வீரகுமாரர்கள் குழு

வீரகுமாரர்கள் குழு;

22 ஆண்டுகளுக்கு முன்னர் S.நாட்டாமங்கலம் பகுதியில் நம் குல மக்களின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் இளைஞர் நற்பணி மன்றம், வீரகுமாரர்கள் குழுவாக மாற்றப்பட்டு அதன் தலைவராக திரு சரவணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரவணன் அவர்களும் அவரது சகோதரர் நடராஜ் அவர்கள் நாட்டாமங்கலம் பகுதி இளைஞர்களுக்கு அலகு சேவை பயிற்சியைக் கொடுத்தனர். அவர்கள் பயின்ற கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழுவும் இந்த பயிற்சியில் மிக முக்கிய பங்காற்றினர். S.நாட்டாமங்கலம் பகுதி வீரகுமாரர்கள் குழு உருவானதில் கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழுவுக்கு மிக பெரிய பங்கு உள்ளது. இன்றளவும் கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழுவை தன் தாய்க்குழுவாக எண்ணி செயல்பட்டு வருகிறது. சூழ்நிலைகளின் காரணமாக தலைவர் பொரறுப்பில் இருந்த சரவணன் அவர்கள் விலகி அப்பொறுப்பை சகோதரர் நடராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார். தற்போது தலைவர் நடராஜ் அவர்களும், துணைத்தலைவர் சுப்பிரமணி அவர்களும் வீரகுமாரர்களுடன் இணைந்து தம் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதுவரை S.நாட்டாமங்கலம் பகுதியில் நடைப்பெற்ற திருவிழாக்களிலும், கும்பாபிஷேக நன்கொடை வசூலிலும் வீரகுமாரர்குழு தன் பங்களிப்பை மிக சிறப்பாக செய்து வருகிறது.

S.நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள்குழு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த தை மாத திருவிழாவின் போது அம்மன் சக்தி அழைப்பிற்கு ஏதுவாக வெள்ளி முகத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியது.

இன்றைய காலகட்டத்தில் சேலம் மாவட்ட திருவிழாக்களிலும், பொள்ளாச்சி, திருப்பூர், வதம்பச்சேரி பகுதி திருவிழாக்களிலும் இக்குழு தன் அலகு சேவையை செம்மையாக செய்து வருகிறது..

S.நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள்குழுவினரின் வீடியோபதிவு பேராசிரியர் டாக்டர் ஜிம், சைக்ஸ் என்பவரால் லண்டன் இசைக்கல்லூரி வீடியோ லைப்ரரியில் வைக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

நாட்டாமங்கலம் வீர குமாரர்கள் குழுவினரின் அலகுசேவை பயிற்சி வீடியோ பதிவு

நாட்டாமங்கலம் வீர குமாரர்கள் குழுவினரின் அலகுசேவை வீடியோ பதிவு லண்டன் பல்கலைழக வீடியோ லைப்ரரியில்…

திருப்பூர் நெசவாளர் காலனி செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நாட்டாமங்கலம் வீர குமாரர்கள் குழுவினரின் அலகுசேவை.

நாட்டாமங்கலம் வீர குமாரர்கள் குழுவினரின் அலகுசேவை வீடியோ பதிவு லண்டன் பல்கலைகழ்கத்திற்கு கொண்டுசென்ற டாக்டர்.ஜிம் சைக்ஸ் அவர்கள் அதைப் பற்றி விவரிக்கிறார்.
Black Fortress B-1 | купить видеоглазок с 5-дюймовым сенсорным экраномкредит для начинающего бизнеса

Posted in தினசரிக் கடமைகள் | Tagged | Leave a comment