நீலகிரி ஹெத்தை அம்மன்

Heddhaiyamman

NEl நீலகிரி ஹெத்தை அம்மனும் கைத்தறி துணியும்
நீலகிரியில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தோடர், கோத்தர் மற்றும் படுகர் இன மக்களுக்கு 400 ஆண்டுகளுக்கு முன், அதாவது கிருஷ்ணட்தேவராயர் காலம் தொட்டு கைத்தறி நெசவாளர்களுடன் தொடர்பு உள்ளது. சிறுமுகை பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து கைத்தறியில் துணி நெய்து அதனை விற்பனை செய்வதற்காக காட்டுவழியாக நடந்து சென்று நீலகிரி மலைமேல் வாழும் மக்களுக்கு வழங்கினார்கள். எவ்வளவுதான் நாகரீகம், ஆலைத்துணிகள் வந்தபொதிலும் தோடர், கோத்தர் இன மக்கள் இன்றுவரை திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
தோடர் இன மக்கள் கைத்தறி துணியை வாங்கி அதில் கைக்கோர்வை மூலம் பல விதமான வடிவங்களை ஏற்படுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். கோத்தர் இனமக்கள் கைத்தறி துணியையே தம் பிறப்பு முதல் இறப்புவரை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் படுகர் இன மக்கள் இவர்களையெல்லாம் ஒரு படி மேலேபோய் நாம் நெசவுசெய்யும் தறியையே தெய்வமாக வணங்கி கொண்டாடி வருகின்றனர்.
முதல்முறையாக சிறுமுகை கிராமத்திலுள்ள மூலத்துறையை சார்ந்த முத்தன் செட்டியார் என்பவர்தான் தலைசுமையாக துணிகளை கட்டி எடுத்து விற்பனை செய்ய மலைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. கைத்தறி துணி ஹெத்தையம்மனுக்கு தேவையெனும் காலகட்டத்தில் மூலத்துறை, ஆலாங்கொம்பு, கிச்ச்கத்தியூர், திம்மராயம்பாளையம், சிறுமுகை ஆகிய ஊர்களுக்கு விரதமிருந்து கால்னடையாகவே வந்து தங்கி, தெய்வத்திற்கு சமர்ப்பிக்க தேவையான அளவுகளில் துணிகளை நெய்து எடுத்துச் சென்று ஹெத்தையம்மனுக்கு சாத்தி மகிழ்ந்தனர்.
இங்கு வந்து தங்கி துணிகளை நெய்யச்செய்து எடுத்துச் செல்ல அதிகமான அளவில் மக்கள் வந்ததாலும், காலமாற்றம் காரணமாக செலவுகள் கூடியதாலும் அங்கேயே தறிக்கூடம் அமைத்து, இங்கிருந்து துணி நெய்பவர்களை அவர்களது ஊருக்கே அழைத்துச்சென்று ஒருவார காலம் தங்கச்செய்து துணி நெய்து இன்னும் பாரம்பரிய முறைமாறாமல் ஹெத்தையம்மனுக்கு துணியை சாற்றி பெரும் பண்டிகை கொண்டாடிவருகின்றனர்.
தற்சமயம் கோத்தகிரி பகுதியிலுள்ள பேரகணி என்ற ஊரில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும் விழாவே படுகர் இன மக்களின் பெரிய விழாவாக கருதப்படுகிறது. இந்த பண்டிகையின்போது வெவ்வேறு ஊர்களில் உள்ள படுகர் இன மக்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு காசுகட்டி(ஒண்டி ஹணா) ஹெத்தையம்மனுக்கு துணி நெய்து வழங்கும் மக்கமனையை (தறியை) வணங்கி மரியாதை செய்கிறார்கள். இது தவிர நீலகிரியில் உள்ள ஊர்களிலும் ஹெத்தையம்மன் பண்டிகையை அங்கேயே துணியை நெய்யச்செய்து அம்மனுக்கு சாற்றி மகிழ்ந்து வருகின்றனர்.
நமது சமூக மக்கள் எவ்வாறு நமது கைத்தறிக்கு துணை புரிந்த செளடேஸ்வரியம்மனை நமது குலதெய்வமாக வணங்கி வருகிறோமோ அதுபோல படுகர் இன மக்கள் ஹெத்தையம்மனை தங்களது குலதெய்வமாக வணங்கிவருகின்றனர்.

நன்றி – ராதாகிருஷ்ன்ணன். (பீனிக்ஸ் என்ற பறவை)интернет магазин модной одежды Fashionstore.bizрасчетно кассовое сервис банковских клиентов