திருமண மண்டபம்

00 01

02

01

03

00 திருமண மண்டபம் :-
S. நாட்டாமங்கலம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் ட்ரஸ்டின் துணைத்தலைவரும், பழனிசாமி ரங்கநாயகி திருமண மண்டப ட்ரஸ்டின் தலைவருமான திரு.P.பழனிசாமி செட்டியார்( ஸ்ரீ சௌடாம்பிகா ஜுவல்லர்ஸ்) அவர்களின் கொடையின் பேரில் கிடைத்ததுதான் பழனிசாமி ரங்கநாயகி திருமண மண்டபம்.
ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும், எத்தனையோ நல்ல மனம் படைத்தோரின் உதவியாலும் S. நாட்டாமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டிய பிறகு அந்த அம்மனுக்கு பூஜைகள் நடைபெறவும், திருக்கோவிலின் அன்றாட செலவுகளுக்கும், திருவிழாக்கள் நடத்தவும் நிரந்தரமான வருமானம் தேவையே? நெசவாளர்களும், நடுத்தர மக்களும் மட்டுமே உள்ள நமது ஊரில் நிரந்தரமான வருமானம் சாத்தியமா என்று எண்ணிய திரு.P.பழனிசாமி செட்டியார்( ஸ்ரீ சௌடாம்பிகா ஜுவல்லர்ஸ்) அவர்கள் இதற்காக ஏதாவது வழிவகை செய்ய வேண்டி நமது கோவிலுக்கென ஒரு திருமண மண்டபம் கட்டித்தர விரும்பினார்.
கோவில் கட்டுமானப் பணியின்போதே திருமண மண்டப கட்டுமானப் பணியும் சேர்ந்தே நடைப்பெற்றது. திருமண மண்டப கட்டுமானப் பணியின் செலவு கணக்குகள் தனியாக மேற்கொள்ளப்பட்டு அதற்க்குண்டான தொகையை வாரம் ஒருமுறை கொடுத்து உதவி கட்டுமானப் பணியினையும் அவ்வப்போது கண்கானித்து அருமையான முறையில் அமைந்திட பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார் திரு.P.பழனிசாமி செட்டியார் அவர்கள்.
சிறப்பான முறையில் கோவிலும் திருமண மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டது, இரண்டு தளங்களைக்கொண்ட இந்த மண்டபத்தின் மேல் தளத்தில் உணவு அருந்தும் மண்டபமும் அமைக்கப்பட்டது. இன்றளவும் இந்த திருமண மண்டபம் இந்த பகுதியில் ராசியான மண்டபம் எனப் பெயர்பெற்று சிறப்பான முறையில் இயங்கி வருகிறது
மண்டபம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து , கோயில் நிர்வாக செலவுகளும், மண்டப நிர்வாக செலவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றளவும் கோயில் விசேஷங்கள் சிறப்பாக நடைபெற மண்டப வருவாய் முக்கிய பங்காற்றிவருகிறது.
cardinal s4 видеорегистратор купитьсрочный займ денег на киви кошелек до зарплаты