திருக்கோவில்

திருக்கோவில்

S.நாட்டாமங்கலம் நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒரு கால கட்டத்தில் தொழில்வளம் முடக்கி, பொருளாதார ரீதியாக நம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானர்கள். அது மட்டுமின்றி பெண்மக்களுக்கு திருமணம் ஏதேனும் ஒரு காரணத்தினால் தள்ளி சென்று பெண்மக்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்த காலத்தில் ஊரில் உள்ள பெரியோர்கள் அனைவரும் கூடிப்பேசி இதற்கு ஏதேனும் ஒரு வழி வகை செய்ய வேண்டும் என்று எண்ணி, என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்த போது நம் தேவாங்க குலத்தின் முதல் பொன்மகளான ஸ்ரீ சௌடேஸ்வரித் தாயை நாம் வணங்க மறந்ததுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என எண்ணினார்.

எனவே கோவில் இல்லாத இந்த பகுதியில் தேவர் மனை சாமியை வைத்து ஒருநாள் திருவிழா கொண்டாட வேண்டும் என விரும்பினர். காலையில் சக்தி அழைப்பும், மாலையில் ஜோதி அழைப்பும் செய்து திருவிழா நடத்த எண்ணி அதற்கு ஒரு கமிட்டி அமைத்து அதன் தலைவராக திரு வெங்கட்ராமசெட்டியார் அவர்களையும், துணைத்தலைவராக திரு.பழனிசாமிசெட்டியார் அவர்களையும் உறுப்பினர்களாக ஊரில் முக்கிய பிரமுகர்களையும் ஒருங்கினைத்தனர்.

திருவிழா கொலு அம்மனாக லத்திகாரு வங்குசம் தேவர்மனை அம்மனை குகை பதியில் இருந்து ஆரவாரமாக அழைத்து வந்து மிகச்சிறப்பாக
S. நாட்டாமங்கலம் மாரியம்மன் கோவில் பின்புறமுள்ள மைதானத்தில் கொலு அமைத்து ஊர் வீரகுமாரர்களின் சங்கு சேவையுடன் அம்மன் திருவிழா அருமையான முறையில் நடைபெற்றது.

திருவிழா முடிந்த மூன்று மாதத்தில் தொழில் வளம் முன்னேறி பகுதி மக்கள் செல்வாக்குடன் வாழத்தொடங்கினர். இது மட்டுமல்லாது திருமணம் தள்ளிப்போன பெண்மக்களுக்கு வரிசையாக நல்ல வரன் அமைந்து மணவாழ்வில் இணைந்தனர். இதனால் சௌடேஸ்வரி அம்மனின் மகிகையை மக்கள் உணர்ந்து மனதார வழிபடத் தொடங்கினர்.

ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோவில் கட்ட தீர்மானித்து அதற்காக நிலம் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. அம்மனின் கருணையால் அம்மன் குழு அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு பகுதியில் ஒரு நிலம் கிடைத்தது. அந்த இடத்திற்க்கு 1001 ரூபாய் அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டது.

கோவிலுக்கான நிலத்தை வாங்கவும்,அந்த நிலத்தில் கோவில் கட்டவும் நன்கொடை வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது. முதன்முதலாக கொண்டலாம்பட்டி K.S.M.மணி அவர்களை சந்தித்த போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு பெரிய தொகையை கொடுத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். அன்றே கொண்டலாம்பட்டி K.ஜெயராம் செட்டியாரை சந்தித்தபோது அவரும் ஒரு மிக பெரிய தொகையை கொடுத்து நன்கொடைக்குச் சென்ற அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடச்செய்தனர். முதல்நாளிலேயே இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வைத்த அம்மனின் மகிமையே என்று நினைத்து அனைவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர். அந்த தொகையை வைத்து கோவிலுக்கான நிலம் வாங்கப்பட்டது. S நாட்டாமங்கலம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைய K.ஜெயராம் செட்டியார் அவர்களும், K.S.M. மணி அவர்களும், உப தலைவர் கிருஷ்ணசாமி செட்டியார் அவர்களும் மிக முக்கிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
இது போலவே இராஜீசெட்டியார் அவர்கள் கோவில் அருகில் உள்ள நிலத்தில் அம்மனின் ஆபரணங்கள், சிலை, பூஜை பொருட்கள் வைக்க இரண்டு அறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் பெங்களுரில் வசிக்கும் சுந்தரம் செட்டியார் அவர்களும் பெரிய தொகையை கொடுக்க,உள்ளுரில் உள்ள மக்களுக்கு தலைக்கட்டு வரியாக தலா ரூ.500 வசூல் செய்தும், நன்கொடையாக பெற்றும் அம்மன் திருக்கோவில் அழகான முறையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டது. வருடம் மாசி மாதம் கால்கோள் விழா செய்து வருடம் மாசி மாதம் கும்பாபிஷேகம் செய்து ஆச்சரியமாகவும், அதிசியமாகவும் பேசப்பட்டது.

நடுத்தர மக்கள் மட்டுமே வசிக்கும் நாட்டாமங்கலம் பகுதியில் கோவில் ஒரே வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டதிற்க்கு நல்ல உள்ளங்களின் ஆதரவும், அதற்கும் மேலான அம்மனின் அருளும் காரணம் என்று எண்ணி வியந்து அம்மனின் மகிமையை உணர்ந்தனர்.
http://sovetneg.ru/chto-uchest-pri-pokupke-avto-dlya-dalnix-poezdok/займы на банковскую карту по всей россии