ஓம் நமோ ப்ரம்மணே அஸ்த்வநயே நமஹ்
ப்ருத்வ்யை நம ஓஷதீ த்வயஹ
நமோவாசஸ்பதயே நமோ விஷ்ணவே மஹதே
கரோமி

ஏவ தேவ ரிஷி பிதுர் தர்ப்பணம் கரிஷ்யே
ஏவ தீர்த்தேண தர்ப்பணம் குர்யாத்
இப்பொழுது கை விரல்களைக் குவித்து விரல்நுனிகளில்

த்ர்ப்பணம் செய்க. விரல்நுனிகளில் நீர்விடுவது சொல்லவேண்டிய
மந்திரங்கள்

ஓம் ப்ரஜாபதீஸ் த்ருப்யது ஓம்
ஓம் பிரம்மா த்ருப்யது ஓம்
ஓம் வேதாஸ் த்ருப்யது ஓம்
ஓம் ரிஷியஸ் த்ருப்பது ஓம்
ஓம் ஸர்வாணி, சந்தாம்ஸி த்ருப்யது ஓம்
ஓம் ஓம் கார த்ருப்யது ஓம்
ஓம் வஷட் கார த்ருப்யது ஓம்
ஓம் வ்யாக்ருதஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் ஸாவித்ரி த்ருப்யது ஓம்
ஓம் யக்ஞாஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் யாவா ப்ருதிவி த்ருப் ஏதாம் ஓம்
ஓம் அந்தரிட்சம் த்ருப்யது ஓம்
ஓம் அஹோராத் ராணி த்ருப்ய்ந்து ஓம்
ஓம் ஸாங்க்யாஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் ஸித்தாஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் ஸமுத்ராஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் திரவஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் கீரீஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் சேஷத்ரஸெள யதிர வனஸ்பதி, கந்தர்வா,
அப்சரஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் நாகாஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் வயாம்சி த்ருப்தியந்து ஓம்
ஓம் காவஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் சாத்யாத் த்ருப்தியந்து ஓம்
ஓம் விப்ரஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் யட்சாஸ் த்ருப்தியந்து ஓம்
ஓம் பூதாணி த்ருப்தியந்து ஓம்
ஓம் ஏவ மந்தாணி த்ருப்தியந்து ஓம்

இதுவரை சொன்ன அனைத்தும் தேவதர்ப் பணங்கள்.

இவை செய்யும் போது பூணூல் வலப்புறமாக இருக்க வேண்டும்.

ரிஷிதர்ப்பணம்

இப்போது பூணூலை மாலையாக அணிய வேண்டும்.
ரிஷி தீர்த்தேண – சுண்டுவிரல் பக்கமாக சாய்த்துத் தீர்த்தத்தை ஊற்ற வேண்டும்.

ஓம் சதர்சினஸ் த்ருப்யந்து ஓம்
ஓம் மாத்யமா த்ருப்யந்து ஓம்
ஓம் க்ருத்சமதஸ் த்ருப்யந்து ஓம்
ஓம் வாமதேவஸ் த்ருப்யந்து ஓம்
ஓம் அத்ரி த்ருப்யந்து ஓம்
ஓம் பரத்வாஐ த்ருப்யந்து ஓம்
ஓம் வசிஷ்ட த்ருப்யந்து ஓம்
ஓம் பகாதாஸ் த்ருப்யந்து ஓம்
ஓம் பாவமானஸ் த்ருப்யந்து ஓம்
ஓம் சுத்ர சூக்தாஸ் த்ருப்யந்து
ஓம் மஹா சூக்தாஸ் த்ருப்யந்து
இதுவரை ரிஷிதீர்த்தம்
அடுத்து பூணூலை இடப்புறமாக மாற்றிக் கொள்க.

ப்த்ரு தீர்த்தேண

கட்டைவிரல் வழியாகத் தீர்த்தம் விடுவது
ஓம் சுமந்து, ஜைதினி, வைசம்பாயன, பயில, சூத்ரபாஷ்ய பாரத மஹா பாரத தர்மாச்சார்யா த்ருப்த்யந்து ஓம்

ஓம் ஜானந்தி பாஹவிதாத்ய கெளதம,
சாகல்ய பாப்ரவ்ய
மாண்டவ்ய, மாண்டூகேயாஸ்
த்ருப்த்யந்து ஓம்
ஓம் கர்க்கி வாசக்னவி த்ருப்த்யந்து ஓம்
ஓம் படபா ப்ராதீதேயீஸ் த்ருப்த்யந்து ஓம்
ஓம் சுலபா மைத்ரேயி த்ருப்த்யந்து
ஓம் அஹேஆலம் தர்ப்பயாமி
ஓம் கெளஷீதகம் தர்ப்பயாமி
ஓம் மஹா கெளஷீதகம் கர்ப்பயாமி
ஓம் பைங்கியம் தர்ப்பயாமி
ஓம் மஹா பைங்கியம் தர்ப்பயாமி
ஓம் சுயக்ஞம் தர்ப்பயாமி
ஓம் ஸாங்கியாயனம் தர்ப்பயாமி
ஓம் ஐதரேயம் தர்ப்பயாமி
ஓம் மஹாதைரேயம் தர்ப்பயாமி
ஓம் சயாகலம் தர்ப்பயாமி
ஓம் பாஷ்கலம் தர்ப்பயாமி
ஓம் சுஜாத வர்த்தம் தர்ப்பயாமி
ஓம் ஓள தவா ஹிம் தர்ப்பயாமி
ஓம் மஹதெளதவாஹிம் தர்ப்பயாமி
ஓம் செளஜாமி தர்ப்பயாமி
ஓம் செளனகம் தர்ப்பயாமி
ஓம் ஆசுவலாயனம் தர்ப்பயாமி
ஓம் யே சான்யே ஆச்சார்யாஸ்தே ஸர்வே த்ருப்த்யந்து
பின் பூணூலை வலப்புறமாக அணியவும்

ஆசமனம் செய்க

ஓம் ராமலிங்காய ஸ்வாஹ ;
ஓம் செளடாம்பாய ஸ்வாஹ ;
ஓம் தேவாங்காய ஸ்வாஹ ;
ஓம் பரப்ரம்மணே நம ; – எனக் கூறிக் கொண்டு மும்முறை
ஆசமனீய தீர்த்தம் பருகவும்.
பூணூளை இடதுபுறமாக அணியவும்

ம்ருத ப்த்ரு கபர்ஸேத்
ஓம் பித்ரூம் …………………(அவரவர் அப்பாவின் பெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் பிதா மஹாந்……………தந்தையின் தந்தை பெயர் சொல்லி ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் பிதாமஹி…………………(தந்தையின் பாட்டனார் பெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் பிரபிதா மஹி………..(தந்தையின் பாட்டியார் பெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் மாத்ரு……………(தாய் பெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் மாதா மஹான்…………….(தாயின் தந்தைபெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

ஓம் மாத்ரு பிதா மஹான்……………..(தாயின் தந்தைபெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
ஓம் மாத்ரு பிரபிதா மஹான்……….(தாயின் தாத்தாவின் அப்பா பெயர் சொல்லி)
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
பெயர் தெரியாத இடங்களில் பெயர் சொல்ல வேண்டிய இடத்தில்
அநாமதேயம் என்று கூறுக

உதாரணம் :- ஓம் மாத்ரு பிரபித மஹான்……..
அநாமதேயம் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி…..)
தூபதீபம் செய்து கற்பூரம் காட்டி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்.பின் எழுந்து நின்று
தாயேன, வாசா, மனசேந்திரியவா, புத்யாத் மனாவ ப்ரக்ருதேஸ் ஸ்வபாவா கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணேது ஸமர்ப்பயாமி எனக்கூறி நமது பிழைகளைப் பொறுத்திருளி,
நமது வேண்டுகோளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாய்
முன்னோர்களை வேண்டிக் கொள்வது

இது அவரவர் செய்ய வேண்டும் என்று சுருக்கித்தரப்படுள்ளது.

இது அமாவாசை தோறும் செய்யத் தக்கது. மற்ற நாட்களில் வரும் திதி-வருடாந்தரம் ஸ்வாமிகும்பிடல் முதலான சமயங்களிலும்
இதனையே கூறிச் செய்து கொள்ளலாம். ஓர் இரண்டுமுறை பார்த்துக்
கூறிக் கொண்டு வந்தால் பழக்கத்திற்கு வந்துவிடும்.

இதனை விரிவாகச் செய்ய ஆசைப்படும் நம்மவர்கள்

சிரார்த்த காரியங்களை விரிவான முறையில் செய்ய வேண்டும்
என்று ஆசைப்பட் டால்
‘ ஆசுவலாயன சூத்ரம் ’ நன்குகற்ற நம்குல சாஸ்திரிகளை வைத்துக் கொண்டு முறைப்படிச் செய்வது சாலச் சிறந்தது.

சிரார்தத்தில் கைக்கொள்ள வேண்டிய
நியமங்கள் சில

பெற்றோர் இறந்த மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறை இரண்டில் எதுவோ அந்த பிறையில் வரும் திதியில் சிரார்த்தம் வரும்.

- மாதம் – பட்சம் – திதி என நினைவில் கொள்க
சில சமயம் திதி இரண்டு நாட்களிலி வரும். அப்படி இருப்பின் எந்த நாளில் திதி அதிகமாகக் கூடி இருக்கின்றதோ அந்த நாளில் செய்க.
இரண்டு நாளிலும் திதி சமமாக இருப்பின் முதல்
நாளில் செய்க.

சிலசமயம் ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வரும். அதில் தோஷம் இல்லாத நாளில் செய்யலாம்.

சிலசமயம் அந்த மாதத்தில் குறிப்பிட்ட திதி இல்லை எனில் அதற்கு முந்தைய மாதம் செய்யலாம்.

திதி மறந்தால் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாமசியில் செய்யலாம். அல்லது மஹாளய அமாவாலசையில் செய்யலாம்.

சிரார்த்தத்தில் கறுப்பு எள்தான் சிறந்தது. வராஹ மூர்த்தியிடம் இருந்து தர்ப்பமும் எள்ளும் தோன்றின. அவை அரக்க ராட்சசர்களை
அருகில் வராமல் தடுக்கும்.

கர்த்தா புதுப் பூணூல் அணிய வேண்டும். அவசரம் இல்லாமல்
சிரார்த்தம் செய்ய வேண்டும். சிரார்த்த தினத்தில் கோபம் கொள்ளக்
கூடாது. அமைதியே வடிவமகா இருக்க வேண்டும். பசுஞ் சாணத்தால்
மெழுக வேண்டும்.எல்லாச் சாமான்களையும் கழுவிச் சேர்க்க வேண்டும். சிரார்த்த சமையலில் இரும்புப்பாத்திரம் கூடாது

சிரார்த்த சமையலில் சேர்க்கக் கூடியன :–

உளுந்து, கறுப்பு எள்ளு, வாழைத்தண்டு, பசுந்தயிர், பயறு, கோதுமை, பலாக்காயி, பாகற்காய், மாதுளம் பழம், மாங்கயாய்,
எலுமிச்சம்பழம், கருவேப்பிலை, வாழைப்பழம், வாழைக்காய்,
இலந்தைப்பழம், நெல்லி, திராட்சை, மிளகு, புடலங்காய், தேன்,
தெய், வெல்லச்சர்க்கரை (அஸ்கா சர்க்கரை கூடாது) பசும்பால்,
கருணைக்கிழங்கு, ஜீரகம், ஏலக்காய், அவரைக்காய் தூதுவளை,
தேங்காய், கடுகு, சர்க்கரை, வள்ளிக் கிழங்கு, கடலை, பூசணி,
விளாம்பழம்

சிராத்தத்தில் ஆகாத சமையல் பொருள்கள் :-
கொள்ளு, சுரைக்காய், கத்திரிக்காய், பெருங்காயம், துவரம்பருப்பு முதலியன.

சிரார்த்தத்தில் பயன்படுத்திய இலையைப் பசுவினுக்கு வைத்து விடுக.

வசு, ருத்ரர் ஆதித்யருக்கு ஏன் சிரார்த்த தினத்தில் வணங்குகின்றோம் எனில்
மாண்டுபோன தந்தை வசு சொரூபர்,
தந்தையின் தந்தை ருத்ர சொரூபர்,
தந்தையின் தந்தையின் தந்தை ஆதித்ய சொரூபர் என்பதை
மறக்கக் கூடாது
தேவதர்ப்பணத்தில் பூணூல் வலப்புறம்
ரிஷிதர்ப்பணத்தில் பூணூல் மலைபோல்
பித்ருதர்ப்பணத்தில் பூணூல் இடப்புறம்
இதனை மறவாது செயக
காகத்திற்குப் பிண்டம் வைக்க வேண்டும்.
காகம் அதனை எடுக்கும் வரை காத்து இருக்க வேண்டும்.
சிரார்த்த காலத்தில் கோலம் போடக் கூடாது. இறந்தவர்கள் தேவசொரூபிகள் ஆகின்றனர் என்பதை மறக்கக் கூடாது.

பங்கு பிரித்துக் கொண்ட சகோதரர்கள் ஆயின் தங்கள் தங்கள்
வீட்டில் தனித்தனியே செய்யலாம். ஒரே குடும்பத்தில் ஒன்றாக இருப்பின் தனித்தனி சிரார்த்தம் வேண்டாம்.
மூத்தவர் செய்யும் போது மற்ற சகோதரர் அருகில் இருந்தால் போதும்.

தாய் இருப்பின் சகோதரர்கள் ஒன்று சேர்ந்துதான் செய்ய வேண்டும்.

அமாவாசையில் தர்ப்பணம் அவசியம் செய்க. சிரார்த்தம் ஏழுவகை ஆனைவராக்கு இன்பம் தருகின்றது.

யாகத்தால் தேவர்களுக்கு மகிழ்ச்சி. போஜனம் வேதம் அறிந்தவர்க்குத் தந்தால் சுவர்க்கத்தில் வசிப்போருக்கு மகிழ்ச்சி. பிண்டம் தருவது எமலோகவாசிகளுக்கு மகிழ்ச்சி.அன்று அன்னதானம்
மனிதர்க்கு மகிழ்ச்சி. மிச்சம் ஆவது பிசாசுகளுக்கு மகிழ்ச்சி (இங்கு மிச்சம் என்பது இலையில் மிச்சமான எச்சில் பதார்த்தங்கள்)

விகிரான்னம் நரகத்தோர்க்கு மகிழ்ச்சி.
காகபிண்டம் (காகத்திற்கு வைக்கும் பிண்டம்) நாம் அறியாத பிதரர்களுக்கு மகிழ்ச்சியும்.

பித்ரு வர்க்கத்தின் சாபம் பெறாமல் அருள் பெறுவதற்குச் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்ய வேண்டும்.

இதன் விதிகள் விரிக்கின் பெருகும் நலமே விளைக – நன்மைகளையை பெறுக. குருவருள் பெருகுக.

சுபம் சுபம் சுபம்
ya-zasnyaluchehova.ru самый быстрый займ с плохой кредитной системой